உலகின் பிரம்மாண்ட விமானந்தாங்கி கப்பல் தயாரிக்கும் ரஷ்யா: இந்தியாவிற்கும் அழைப்பு!

Written By:

ரஷ்யா தயாரிக்கவுள்ள உலகின் பெரிய விமானந்தாங்கி கப்பலில் இந்தியாவும் தனது இராணுவ வலிமையை கட்டமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா இந்தியா கூட்டணியில் தயாராகும் பிரம்மாண்ட கப்பல்!

சர்வதேச புவிசார் அரசியல் நிலைமைகளில் ரஷ்யா தன்னை பாதுகாத்துக்கொள்ள தேவைகள் அதிகரித்துள்ளது.

இதற்காக தனது இராணுவ வலிமைகளை ஒவ்வொன்றாக ரஷ்யா கட்டமைத்து வருகிறது. இதில் புதியதாக இணைந்திருக்கிறது ஷெட்ரோம் விமானம் தாங்கி கப்பல்.

ரஷ்யா இந்தியா கூட்டணியில் தயாராகும் பிரம்மாண்ட கப்பல்!

அமெரிக்காவின் நிமிட்ஸ் கிளாஸ் ரக கப்பல்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு உலகின் பெரிய விமானம் தாங்கி கப்பலாக இதை ரஷ்யா தயாரிக்கிறது.

பிரோஜெக்டு 23E000E என்ற பெயரில் தயாராகும் இந்த கப்பலில் இந்தியாவும் தனது இராணுவ வலிமையை கட்டமைத்துக்கொள்ள ரஷ்யா ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

ரஷ்யா இந்தியா கூட்டணியில் தயாராகும் பிரம்மாண்ட கப்பல்!

இந்த கோரிக்கையோடு சமீபத்தில் ரஷ்யா அதிகாரிகள் சிலர் இந்தியா வந்ததாகவும், பிறகு இந்திய அரசு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

ரஷ்யா இந்தியா கூட்டணியில் தயாராகும் பிரம்மாண்ட கப்பல்!

ரஷ்யா கட்டமைக்கவுள்ள உலகின் பெரிய விமானம் தாங்கிகப்பலில் அணு ஆயுதங்கள், அணு ஏவுகணைகள் உட்பட 90 விமானங்கள் வரை தாங்கக்கூடிய திறனோடு தயாரிக்கப்படவுள்ளது.

ரஷ்யா இந்தியா கூட்டணியில் தயாராகும் பிரம்மாண்ட கப்பல்!

மேலும் ரஷ்யாவின் மிக நுட்பம் வாய்ந்த அதிக திறன் கொண்ட வகையில் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட டி50 ஹெலிகாப்டர்களும் இந்த விமானம் தாங்கி கப்பலில் நிலைநிறுத்தப்பட்டவுள்ளன.

ரஷ்யா இந்தியா கூட்டணியில் தயாராகும் பிரம்மாண்ட கப்பல்!

ரஷ்யா கடல் சார் துறையில் ஷர்ட்ரம் வகுப்பின் கீழ் தயாராகும் இந்த பிரம்மாண்ட விமான தாங்கி கப்பலை 2030ல் பயன்பாட்டுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இதனுடைய அளவை பற்றி தெளிவாக விளங்கும்படியாக சொல்லவேண்டும் என்றால், மூன்று கால்பந்து மைதானத்தில் அளவில் இருக்கும்.

ரஷ்யா இந்தியா கூட்டணியில் தயாராகும் பிரம்மாண்ட கப்பல்!

உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலாக தயாராகவுள்ள இதனுடைய அனைத்து சிறப்பு அம்சங்களும் அமெரிக்காவின் நிமிட்ஸ் கிளாஸ் கப்பலைப் போல இருக்கும்.

ரஷ்யா இந்தியா கூட்டணியில் தயாராகும் பிரம்மாண்ட கப்பல்!

ரஷ்யாவிடம் தற்போது அட்மிரல் குஸ்நெட்ஸோவ் என்ற ஒரேஒரு விமானம் தாங்கி கப்பல் மட்டுமே உள்ளது.

1985ம் ஆண்டில் சேவைக்கு வந்த இது 30 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யாவின் கடற்படை பிரிவில் பணியாற்றி வருகிறது.

ரஷ்யா இந்தியா கூட்டணியில் தயாராகும் பிரம்மாண்ட கப்பல்!

எம்.ஐ.ஜி-29கே ஜெட் விமானங்கள், டி50 விமானங்கள், அணு ஆயுதங்கள, ஏவுகணைகள் மட்டுமின்றி இதில் 4000 வீரர்கள் வரை தங்கக்கூடிய வசதிகள் இருக்கும்.

சுமார் 17.5 பில்லியன் டாலர் செலவில், 7 அடுக்கு கொண்டு இந்த கப்பலை ரஷ்யா தயாரிக்கிறது. இருந்தாலும் கட்டமைப்பு பணிகள் தொடங்கிய பிறகு இதற்கான செலவீனங்கள் இன்னும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

ரஷ்யா இந்தியா கூட்டணியில் தயாராகும் பிரம்மாண்ட கப்பல்!

அமெரிக்காவிடமுள்ள நிமிட்ஸ் ரக விமானம் தாங்கி கப்பல் மொத்தம் 10 உள்ளன. அதில் 90 விமானங்கள் வரை நிலைநிறுத்த முடியும்.

2 அணுத்திறன் கொண்டு இதனுடைய எஞ்சின்கள் செயல்படும். 90 விமானங்கள் வரை நிலைநிறுத்தப்படக்கூடிய நிமிட்ஸ் கப்பலில் 5000 வீரர்கள் வரை தங்கலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Russia Plans to Build World's Largest Aircraft Carrier. For that Russia asks India to joint hands with... Click for More
Story first published: Friday, May 26, 2017, 17:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark