காஸ்ட்லியான கார் மீது மோதிய சரக்கு வண்டி! உள்ள இருந்தது அவரா! கீழே இறங்கியதும் எல்லாரும் வாயடைச்சு போய்ட்டாங்க
இந்தியாவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால், தினந்தோறும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்த தவறுவதால், உயிரிழப்புகளையும், படுகாயங்களையும் சந்திக்க நேரிடுகிறது.
சாலை விபத்துக்களை பொறுத்தவரையில், சாமானியர்கள், பிரபலங்கள் என யாரும் விதிவிலக்கு அல்ல. இந்த வரிசையில் பிரபலமான நபர் ஒருவர் தற்போது சாலை விபத்து ஒன்றில் சிக்கி, காயம் அடைந்துள்ளார். தொலைக்காட்சி நடிகை ரூபினா திலக்கை (Rubina Dilaik) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

மும்பை நகரில் எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, டிராஃபிக் சிக்னல் ஒன்றில் ரூபினா திலக் காத்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டாடா யோதா (Tata Yodha) சரக்கு வாகனம் அவரது கார் மீது மோதியது. இதன் காரணமாக ரூபினா திலக்கிற்கு காயம் ஏற்பட்டது.
எனவே உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தின் புகைப்படங்களை ரூபினா திலக்கின் கணவரும், நடிகருமான அபினவ் சுக்லா பகிர்ந்துள்ளார். இதில், டாடா யோதா சரக்கு வாகனத்தின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் எம்ஜி க்ளோஸ்ட்டர் காரின் பின் பகுதிக்கு அவ்வளவாக சேதம் ஏற்படவில்லை.

இந்த விபத்து தொடர்பாக ரூபினா திலக்கும் சமூக வலை தளங்களில் பேசியுள்ளார். முதுகு மற்றும் தலைப்பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக ரூபினா திலக் கூறியுள்ளார். ஆனால் மருத்துவ சோதனைகளுக்கு பிறகு அனைத்தும் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என நாம் நம்பலாம்.
எனினும் டாடா யோதா சரக்கு வாகனத்தின் டிரைவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக ரூபினா திலக் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னைக்கு 2 விஷயங்கள் காரணமாக இருக்கலாம். அதாவது டாடா யோதா சரக்கு வாகனத்தின் டிரைவர் செல்போனில் பேசி கொண்டே வந்ததாக கூறப்படுகிறது. எனவேதான் அவர் திடீரென கார் மீது மோதியதாக தெரிகிறது.
அதேபோல் ரூபினா திலக் சீட் பெல்ட் அணியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீட் பெல்ட் அணியாத காரணத்தால், திடீரென கார் குலுங்கியதும், அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். முதலில் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவதை அனைவரும் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற விபத்துக்களில் சிக்க நேரிடும்.
அத்துடன் காரில் பயணிக்கும் அனைவரும் முறையாக சீட் பெல்ட் அணிய வேண்டும். முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என ஒரு சிலர் நினைக்கின்றனர். ஆனால் இது தவறு. காரில் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தாலும், சீட் பெல்ட் அணிந்து கொள்வதுதான் நன்மை பயக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
இந்த விபத்தில் சிக்கிய எம்ஜி க்ளோஸ்டர் மிகவும் விலை (Price) உயர்ந்த கார்களில் ஒன்றாகும். தற்போதைய நிலையில் எம்ஜி க்ளோஸ்டர் காரின் ஆரம்ப விலையே 32.60 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 43.08 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்தாவது, வாகனங்களுக்கு சிறிய அளவில் சேதம் மற்றும் சிறிய அளவிலான காயங்களுடன் முடிந்து விட்டது. ஆனால் ஒரு சில சாலை விபத்துக்களில், வாகனங்களுக்கு பயங்கரமான சேதம் மற்றும் உயிரிழப்புகள் என பின் விளைவுகள் கடுமையாக உள்ளன. எனவே வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள்.
இதற்கிடையே விபத்தில் காயமடைந்த ரூபினா திலக் காரை விட்டு கீழே இறங்கியபோது, அவரை காண பலர் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சமயங்களில் பொதுமக்களாகிய நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சாலை விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.
எனவே யாராக இருந்தாலும், அவர்களுக்கு முதலில் மருத்துவ சிகிச்சைதான் அவசியம். பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக மருத்துவமனை சென்று சேர்வதற்கு நாம் உதவி செய்ய வேண்டுமே தவிர, கூட்டத்தை கூட்டி கொண்டு இடையூறு ஏற்படுத்த கூடாது. இதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட்டால், விபத்துக்களில் சிக்கிய பலரின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும்.


Click it and Unblock the Notifications