ரூ2 கோடிக்கு காரை வாங்கிட்டு ரூ15 லட்சத்தை ஈஸியாக ஏமாற்றிய ஆசாமி! இது எப்படி நடந்தது தெரியுமா?

கார் வாங்குபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்பது மோட்டார் வாகன சட்டம். இந்தியாவில் காஸ்ட்லியான கார்களுக்கு அதிகமாக வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் காஸ்ட்லியான கார் வாங்கிய ஒருவர் வரியை குறைப்பதற்காக ஃபிராடு வேலையில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது. இதை இவர் எப்படி செய்தார். இதனால் இவருக்கு வரி எவ்வளவு குறைந்தது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் நிஹால் அகமது. இவர் கடந்த 2017ம் ஆண்டு மெர்சிடீஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜி 63 என்ற காரை வாங்கியுள்ளார். இந்த கார் ரூ2.5 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை வாங்கியவர் அதற்கான தற்காலிக பதிவெண்ணை மட்டுமே பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்த காரை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார்.

RTO Scam in Tax

அதே ஊரை சேர்ந்த நிரஜ் ஷார்மா என்பவருக்கு இந்த காரை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்பொழுது நீரஜ் ஷர்மா அந்த காரின் ஆவணங்களை பார்க்கும் போது அது மெர்சிடீஸ் ஜிஎஸ்ஏ 200 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த கார் மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜி 63 கார் ஆகும்.

இதனால் குழப்பம் வந்து போலியான ஆவணங்களை தருகிறார்களா என அந்த வாகனத்தின் இன்ஜின் மற்றும் சேஸிஸ் நம்பரை செக் செய்துள்ளார். அது சரியாக இருக்கிறது.அதன் பின்னர் அவர் இது குறித்து போக்குவரத்து துறை அலுவலகத்திடம் புகார் அளித்தார். அவர் வந்து விசாரித்த போது வாகனம் பதிவு செய்யும் போது செலுத்த வேண்டிய வரியை குறைக்க இப்படியான ஃபிராடு வேலை நடத்திருப்பது தெரியவந்தது.

RTO Scam in Tax

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜி63 கார் ரூ2 .5கோடிக்கு விற்பனையாகிறது. இதற்கு பதிவு கட்டணம் மட்டும் ரூ20-22 லட்சம் செலுத்த வேண்டியது வரும். ஆனால் மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 200 காருக்கு பதிவு கட்டணம் ரூ5-6 லட்சம் தான் செலுத்த வேண்டும். இதனால் இந்த பதிவு செலவை குறைக்க இந்த ஃபிராடு வேலை நடத்திருப்பது தெரியவந்தது.

இந்த ஃபிராடு வேலையில் மங்களூரு போக்குவரத்துதுறை அதிகாரிகளும் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன்பின்னர் இந்த பதிவு சான்றிதழை போக்குவரத்து துறை பிளாக் லிஸ்ட் செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டு குறிப்பிட்ட பதிவு ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

RTO Scam in Tax

இந்த சம்பவம் போக்குவரத்து துறையில் எவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கிறது என்பதை காட்டுவதாக உள்ளது. இந்த ஒரு கார் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை வாகனங்கள் இது போன்று போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ப தகவல் தெரியவில்லை. இது தெரியவந்தால் மிகப்பெரிய வரி முறைகேடு நடந்ததா என்பது வெளிச்சத்திற்கு வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே தகவல் பகிர்வு இல்லாமல் இருக்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட இன்ஜின் நம்பர், சேஸிஸ் நம்பர் குறிப்பிட்ட வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட தகவலை ஆன்லைன் மூலம் அரசுக்கு வழங்கினால் இது போன்ற முறைகேடுகளை சுலபமாக தவிர்க்க முடியும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Via -daijiworld

More from DriveSpark

Article Published On: Friday, June 27, 2025, 18:30 [IST]
English summary
Rto scam in tax luxury car identity swap to dodge crores
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X