வந்திருக்க ஆள் யார்னு தெரியாம வேலையை காட்டிய ஆட்டோ டிரைவர்! கடைசில இப்படி ஆகும்னு நெனச்சிருக்க மாட்டாரு!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் மூலம் கட்டணம் வசூல் செய்வதில்லை. அதற்கு மாறாக பயணிகளிடம் மிக அதிகப்படியான கட்டணத்தை வசூல் செய்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டு வரும் பயணிகள், அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கைள் எதுவும் எடுக்கப்பட்டதில்லை.
இதனால் ஆட்டோ டிரைவர்களின் பகல் கொள்ளையை சமூக வலை தளங்கள் மூலமாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் சமூக வலை தளங்களில் பதிவிடும் நபர்கள் பிரபலமானவர்களாக இருந்தால் மட்டுமே, மற்றவர்களின் கவனம் கிடைக்கிறது. மற்ற பதிவுகள் பத்தோடு பதினொன்றாக பலராலும் கடந்து செல்லப்படுகிறது.

இந்த சூழலில், ஆட்டோ டிரைவர் ஒருவரின் பகல் கொள்ளையால் பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். நடந்த சம்பவங்களை சமூக வலை தளம் மூலமாக அவர் வெளியிட, அந்த பதிவு தற்போது வைரல் ஆகி கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
மும்பையை சேர்ந்த நியூரல்கராஜ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருபவர் மண்டர் நடேகர். கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருக்கு இவர் சமீபத்தில் வந்திருந்தார். அப்போது வெறும் 500 மீட்டர் பயணம் செய்ததற்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் அவரிடம் 100 ரூபாயை கட்டணமாக வசூல் செய்துள்ளார்.
500 மீட்டர் என்பது அரை கிலோ மீட்டர் தொலைவுதான். இந்த தூரத்தை நடந்தே சென்று விடலாம். அப்படி இருக்கும்போது ஆட்டோ டிரைவர் 100 ரூபாயை கட்டணமாக வசூல் செய்த காரணத்தால், மண்டர் நடேகர் அதிர்ச்சியடைந்துள்ளார். எனவேதான் ட்விட்டர் மூலமாக தனது மன குமுறலை அவர் கொட்டியுள்ளார்.
மும்பையாக இருந்திருந்தால் இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மும்பையில் 100 ரூபாய் கட்டணம் என்பது சுமார் 9 கிலோ மீட்டர்களுக்கானது எனவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். மும்பை நகரில் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம்தான் வசூல் செய்யப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மண்டர் நடேகரின் இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதால், ஆட்டோ கட்டணம் தொடர்பான விவாதம் சமூக வலை தளங்களில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆனால் தவறு செய்யும் ஆட்டோ டிரைவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சொந்த வாகனம் இல்லாத அல்லது பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பவர்கள், பஸ் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த வாகனங்கள் மூலமாக அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாது. இதற்கு ஆட்டோக்கள்தான் பொருத்தமாக இருக்கும். இதன் காரணமாகவே மக்கள் ஆட்டோக்களை விரும்புகின்றனர்.
ஆனால் ஆட்டோ டிரைவர்கள், மக்களிடம் பகல் கொள்ளை நடத்துவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆட்டோக்கள் இயங்க தேவையான டீசல் மற்றும் சிஎன்ஜி விலை உயர்வை நம்மால் ஏற்று கொள்ள முடிகிறது. ஆனால் அரை கிலோ மீட்டர் பயணத்திற்கு 100 ரூபாய் கட்டணம் என்பதெல்லாம் ஏற்று கொள்ள கூடியதல்ல. நிறைய ஆட்டோ டிரைவர்கள் இப்படிதான் கட்டணம் வசூல் செய்கின்றனர் என்பது வேதனையான விஷயம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசு ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். மீட்டர் பயன்படுத்தாத அல்லது மீட்டரில் முறைகேடு செய்யும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். இல்லாவிட்டால் மக்கள் சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். இது யாருக்கும் நல்லதல்ல.
அனைவரும் தங்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்ய தொடங்கினால், சாலைகளில் குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விடும். அத்துடன் சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பது என்பது சுற்றுச்சூழலுக்கும் நல்லதல்ல. அரசு இதனை உணர்ந்து உடனடி நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.


Click it and Unblock the Notifications








