160 கி.மீ வேகத்தில் சீறி பாயும் "நமோ பாரத்" ரயில் சேவை துவக்கம்! டிக்கெட் விலை இவ்வளவு கம்மியா?

டெல்லி-காஸியாபாத்-மீரட் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரேபிட்எக்ஸ் ரயில் சேவைக்காக ஷாஹிபாபாத் ஸ்டேஷன் பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது வந்தே பாரத் ரயில் தான் அதிக வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வந்தே பாரத்துக்கு போட்டியாக ஆர்ஆர்டிஎஸ் என்ற ரேபிட் ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த ரயில் வந்தே பாரத் போல சாதாரண ரயில் டிராக்கில் இல்லாமல் தனிப்பட்ட ரயில் தான் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

rrts launch

இந்நிலையில் இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவையை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்த டில்லியில் இருந்து காசியாபாத் வழியாக ரூட்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் எல்லாம் துரிதமாக நடந்து வந்தன. இந்நிலையில் இதில் முதற்கட்ட பணியாக ஷாஹிபாபாத் பகுதியில் இருந்து தூகை வரை பயணிக்க ஆர்ஆர்டிஎஸ் ரூட் தற்போது தயாராகிவிட்டது.

இன்று இந்த ரூட்ல் முதன் முதலாக ரயில் சேவையை இயக்க பிரதமர் மோடி ஷாஹிபாபாத் ரயில் நிலையம் வந்து ரயில் நிலையத்தை திறந்து விட்டதோடு ரேபிட் எக்ஸ் ரயில் சேவையும் துவக்கி வைத்தார். இந்த ரயிலுக்கு மத்திய அரசு "நமோ பாரத்" என்ற பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

rrts launch

இந்த ரயில் முதற்கட்டமாக 17 கிலோமீட்டர் மட்டுமே செயல்படும் வகையில் துவக்கப்பட்டுள்ளது. இன்று இந்த ரயில் சேவை துவக்கப்பட்டாலும் இதை பயணிகள் நாளை முதல் தான் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை ரேபிட் எக்ஸ் என குறிப்பிடுகின்றனர். இதன் லோகோவில் எக்ஸ் என்பது இந்தி மொழியில் எழுதப்பட்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயிலாகவும் இது அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஆனால் இது 160 கிலோமீட்டர் வேகத்தில் தான் இயக்கப்படும். இந்த ரயில் முழுமையான ஏசி வசதி மற்றும் பாதுகாப்பு சொகுசு அம்சங்கள் நிறைந்த ரயிலாக இருக்கிறது.

rrts launch

இந்த ரயில் 1 மணி நேரத்தில் 82 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நிறுத்தம் எல்லாம் சேர்ந்து இவ்வளவு நேரம் ஆகும். டெல்லியில் துவங்கி மீரட் பகுதியில் உள்ள மோடிபுறம் வரை இந்த ரயில் பயணிக்க உள்ளது.

இந்த முதற்கட்ட ரயில் பயணத்தின் போது ஐந்து ரயில் நிலையங்களை இந்த ரயில் கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.ஷாஹிபாபாத், காஸியாபாத், குல்தர், தூகை மற்றும் தூகை டிப்போ ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி முதல் இந்த ரயிலில் பயணிகள் பயணம் செய்ய முடியும்.

rrts launch

இந்த ரயிலில் பயணிக்க ரூபாய் 20 முதல் ரூபாய் 50 வரையிலான டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரீமியம் கிளாஸ் பெட்டியில் பயணி கேட்பதற்காக ரூபாய் 40- 100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 90 செண்டிமீட்டர் உயரம் வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலுக்காக டிக்கெட் வழங்க டிக்கெட் வெண்டிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. அது யுபிஐ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து அதன்மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ள முடியும். இதுபோக இந்த ரயிலுக்கான நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு வழங்கப்படுகிறது. அதன்மூலமும் டிக்கெட்டை பெற முடியும்.

rrts launch

தற்போது டெல்லியில் இருந்து மீரட் வரை மட்டுமே இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், இதன் வெற்றியை பொறுத்து படிப்படியாக இது இந்தியாவின் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருகருகே இருக்கும் இரு நகரங்களை இணைப்பதற்காக இந்த ரயில் பயன்படுத்தப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது இதனால் எதிர்காலத்தில் அதிகமான போக்குவரத்து வசதிகள் தேவைப்படும். முக்கியமாக பொழுது போக்குவரத்து வசதிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் தான் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கும் அதற்கு இந்த ரேபிட் எக்ஸ் ரயில் நிச்சயம் உதவும்.

Article Published On: Friday, October 20, 2023, 13:39 [IST]
English summary
Rrts pm modi inaugurates indias rapidx train named namo bharat
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X