அப்பளமாக நொறுங்கிய ஃபெராரி கார்; வைரலாகும் வீடியோ
ரூ 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி 458 ஸ்பைடர் சூப்பர் காரை போலீசார் அப்பளம் போலே நொருக்கி காயலாங் கடைக்கு வீசியதை நம்ப முடிகிறதா? யூ.கே போலீசார் தான் இந்த செயலை செய்துள்ளனர்
நம்முரில் கார்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் சிலர் அதை தங்கள் கவுரவமாகவும், தங்களுகுக்கான மரியாதையாகவும் கருதுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் கார் வைத்திருப்பவர் தான் பண்ணையார்களாக இருந்து காலமும் இருகின்றன.

அப்பளமாக நொறுங்கிய ஃபெராரி கார்
தற்போது பலர் தங்கள் காரை பெரும் கவுரவமாக கருதுகின்றனர். கார் மீது காதல் கொண்டவர்கள் அந்த காரில் ஒரு சிறிய கீரல் விழுந்தாலும் அது தங்கள் மீது விழுந்ததாகவே எண்ணி துடிதுடித்து விடுவர்.

இப்படியிருக்கையில் ரூ 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி 458 ஸ்பைடர் சூப்பர் காரை போலீசார் அப்பளம் போலே நொருக்கி காயலாங் கடைக்கு வீசியதை நம்ப முடிகிறதா?

ஆம் இது உண்மை சம்பவமே யூ.கே போலீசார் தான் இந்த செயலை செய்துள்ளனர். அந்நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷாகித் கான். இவர். தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை வெளியேற்றியதற்காக கோர்ட்டில் நடந்த வழக்கில் ஆஜராக சென்றிருந்தார்.

அவர் தனது ரூ 3 கோடி மதிப்பிலான ஃபெராரி காரை சட்ட விரோதமாக பார்க் செய்து சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்க்கும் போது கார் காணாமல் போயிருந்தது.

கார் குறித்து ஷாகித் கான் விசாரித்த போது, போலீசார் காரை எடுத்து சென்றது. அந்த கார் முற்றிலுமாக உடைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு உதவாத நிலைக்கு மாற்றப்பட்டது கேட்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கார் முறையாக காப்பீடு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

அவர்கள் கார் அப்பளமாக நொறுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ இதோ உங்களுக்காக
இச்சம்பவம் குறித்து ஷாகித் கானிடம் கேட்டபோது : "நான் இல்லாத போது என்னிடமோ எனது சட்ட ஆலோசனை குழுவிடமோ சொல்லாமல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனது கார் காப்பீடு செய்யப்பட்டுள்ளது." என கூறினார்

எது எப்படியோ வெளியான வீடியோவை பார்த்த கார் காதலர்களுக்கு கண்ணில் தண்ணீர் வராத குறைதான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications








