ரஷ்யாவின் புதிய ஐஸ் பிரேக்கர் ராணுவ கப்பல் அறிமுகம்... கைபிசைந்து நிற்கும் அமெரிக்கா!

By Saravana Rajan

இயற்கை வளம் செறிந்த ஆர்டிக் பிரதேசத்தில் வலிமையை நிலைநாட்டுவதில் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்த பகுதியின் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக இரண்டு நாடுகளுமே மும்முரம் காட்டுவது வாடிக்கை.

இந்த நிலையில், ஆர்டிக் பிரதேச பயன்பாட்டிற்காக பனிப்பாறைகளை உடைத்துச் செல்லும் வல்லமை கொண்ட புதிய ராணுவக் கப்பலை ரஷ்யா தயாரித்துள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கப்பல் ஆர்டிக் பிரதேசத்தில் ரஷ்யாவின் பலத்தை வெகுவாக பரைசாற்றும் என நம்பப்படுகிறது.

 நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளி

ரஷ்யாவிடம் 27 ஐஸ்பிரேக்கர் கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், 45 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ராணுவத்திற்காக இந்த புதிய ஐஸ்பிரேக்கர் கப்பலை தயாரித்துள்ளது.

கப்பல் பெயர்

கப்பல் பெயர்

இல்யா முரோமெட்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய ராணுவ கப்பல், அடுத்த ஆண்டு ரஷ்ய கப்பற்படையில் சேர்க்கப்பட உள்ளது.

திறன்

திறன்

இந்த கப்பல் ஒரு மீட்டர் தடிமன் கொண்ட பனிப்பாறைகளை கூட உடைத்துக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. இதுதவிர, 2020ம் ஆண்டில் 13 அடி நீள பனிப்பாறைகளை உடைத்துச் செல்லும் திறன் கொண்ட கப்பல்களையும் ரஷ்யா களமிறக்க உள்ளது.

வடிவம்

வடிவம்

இந்த கப்பல் 280 அடி நீளமும், 6,000 டன் எடையும் கொண்டது. அதிகபட்சமாக 5,600 கிமீ தூரம் வரை பயணிக்கும். இரண்டு மாதங்கள் வரை கரைக்கு திரும்பாமல் கடலிலேயே பயணிக்கும் வசதிகளை கொண்டுள்ளது. 35 பணியாளர்கள் இந்த கப்பலில் இருப்பர்.

 ரஷ்யா முன்னிலை

ரஷ்யா முன்னிலை

ஐஸ்பிரேக்கர் கப்பல்களை இயக்குவதில் ரஷ்யா முன்னிலை வகிக்கிறது. ஆர்டிக் பிரதேசத்திற்காக அமெரிக்கா இயக்கி வரும் இரண்டு ஐஸ்பிரேக்கர் வசதி கொண்ட கப்பல்களில் ஒன்று, எஞ்சின் பழுது காரணமாக இயக்கப்படவில்லை. ஒன்று மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஐஸ்பிரேக்கர் கப்பல்களை வாங்குவதற்கு அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

 சீனாவும் தீவிரம்

சீனாவும் தீவிரம்

இயற்கை வளம் செறிந்த ஆர்டிக் பிரதேசத்தின் மீது சீனாவிற்கும் கண் உண்டு. எனவே, அந்த பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக ஐஸ்பிரேக்கர் கப்பல்களை இயக்கி வருகிறது. ஆனாலும், ரஷ்யாவை நெருங்க முடியாமல், சீனாவும், அமெரிக்காவும் தவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Russia launched New military icebreaker Ship.
Story first published: Tuesday, June 21, 2016, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X