கண்ட நேரத்தில் எல்லாம் தூங்க முடியாது... ரயிலில் தூங்குவதற்கு உள்ள ரூல்ஸ் பத்தி தெரியுமா?
ரயில் பயணத்தில் பயணிகள் எப்பொழுது பெர்த்களை பயன்படுத்தலாம் என விதிமுறைகள் உள்ளது. இது குறித்த தெளிவான விளக்கத்தைக் காணலாம் வாருங்கள்.

ரயில் பயணம் என்பது ஒவ்வொரு மனிதனிற்கும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும். குறைந்த விலையில் சொகுசான பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். நீண்ட தூரமாகப் பயணிக்கும் போது சொகுசாகப் படுத்துத் தூங்கிக்கொண்டே ஒரு போக்குவரத்தில் பயணிக்க முடியும் என்றால் அது ரயில் தான்.

பொதுவாக ரயில்களில் படுத்துத் தூங்க பெர்த்கள் வழங்கப்படும் ஒரு பெட்டியில் 8 சீட் கொண்ட பிரிவாக மொத்தம் 9 பரிவுகள் இருக்கும் 8 சீட்களில் 2 கீழ் படுக்கை, 2 நடு படுக்கை, 2 மேல் படுக்கை, பக்கவாட்டில் உள்ள 2 சீட்களில் ஒன்று கீழ் மற்றொன்று மேல் என பெர்த்கள் வழங்கப்படும்.

பயணிகள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பெர்த்களில் படுத்துத் தூங்கிக்கொண்டே பயணம் செய்யலாம். ஆனால் ரயிலில் பயணம் செய்யும் பலர் சந்திக்கும் பிரச்சனை எவ்வளவு நேரம் படுத்துக்கொண்டே பயணம் செய்யலாம் என்பது தான் இருக்கிறது.

அதாவது லோயர் பெர்த் என்பது பயணிகள் அமர்ந்து பயணம் செய்யும் போது 6 பேருக்கும் சேர்ந்து 2 கீழ் பெர்த்கள் கொடுக்கப்படும். அவர்கள் சாய்ந்திருக்கும் பகுதியைத் தூக்கி சங்கிலியில் மாட்டினால் நடு பெர்த் கிடைக்கும்.

இந்த சிஸ்டத்தில் பிரச்சனை என்பது கீழ் பெர்த் ஒதுக்கப்பட்ட ஒரு பயணி பயண நேரத்தில் மற்ற யாரையும் அமரவிடாமல் இவர் படுத்துக்கொள்ளும்போது சிக்கல் ஏற்படுகிறது. அதே போல மிடில் பெர்த் ஒதுக்கப்பட்ட பயணி மிடில் பெர்த்தில் படுத்துக்கொண்டால் கீழ் பெர்த்தில் யாரும் அமர முடியாது.

இப்படியாகச் சிக்கல் வருவதால் ரயில்வே நிர்வாகம் எந்த நேரத்தில் பயணிகள் தூங்க வேண்டும் என ஒரு விதிமுறை ஒன்றை வகுத்துள்ளது. அதன் படி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பெர்த்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். மற்ற நேரங்களில் சீட்டிங்கிற்கு தான் முன்னுரிமை.

அப்படி என்றால் நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் போது நேரம் இரவு 9 மணியைத் தாண்டிவிட்டால் நீங்கள் அமர்ந்து செல்லும் பெர்த்தை கீழ் பெர்த் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அவர் கேட்டால் அவருக்கு பெர்த்தாக பயன்படுத்தக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் அவரவர் பெர்த்களுக்கு செல்லாம்.

அதே போலக் காலை 6 மணியைத் தாண்டியதும் மிடில் பெர்த்தில் பயணி படுத்திருப்பது மற்றவர்களுக்கு அசௌகரியமாக இருந்தால் அவர் அந்த பெர்த்தை விட்டு இறங்கி அமர்ந்து பயணிக்க வேண்டும். இது சைடு அப்பர் மற்றும் லோயர் சீட்களுக்கும் பொருந்தும்,

சைடு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டவர்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தனது சீட் எனக் கீழ் பெர்த்தை உரிமை கொண்டாடமுடியாது. ஆனால் அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டவர் எப்பொழுதுவேண்டுமானாலும் தனது பெர்த்தில் பகலில் வேண்டுமானாலும் படுத்துத் தூங்கிக்கொள்ளலாம்.

அதே போலப் பயணிகள் தாங்கள் கொண்டு வந்த லக்கேஜ்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெர்த்களில் வைத்துக்கொள்ளலாம். அல்லது கீழ் பெர்த்திற்கு கீழே உள்ள பகுதியில் வைத்துக்கொள்ளலாம். மேல் பெர்த்தில் பொருட்களை வைக்கக் கூடாது.அது மற்றவருக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் என்பதால் அதற்குத் தடை இருக்கிறது.

இந்த விதிமுறைகள் எல்லாம் பயணிகளுக்குள் பிரச்சனை ஏற்படும் போதே டிக்கெட் பரிசோதகர்களால் அமல்படுத்தப்படும். ஒருவர் தனக்கான உரிமையை மற்றவர் பறிப்பதாக டிக்கெட் பரிசோதகரிடம் புகார் வந்தால் மட்டுமே அவர் வந்து சரி செய்வார் சக பயணிகள் விட்டுக்கொடுத்துச் சென்றால் இந்த விதிமுறைகள் ஒரு பொருட்டு அல்ல. பயணிகளின் சௌகரியமே முக்கியம்.


Click it and Unblock the Notifications








