இப்படி ஒரு அதிகாரி ஒவ்வொரு ஊர்லயும் இருந்தா போதும் அரசு பஸ் எல்லாம் டாப் டக்கராகிடும்!

பயணிகள் பயணிக்க மிக மோசமான நிலையில் பாதுகாப்பே இல்லாமல் இயங்கிய அரசு பஸ்சின் தகுதி சான்றை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர். அரசு பஸ் மீது தொடர்ந்து எழுந்த புகாரால் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களையும் இணைக்கும் வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்படியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இன்றி மிக மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு இருக்கிறது.

Pollachi Govt Bus Seized

இதை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது மிக மோசமான நிலையில் உள்ள அரசு பஸ்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவும். அப்பொழுது எல்லாம் மக்கள் மத்தியில் அரசு இந்த அரசு பஸ் விஷயத்தில் மிக மெத்தனமாக நடந்து கொள்கிறது என்ற எண்ணம் மற்றும் பேச்சு அதிகமாக இருக்கும்.

இப்படியாக பொள்ளாச்சியில் இருந்து வாளவாடி பகுதிக்கு அரசு பஸ் ஒன்று இயங்கி வந்தது. வழித்தட எண் 41 என்ற பெயரில் இயக்கப்பட்டு வந்த இந்த அரசு பஸ் போதுமான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்த பஸ் மிக மோசமான நிலையில் இருந்ததால் இதில் பயணித்த பயணிகள் எல்லாம் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மக்கள் பலர் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் இந்த அரசு பஸ் குறித்து புகார் அளித்தனர். இதை எடுத்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் உடுமலை ரோட்டில் வந்த இந்த பஸ்ஸை நிறுத்தினார். இந்த பஸ்ஸில் அதிகாரிகள் ஏறி ஆய்வு செய்தனர்.

அப்பொழுது மழைக்காலத்தில் பஸ் உள்ளே மழை நீர் ஒழுகுவது, பயணிகள் அமரும் இருக்கை மிக மோசமாக இருப்பது, ஜன்னல் பகுதியில் பொருத்தப்பட்ட கம்பிகள் பராமரிப்பின்றி மிக மோசமாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தது, ஆகியவற்றை போக்குவரத்து அதிகாரிகள் கண்டனர். இதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் டிரைவரிடம் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்ஸை ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டனர். அதன்படி பயணிகள் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிடப்பட்ட பெண் இந்த பஸ் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இந்த பஸ் ஃபிட்னஸ் சரியில்லை என ஜப்தி செய்யப்பட்டது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பஸ்களும் ஒவ்வொரு ஆண்டும் தகுதி சான்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்று வழங்கப்படும். இது போக ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த பஸ்கள் எல்லாம் ஆய்வு செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்த பஸ் குறித்து பொதுமக்கள் தரப்பிலிருந்து பெறப்பட்ட புகாரை அடிப்படையாகக் கொண்டு இதில் சோதனை நடத்தினோம். அதில் பஸ் மிக மோசமான நிலையில் இருப்பது தகுதியே வந்ததால் தகுதி சான்றை தற்போது ரத்து செய்துள்ளோம். இந்த பஸ் உரிய பராமரிப்பு பணிக்கு உட்படுத்தப்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் போதிய பராமரிப்புடன் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் பஸ் விபத்தில் சிக்காமல் பயணிகள் உயிர் பாதுகாப்புடன் பயணம் செய்ய முடியும். இந்த நடவடிக்கையை தொடர்ந்து அரசு பஸ்சில் மீது எடுப்போம் தகுதி இல்லாத பஸ்கள் என் தகுதி சான்றுகள் ரத்து செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொள்ளாச்சி மட்டுமல்ல தமிழக முழுவதும் இயங்கும் பல அரசு டவுண் பஸ்கள் இப்படியான மோசமான நிலையில் தான் இருக்கிறது. இந்த பஸ்களில் பயணம் செய்வது பயணிகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இதனால் அரசு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அரசு பஸ்கள் மீது ஆய்வுகள் நடத்தி தகுதியில்லாத பஸ்களுக்கு தகுதி சான்றை ரத்து செய்ய வேண்டும்.

Note: Images are representative purpose only.

More from DriveSpark

Article Published On: Monday, August 7, 2023, 14:07 [IST]
English summary
Rto confiscates pollachi government town bus due to inadequate maintenance
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+