தமிழன்டா எந்நாளும்.. சொன்னாலே திமிர் ஏறும்.. ரூ.12 லட்சம் செலவில் மாட்டு வண்டியை உருவாக்கிய நெசவாளர்

தமிழர் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்பதற்காக, 12 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்ட மாட்டு வண்டி ஒன்றை திருவண்ணாமலையை சேர்ந்த நெசவாளர் உருவாக்கியுள்ளார்.

தமிழர் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்பதற்காக, 12 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்ட மாட்டு வண்டி ஒன்றை திருவண்ணாமலையை சேர்ந்த நெசவாளர் உருவாக்கியுள்ளார்.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

தமிழக சாலைகளில் இன்றைய நிலையில் மாட்டு வண்டிகளை காண்பது என்பது அரிதிலும் அரிதான ஓர் விஷயம். மாட்டு வண்டிகள் அபூர்வ பொருளாக மாறி போனதற்கு, அதிநவீன வசதிகளுடன் வந்த சொகுசு கார்களும், பைக்குகளும்தான் மிக முக்கிய காரணம்.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

ஒரு காலத்தில் மாட்டு வண்டிகளால் நிரம்பியிருந்த தமிழக சாலைகளை எல்லாம் இன்று அதிநவீன சொகுசு கார்களும், பைக்குகளும் ஆக்கிரமித்து கொண்டன. அவற்றில் என்னதான் சொகுசான வசதிகள் இருந்தாலும் கூட, மாட்டு வண்டிகளில் பயணிக்கும் சுகமான அனுபவம் போல் வராது என்பதே நிதர்சனமான உண்மை.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

இன்றைய நவ நாகரீக இளைய தலைமுறையினர் மாட்டு வண்டிகளை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஆனந்தமாக அளவாவி கொண்டு, குலுங்கி குலுங்கி செல்லும் மாட்டு வண்டிகளில் பயணிக்கும் அந்த அனுபவம் அவர்களுக்கு கிடைக்குமா? என்பதும் சந்தேகமே.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

இவ்வளவு மாற்றங்கள் எல்லாம் ஏறக்குறைய கடந்த 2 தசாப்தங்களில்தான் நிகழ்ந்திருக்க கூடும். ஆனால் தமிழர்களின் பாரம்பரிய வாகனமான மாட்டு வண்டிகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்கபந்துவின் எண்ணம்.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒண்ணுபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த நெசவாளர்தான் இந்த மார்க்கபந்து. வளர்த்து ஆளாக்கிய தமிழ் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் மார்க்கபந்து அதீத பற்று கொண்டவர்.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

பிரபல இயக்குனர் ஷங்கர் படம் போல் பிரம்மாண்டமான பொருட்செலவில் தற்போது மாட்டு வண்டி ஒன்றை மார்க்கபந்து உருவாக்கியுள்ளார். இந்த மாட்டு வண்டியை தயாரிப்பதற்காக மார்க்கபந்து செலவிட்ட தொகை 12 லட்ச ரூபாய் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

நெசவாளரான மார்க்கபந்து 2.20 லட்ச ரூபாய் செலவில் 2 காங்கேயம் காளைகளை வாங்கியுள்ளார். அந்த காளைகளை பூட்டி ஓட்டுவதற்காக 8.45 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மாட்டு வண்டி ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். எஞ்சிய செலவுகளுக்காக 1.35 லட்ச ரூபாய் தேவைப்பட்டுள்ளது.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

ஒட்டுமொத்தமாக மாட்டு வண்டியை உருவாக்கி முடிக்கும்போது, 12 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. மார்க்கபந்து உருவாக்கியுள்ள மாட்டு வண்டி முழுக்க முழுக்க தேக்கு மரத்தால் ஆனது. இதில் கலைநயத்துடன் அழகிய வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

12 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டியில்தான் மார்க்கபந்து கம்பீரமாக உலா வருகிறார். அதனை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இந்த தகவல் அறிந்த சுற்று வட்டார கிராம மக்களும், கூட்டம் கூட்டமாக வந்து இந்த மாட்டு வண்டியை ஆர்வத்துடன் பார்த்து சென்று கொண்டிருக்கின்றனர்.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

மாட்டு வண்டியை உருவாக்குவதற்காக செலவழித்த 12 லட்ச ரூபாயில், அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு கார் ஒன்றை மார்க்கபந்துவால் நிச்சயம் வாங்கியிருக்க முடியும். ஆனால் மார்க்கபந்து அதனை செய்யவில்லை.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

இதுகுறித்து மார்க்கபந்து கூறுகையில், ''தமிழர்களின் பாரம்பரிய வாகனம் மாட்டு வண்டிகள்தான். மாட்டு வண்டிகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இவ்வளவு செலவு செய்து மாட்டு வண்டியை உருவாக்கினேன்'' என்றார்.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டுள்ளது.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து கொண்டிருக்கிறது. மாசுபட்ட காற்றைதான் நாம் அனைவரும் சுவாசித்து கொண்டிருக்கிறோம்.

ஒரு மாட்டு வண்டி உருவாக்க இவ்வளவு செலவா? தமிழர் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிய நெசவாளர்

இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழலில், நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நெசவாளர் மார்க்கபந்துவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் கீழே காணலாம்.

அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் மாட்டு வண்டிகளை பயன்படுத்துவது என்பது நடைமுறையில் சில சிக்கல்களை உண்டாக்கலாம். ஆனால் மாட்டு வண்டி செலவு வைக்காது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பதையெல்லாம் நிச்சயமாக மறுக்க முடியாது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

மாருதி ஆல்டோ 800 காரின் இன்ஜின் பொருத்தப்பட்ட அதிநவீன பைக், இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் மிரட்டலாக உள்ளன. இதன் முழுமையான பின்னணி உங்களுக்கு ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தலாம்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் வைபவ் பஜ்பாய். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை சுயமாக 'அசெம்பிள்' செய்வதில் வைபவ் பஜ்பாய் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே நேரத்தில் இந்திய தேசத்தின் மீதும் வைபவ் பஜ்பாய்க்கு ஈடு இணையற்ற பற்று உண்டு.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

குறிப்பாக 'கார்கில்' திரைப்படத்தை பார்த்த பிறகு, நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பதற்காக எல்லையில் பல தியாகங்களை செய்து கொண்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வைபவ் பஜ்பாய்க்கு உண்டானது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிரமப்பட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை வைபவ் பஜ்பாய் உருவாக்கியுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளின் டிசைன், கட்டுமானம் என அனைத்தையும் முழுக்க முழுக்க வைபவ் பஜ்பாயே செய்துள்ளார்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

வைபவ் பஜ்பாய் உருவாக்கியுள்ள மோட்டார் சைக்கிளுக்கு 'அமர் ஜவான்' (Amar Jawan) என பெயரிடப்பட்டுள்ளது. அமர் ஜவான் என்ற பெயரும் கூட வைபவ் பஜ்பாயின் யோசனைதான். இந்திய ராணுவத்திற்கே உரித்தான பச்சை நிறத்தில் அமர் ஜவான் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

அமர் ஜவான் மோட்டார் சைக்கிளின் நீளம் 7 அடி. மொத்த எடை சுமார் 500 கிலோ. இதன் பின் சக்கரம் மிகப்பெரியதாக உள்ளது. அமர் ஜவான் மோட்டார் சைக்கிளில் மொத்தம் 8 கியர்கள் உள்ளன. இதில், பின்னோக்கி செல்வதற்கான ரிவர்ஸ் கியர் ஆப்ஷனும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

அமர் ஜவான் மோட்டார் சைக்கிளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அதன் இன்ஜின்தான். மாருதி சுஸுகி ஆல்டோ 800 காரில் உள்ள அதே 800 சிசி, 3 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின்தான் அமர் ஜவான் மோட்டார் சைக்கிளிலும் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

இதுதவிர ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Bluetooth connectivity) ஆப்ஷன்களையும் வைபவ் பஜ்பாய் வழங்கியுள்ளார். அமர் ஜவான் மோட்டார் சைக்கிளை உருவாக்குவதற்காக 2.80 லட்ச ரூபாயை வைபவ் பஜ்பாய் செலவிட்டுள்ளார்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜி 310 ஆர் (BMW G 310 R) மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த மோட்டார் சைக்கிளின் விலை 2.99 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், பெங்களூரு).

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

இந்த வகையில் பார்த்தால், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மோட்டார் சைக்கிளை காட்டிலும் அமர் ஜவானின் விலை குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அமர் ஜவான் மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டருக்கு 22-27 கிலோ மீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

அமர் ஜவான் மோட்டார் சைக்கிளை உருவாக்கி முடிக்க வைபஜ் பஜ்பாய்க்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக படிப்பை கூட வைபவ் பஜ்பாய் விட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

ஆனால் வைபவ் பஜ்பாயின் முயற்சிக்கு, அவரது பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கும் உயரிய பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு அமர் ஜவான் மோட்டார் சைக்கிளை அர்ப்பணிப்பதாக வைபவ் பஜ்பாய் நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

ஒரு மோட்டார் சைக்கிளை முழுக்க முழுக்க சுயமாகவே உருவாக்கி, அதனை இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணித்துள்ள வைபவ் பஜ்பாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பாராட்டு மழையில் நனைந்து வரும் வைபவ் பஜ்பாயின் பின்னணி இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

India Today Social வெளியிட்டுள்ள செய்தியின்படி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் எப்படி அசெம்பிள் செய்யப்படுகின்றன? என்பதை பார்ப்பதில் இளம் வயது முதலே வைபவ் பஜ்பாய் மிகுந்த ஆர்வத்துடன்தான் இருந்து வந்துள்ளார்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

ஒரு முறை ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் பைக் வைபவ் பஜ்பாயின் கைக்கு கிடைத்தது. ஆனால் அந்த பைக் அப்போது இயங்கும் நிலையில் இல்லை. என்றாலும் வைபவ் பஜ்பாய் விடவில்லை. அவர் எடுத்த முயற்சியின் விளைவாக அந்த பைக் நன்கு இயங்கும் நிலைக்கு வந்து விட்டது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

சில ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி பொருத்தியதன் மூலமாகவே ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் இயங்கும் நிலைக்கு வந்தது. பெற்றோர் அவ்வப்போது வழங்கிய பாக்கெட் மணியில் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த தொகையில்தான் இந்த ஸ்பேர் பார்ட்ஸ்களை வைபவ் பஜ்பாய் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

இதுகுறித்து வைபவ் பஜ்பாயின் தந்தை சஞ்சீவ் கூறுகையில், ''வைபவ் பஜ்பாய்க்கு நல்ல இன்ஜினியரிங் மைண்ட் உள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் என்றால் வைபவ் பஜ்பாய்க்கு கொள்ளை பிரியம். இளம் வயது முதலே அவர் அப்படித்தான்'' என்றார்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

இந்திய ராணுவத்திற்கு என பைக் தயாரித்த வைபவ் பஜ்பாய்க்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு என தக்ஸ் என்ற அதிநவீன ரோபோக்களை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தக்ஸ் ரோபோக்கள் குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்களை இனி பார்க்கலாம்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது (Defence Research and Development Organisation-DRDO). இந்த நிறுவனமானது தமிழில் சுருக்கமாக டிஆர்டிஓ என அழைக்கப்படுகிறது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாக இந்தியாவின் டிஆர்டிஓ திகழ்கிறது. இந்திய ராணுவம் அசூர பலம் பொருந்தி காணப்படுவதற்கு டிஆர்டிஓ நிறுவனமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

இந்த சூழலில் நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் தக்ஸ் (Daksh) என்ற அதிநவீன ரோபோக்களை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. வெடிகுண்டுகளை கண்டறிந்து செயல் இழக்க செய்யும் சவாலான பணியில் ஈடுபடுத்துவதற்காகவே தக்ஸ் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

உலகின் எவ்வளவு அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு என்றாலும், தக்ஸ் ரோபோக்கள் அதனை மிக எளிதாக கண்டறிந்து விடும். அத்துடன் அந்த வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்க செய்து விடும் ஆற்றலும் தக்ஸ் ரோபோக்களுக்கு உள்ளது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

இப்படி சர்வ வல்லமை பொருந்திய ரோபோவாக திகழும் தக்ஸ், ஆர்ஓவி எனப்படும் ரிமோட்லி ஆபரேட்டட் வெய்கில் (Remotely Operated Vehicle-ROV) வகையை சேர்ந்தது. இந்த தக்ஸ் ரோபோக்களை, சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

தக்ஸ் ரோபோக்களை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் எந்நேரமும் சுற்றுப்புறத்தை நோட்டமிட்டு கொண்டே இருக்கும். தக்ஸ் ரோபோக்களில் வெடிகுண்டுகளை கையாளும் மற்றும் செயலிழக்க செய்யும் உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

