ஹெல்மெட் போடாமல் ஸ்கூட்டரில் பயணித்தவருக்கு ரூ21 லட்சம் அபராதம்! ஏன் தெரியுமா?
இந்தியாவில் தற்போது வாகனங்கள் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறும் போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத விதிப்பில் தற்போது ஒரு குழப்பம் ஏற்பட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது. ரூ1 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டரில் ஹெல்மெட் இல்லாமல் போதற்காக ஒருவருக்க ரூ21 லட்சம் அரபாதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உபி மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபடும்போது ஒருவர் ஸ்கூட்டரில் ஹெல்மெட் இல்லாமல் வந்துள்ளார். அவரை மடக்கி படித்த போலீஸார் அவருக்கு அபராதம் விதிப்பதற்காக அவரிடம் விபரங்களை கேட்டுள்ளனர். அப்பொழுது அவரிடம் வாகனம் குறித்த போதிய ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கும் சேர்த்து அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இந்நிலையில் ரூ1 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டரில் ஹெல்மெட் இல்லாமல் வந்தவருக்கு அபராத செல்லானை வழங்கினர். அதை பார்த்ததும் அதன் உரிமையாளர் கடுப்பாகிவிட்டார். ஏன் என்றால் அவருக்கு ரூ20,74,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அபராத செல்லானின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பிறகு பலர் இது குறித்து கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் உ.பி மாநில போலீசார் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அதில் இவருக்கு 2 பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பிரிவிற்கு ரூ207 அபராதமாகவும், மற்றொரு பிரிவிற்கு ரூ4000 அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. இதை தவறுதலாக போலீசார் 2074000 என பதிவு செயஅதுவிட்டனர். ஆனால் உண்மையில் இவருக்கு ரூ4207 தான் அபராதம் என குறிப்பிட்டு இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தனர்.

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி டூவீலரில் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் சேதாரம் குறைவாக இருக்கும். அதன் காரணமாக மக்கள் சாலைகளில் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும்.
இது மட்டுமல்ல வாகனங்களில் பயணிக்கும் போது உங்களுக்கான ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்று, வாகனத்திற்கான புகை சான்று, ஆகிய சான்றிதழ்களை அவர்கள் கையிலேயே வைத்திருக்க வேண்டும். வாகன தணிக்கையில் போலீசார் கேட்கும் போது இந்த வாகனங்களை சமர்பிக்க வேண்டும். அல்லது தற்போது டிஜிட்டல் முறையில் பதிவில் உள்ள ஆவணங்களும் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக எம்-பரிவாகன், டிஜிலாக்கர் உள்ளிட்ட ஆப் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆதாரணமாக காட்டாலம்.
வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் செய்த கவனக்குறைவான செயல் ஒருவருக்கு ரூ21 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வைரலான நிலையில் தற்போது அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்பு உண்மை தெரிந்த நிலையில் இந்த செல்லான் மாற்றப்பட்டது. இல்லை என்றால் அவர் ரூ21 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டியது வந்திருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் செல்லும் போது நாம் கட்டாயம் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் இது போன்ற சிக்கல்களை நாம் நேரிடும். போலீசாரும் வாகன தணிக்கையில் இது போன்ற கவனக்குறைவாக இருந்தால் இது அபராதம் செலுத்துபவர்களை பெரிய அளவில் பாதிக்கும்.


Click it and Unblock the Notifications








