புல்லட் ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கிய நெட்டிசன்: ராயல் என்பீல்டு குறித்து பரவிய பொய்யான தகவல்...!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார் சைக்கிள் குறித்த பொய்யான தகவலை யுடியூபில் பரப்பி, அதன் ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கியுள்ளார் நெட்டிசன் ஒருவர். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

புல்லட் ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கிய நெட்டிசன்: ராயல் என்பீல்டு குறித்து பரவிய பொய்யான வீடியோ...!

பாரம்பரியமிக்க மாடல் மோட்டார்சைக்கிளை தயாரித்து வரும் ராயல் என்பீல்டு நிறுவனம், தனது புல்லட் 350 மாடலில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது வெளியாகிவரும் மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டத்தை இணைத்து வருகிறது ராயல் என்பீல்டு.

புல்லட் ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கிய நெட்டிசன்: ராயல் என்பீல்டு குறித்து பரவிய பொய்யான வீடியோ...!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, வருகின்ற ஏப்ரம் மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் என்னும் பிரேக்கிங் சிஸ்டத்தைக் கட்டயமாக பொருத்த வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

புல்லட் ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கிய நெட்டிசன்: ராயல் என்பீல்டு குறித்து பரவிய பொய்யான வீடியோ...!

அவ்வாறு, 125cc-க்கு குறைவான பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் சிபிஎஸ் (CBS) எனப்படும் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டமும், 125 அல்லது அதற்கும் மேலான cc-யைக் கொண்ட இரு சக்கர வாகனங்களில், பூட்டுதலில்லா நிறுத்த அமைப்புடைய (ABS-Anti Lock Breaking) பிரேக்கிங் சிஸ்டத்தையும் பொருத்துவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

புல்லட் ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கிய நெட்டிசன்: ராயல் என்பீல்டு குறித்து பரவிய பொய்யான வீடியோ...!

இதேபோன்று, வருகின்ற 2022ம் ஆண்டிற்குள் கார்களிலும் ஏபிஎஸ் மற்றும் இஎஸ்சி எனப்படும் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயம் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெரிய ரக வாகனங்களிலும், அதாவது ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட இருக்கைகளைக் கொண்ட வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தைக் கட்டாயமாகப் பொருத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்தது.

புல்லட் ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கிய நெட்டிசன்: ராயல் என்பீல்டு குறித்து பரவிய பொய்யான வீடியோ...!

இந்த உத்தரவினைத் தொடர்ந்து, வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகளில், புதிய பாதுகாப்பு நார்ம்ஸ்-க்கு ஏற்ப பாதுகாப்பு அம்சங்களை இணைத்து வருகின்றன. இந்நிலையில்தான், ராயல் என்பீல்டு நிறுவனமும் தன்னுடைய தயாரிப்புகளில் புதிய பிரேக்கிங் சிஸ்டத்தை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

புல்லட் ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கிய நெட்டிசன்: ராயல் என்பீல்டு குறித்து பரவிய பொய்யான வீடியோ...!

அந்த வகையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் என்ட்ரீ லெவல் மோட்டார்சைக்கிளான புல்லட் 350-இல் டியூவல்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக சமீபத்தில் வீடியோ ஒன்று யுடியூபில் வைரலாக பரவியது. அதன்படி, புல்லட் 350 மற்றும் புல்லட் 350இஎஸ் மாடல்களில், பின்பக்க வீலில் டிரம் பிரேக்குடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டமும், முன்பக்க வீலில் டிஸ்க் பிரேக்குடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த வீடியோக் காட்சி தெரிவிக்கிறது. ஆனால், இந்த வீடியோவும், பிரேக்கிங் சிஸ்டம் குறித்துக் கூறப்பட்ட தகவலும் பொய்யானது என தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், ராயல் என்பீல்டு நிறுவனம் சார்பாக இதுபோன்ற தகவல் எதுவும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வீடியோவானது ராயல் என்பீல்டு ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கும் விதமாக நெட்டிசன்களால் பரப்பப்பட்ட வதந்தி என கூறப்படுகிறது. ஆனால், புதிதாக வெளிவரவிருக்கும் ராயல் என்பீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிளில் ஒரு சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்ட டிஸ்க் பிரேக் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

புல்லட் ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கிய நெட்டிசன்: ராயல் என்பீல்டு குறித்து பரவிய பொய்யான வீடியோ...!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் குறித்த முக்கிய தகவல்:

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமானது, வாகனத்தில் வேகமாக சென்றுக்கொண்டிருக்கும்போது நாம் பிரேக் பிடித்தால், உடனடியாக சக்கரம் சுழல்வதை லாக் செய்துவிடாமல், சிறிது சிறிதாக லாக் செய்து வாகனத்தின் வேகத்தை கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தும். இந்த செயலானது கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்றுவிடும்.

புல்லட் ரசிகர்களை ஏப்ரல் முட்டாளாக்கிய நெட்டிசன்: ராயல் என்பீல்டு குறித்து பரவிய பொய்யான வீடியோ...!

மேலும், இந்த தொழில்நுட்பமானது, பிரேக் பிடிக்கும்போது சாலைக்கும், டயருக்கும் உள்ள உராய்வை அதிகப்படுத்தி, வாகனம் கட்டுப்பாட்டை இழக்காமல் தடுக்கும். இந்த பிரேக்கிங் சிஸ்டமானது எந்த அளவிற்கு முக்கியத்துவமானது என்பதை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வீடியோக்கள் யுடியூபில் வலம் வந்தவாறு உள்ளன. அதேபோன்று, இதுகுறித்த பல்வேறு செய்திகளையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு உங்களுக்காக பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rumour About Royal Enfield Bullet 350. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X