வெடிகுண்டு மட்டுமின்றி ரசாயன தாக்குதல்களை உளவு பார்க்கும் ஆற்றலும் தக்ஸ் ரோபோக்களுக்கு உள்ளது. இதுதவிர தக்ஸ் ரோபோக்களில் துப்பாக்கியும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த துப்பாக்கி பல்வேறு விதங்களில் பயன் உள்ளதாக இருக்கும்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

சில சமயங்களில் கார் வெடிகுண்டு மூலம் பொதுமக்களை தாக்கும் கொடூர செயலில் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். கார் வெடிகுண்டுகளை எளிமையாக கையாள தக்ஸ் ரோபோக்களுக்கு, இந்த துப்பாக்கிகள் உதவி செய்கின்றன.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

எவ்வாறெனில், இந்த துப்பாக்கிகளின் மூலம்தான் காரின் கண்ணாடிகளை தக்ஸ் ரோபோக்கள் உடைக்கின்றன. எனவே தக்ஸ் ரோபோக்களுக்கு துப்பாக்கி இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது. அத்துடன் பூட்டப்பட்டிருக்கும் கதவுகளையும் துப்பாக்கியால் சுட்டு தகர்க்க முடியும்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

பொதுமக்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் எழும் பட்சத்தில், அந்த வாகனத்தை அங்கிருந்து இழுத்து சென்று விடக்கூடிய திறனும் தக்ஸ் ரோபோக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

தக்ஸ் ரோபோக்களால், சமதளங்களில் மட்டுமல்லாது படிக்கட்டுகளிலும் எளிதாக ஏற முடியும். அத்துடன் செங்குத்தான சரிவுகளிலும் கூட மிக எளிமையாக சென்ற வரக்கூடிய ஆற்றல் தக்ஸ் ரோபோக்களுக்கு உள்ளது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

இந்த ரோபோக்கள் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்க கூடியவை. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்து விட்டால், தக்ஸ் ரோபோக்கள் மூன்று மணி நேரம் இடைவிடாமல் செயல்படும். தக்ஸ் ரோபோக்கள் குறித்து Defence Squad வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மக்கள் தொகை அடிப்படையில் உலகின் 2வது மிகப்பெரிய நாடான இந்தியாவுக்கு நாலாபுறம் இருந்தும் அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக நமது நாட்டின் பரம எதிரியான பாகிஸ்தான் தீவிரவாதிகளினுடைய புகழிடமாக திகழ்ந்து வருகிறது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

தீவிரவாதிகளுக்கு கடுமையான பயிற்சிகளை அளிக்கும் பாகிஸ்தான் அவர்களை இந்தியாவுக்குள் அனுப்பி நாச வேலைகளை அரங்கேற்ற எந்நேரமும் துடித்து கொண்டேதான் இருக்கிறது. இதுபோன்ற தீய சக்திகளை எல்லாம் முறியடிக்க வேண்டிய கட்டாயம் இந்திய ராணுவத்திற்கு உள்ளது.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

எனவே இந்திய ராணுவத்தின் பலத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு கொண்டேதான் வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டிஆர்டிஓ நிறுவனம் உருவாக்கியதுதான் தக்ஸ் ரோபோக்கள்.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

தற்போது இந்திய ராணுவத்தில் தக்ஸ் ரோபோக்கள் சேவையாற்றி வருகின்றன. இதுதவிர இந்தியாவின் பாரா மிலிட்டரி படைகளிடமும் தக்ஸ் ரோபோக்கள் உள்ளன. இந்த சூழலில் புனே போலீஸ் படைக்கும் தக்ஸ் ரோபோக்கள் வழங்கப்படவுள்ளன.

மாருதி 800 கார் இன்ஜினுடன் இந்திய ராணுவத்திற்கு நவீன பைக்.. படிப்பை பாதியில் கைவிட்டு சாதித்த இளைஞர்

இன்னும் 6 மாத காலத்திற்குள் புனே போலீஸ் படையில் தக்ஸ் ரோபோக்கள் சேர்க்கப்படும். பின்னர் அவை புனே போலீஸ் படையினுடைய வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு (Bomb Detection and Disposal Squad) பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Picture Credit: Wiki Commons

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Rs.12 Lakh Worth Bullock Cart Manufactured By Tamilnadu Weaver. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X