அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

வாகனம் ஓட்டும்போது எந்த வகையிலும் செல்போன் பயன்படுத்த கூடாது என கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகர காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இந்த உத்தரவை காவல் துறையினர் தற்போது தீவிரமாக அமலுக்கு கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனம் ஓட்டும்போது எந்த வகையில் செல்போன் பயன்படுத்தினாலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

அல்லது ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். சில வழக்குகளில் இந்த இரண்டு தண்டனைகளும் சேர்த்தே வழங்கப்படும். வாகனம் ஓட்டும்போது ஹேண்ட்ஸ்-ஃப்ரீ டிவைஸ்களுக்கும் (Hands-free Devices) அனுமதி கிடையாது என பெங்களூர் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். போக்குவரத்து சிக்னல்களில் சிகப்பு விளக்கும் எரியும்போது நின்று கொண்டிருக்கும் சமயத்தில் கூட செல்போனை பயன்படுத்த கூடாது.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

சிக்னலில் காத்திருக்கும்போது செல்போனில் பேசினால், மற்ற வாகன ஓட்டிகளின் கவனமும் சிதறம் என இந்த அறிவிப்பிற்கு பின்னால் உள்ள காரணத்தை காவல் துறையினர் விளக்கியுள்ளனர். கார் அல்லது பைக் ஓட்டும்போது, ஹெட்போன் பயன்படுத்தலாமா? அல்லது பயன்படுத்த கூடாதா? என்பதையும் காவல் துறையினர் விளக்கியுள்ளனர்.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

வாகனம் ஓட்டும்போது ஹெட்போன்களை எந்த வகையில் பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும். ஹெட்போன்கள் மூலம் பாடல்களும் கேட்க கூடாது. வாகனம் ஓட்டும்போது ஹெட்போன் பயன்படுத்தி முதல் முறையாக சிக்கினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக சிக்குபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

கார் டிரைவர்கள் மற்றும் டூவீலர் ரைடர்கள் என இருவருக்கும் இது பொருந்தும். கார் ஓட்டினாலும் சரி அல்லது டூவீலர் ஓட்டினாலும் சரி, ஹெட்போன் மூலம் பாடல்களை கேட்க கூடாது. ஆனால் காரில் பயணம் செய்பவர்கள் மியூசிக் சிஸ்டம் மூலம் பாடல்களை கேட்கலாம். எனினும் அதன் சத்தம் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவையும் ஏற்படுத்த கூடாது. இதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

அதேபோல் கூகுள் மேப் பார்ப்பதற்காக செல்போனை கையில் பிடித்திருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர். கார் அல்லது டூவீலர் ஓட்டும்போது கூகுள் மேப் பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது. ஆனால் செல்போனை கையில் பிடித்திருக்க கூடாது. அதற்கு பதிலாக வாகனத்தில் செல்போன் ஹோல்டர் பொருத்தியிருக்க வேண்டும்.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

இந்த ஹோல்டரில் செல்போனை பொருத்தி விட்டு, கூகுள் மேப் பயன்படுத்தலாம். கார் அல்லது டூவீலர் ஓட்டும்போது செல்போனை கையில் பிடித்திருந்தால், விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் செல்போன் ஹோல்டர் இருக்க வேண்டும் என பெங்களூர் காவல் துறையினர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

தற்போது நகரங்களில் ஒரு இடத்திற்கு செல்ல யாரும், யாரிடமும் வழி கேட்டு கொண்டிருப்பதில்லை. மாறாக கூகுள் மேப் பயன்படுத்துகின்றனர். கூகுள் மேப்பை அடிக்கடி பயன்படுத்துபவர்கள், தங்களது வாகனத்தில் செல்போன் ஹோல்டரை பொருத்தி கொள்வது நல்லது. இது காவல் துறையினரின் அபராதங்களில் இருந்து மட்டுமல்லாது, விபத்தில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவதும் மிக முக்கியமான காரணமாக உள்ளது. செல்போனில் பேசும்போது, கவனம் சிதறி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே வாகனம் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம். இது உங்களுக்கு மட்டுமின்றி, உங்களுடன் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் நன்மை பயக்கும்.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

ஏனெனில் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுபவருக்கு கவன சிதறல் ஏற்பட்டால், அதன் காரணமாக நடைபெறும் விபத்தில் மற்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். எனவேதான் மேற்கண்ட விதிமுறைகளை வரும் நாட்களில் மிகவும் தீவிரமாக அமல்படுத்துவதற்கு பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அபராதம் ரொம்ப அதிகம்... இனி சிக்னலில் நிற்கும்போது தப்பி தவறி கூட இதை செஞ்சராதீங்க... என்னனு தெரியுமா?

இதன் மூலம் பெங்களூர் மாநகரில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என காவல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர். இதனை பெங்களூர் மாநகர மக்களுக்கான அறிவிப்பாக மட்டும் சுருக்கி விட வேண்டாம். வாகனம் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தாமல் இருப்பது அனைவருக்கும் நல்லது. எனவே இந்த விதிமுறைகளை சுய கட்டுப்பாடுகள் உடன் அனைவருமே பின்பற்றலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rs 5000 fine for using mobile phone while stationary at traffic signal
Story first published: Tuesday, October 5, 2021, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X