விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு

எமர்ஜென்ஸி வாகனங்களுக்கு வழி விடாமல் பயணம் செய்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களுக்கு வழி விடாதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என காவல் துறையினர் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளனர். ஹரியானா மாநிலம் குர்கான் (Gurgaon) போக்குவரத்து காவல் துறையினர்தான் தற்போது இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

மோட்டார் வாகன சட்டம், 1988-ன் செக்சன் 194E-ன் கீழ் இந்த அபராத தொகை விதிக்கப்படும் எனவும் குர்கான் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குர்கான் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் சமூக வலை தளங்கள் மூலம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ்களுக்கு எப்படி வழி விட வேண்டும்? எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

இதன்படி ஆம்புலன்ஸ்கள் வரும்போது சாலையில் பயணிக்கும் மற்ற வாகனங்கள் இடது பக்கத்திற்கு செல்ல வேண்டும் என குர்கான் போக்குவரத்து காவல் துறையினர் கூறியுள்ளனர். இதன் மூலம் ஆம்புலன்ஸ்கள் எளிதாகவும், வேகமாகவும் கடந்து செல்லும். ''உங்களின் சிறிய மாற்றம், மற்றவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்'' எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

உண்மைதான். ஆம்புலன்ஸ்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்லும்பட்சத்தில், நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்படலாம். நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதில் ஒவ்வொரு வினாடியும் முக்கியம். எனவே ஆம்புலன்ஸ்களுக்கு தாமதம் ஏற்படுத்தாமல், சரியான முறையில் வழி விடுங்கள். ஆம்புலன்களுக்கு வழி விடாமல் செல்வது குற்றச்செயல் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

ஆனால் ஒரு சில வாகன ஓட்டிகள் இன்னமும் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுவதில்லை. அத்தகைய நபர்களை கட்டுப்படுத்துவதற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற அதிரடி நடவடிக்கை உதவி செய்யும் என குர்கான் போக்குவரத்து காவல் துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட மறுத்தால், அதன் உள்ளே இருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படலாம்.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

ஒரு சில வளர்ந்த நாடுகளில் வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ்களுக்கு சரியாக வழி விடுகின்றனர். ஆனால் நமது இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு பலர் வழி விடாமல் செல்வது வேதனையான ஒரு விஷயம். ஆம்புலன்ஸ்கள் வருவது தெரிந்த உடனேயே, நாம் அனைவரும் சாலையின் இடது புறமாக சென்று விட்டால், ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்தை எளிதாக கடந்து, விரைவாக மருத்துவமனையை அடையும்.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

இந்த செய்தியின் ஆரம்பத்தில் எமர்ஜென்ஸி வாகனங்கள் என்று கூறினோம் அல்லவா? இதில், தீயணைப்பு வாகனங்களும் அடங்கும். தீயணைப்பு வாகனங்களுக்கும் நாம் உரிய முறையில் வழி விடுவது அவசியம். ஆம்புலன்ஸ்களை போன்று தீயணைப்பு வாகனங்களும் பலரின் உயிரை காப்பாற்றும் பணியில்தான் ஈடுபட்டுள்ளன.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

ஆம்புலன்ஸ்கள் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களுக்கு வழி விட மறுப்பவர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆம்புலன்ஸ்கள் பயணிப்பதில் தடை ஏற்படுத்திய நபர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தது.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

ஆம்புலன்ஸின் வழியில் தடை ஏற்படுத்தியதற்காக கார் டிரைவர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சம்பத்தன்று ஆம்புலன்ஸ் வேகமாக பயணித்து கொண்டிருந்த நிலையில், அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் ஆம்புலன்ஸிற்கு வழி விடவில்லை. மாறாக ஆம்புலன்ஸின் வழியை அடைத்தபடி வேகமாக பயணித்து கொண்டே இருந்தார்.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

ஆம்புலன்ஸின் முன் பகுதி பயணியின் இருக்கையில் அமர்ந்திருந்த நபரால் இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவின் அடிப்படையில் ஆம்புலன்ஸிற்கு வழி விடாமல் சென்ற கார் டிரைவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதுபோன்ற வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.

விதியை மீறுபவர்களுக்கு செக்... இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்... போலீஸ் அதிரடி அறிவிப்பு!

தற்போது ஆம்புலன்ஸ்களின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலமாகவும் வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன. எனவே ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடாமல் செல்பவர்கள் மீது ஆதாரங்களுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் நீங்கள் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட்டால், இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்புவதுடன், நோயாளிகளின் உயிரை காப்பாற்றவும் உதவி செய்யலாம்.

Note: Images used are for representational purpose only.

Article Published On: Friday, June 17, 2022, 17:20 [IST]
English summary
Rs 10000 fine for blocking an ambulance gurgaon traffic police
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+