ஏர்பஸ், போயிங் விமானங்களுக்கு போட்டியாக களமிறங்கிய ரஷ்ய பயணிகள் விமானம்!

Written By:

வர்த்தக ரீதியிலான பயணிகள் மற்றும் சரக்கு விமான தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த போயிங், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனங்கள் கொடி கட்டி பறக்கின்றன. இந்த இரு நிறுவனங்களுக்கு சிறந்த மாற்று நிறுவனங்கள் மிக குறைவு.

இந்த நிலையில், போயிங், ஏர்பஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நேரடி போட்டியாக ரஷ்யாவின் யுனைடேட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம்தான் இந்த புதிய விமானங்களை அறிமுகம் செய்துள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு எப்போதுமே தொழில்நுட்பத்தில் கடும் போட்டியாளராக கருதப்படும் ரஷ்யா தற்போது விமான தயாரிப்புத் துறையிலும் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு- தனியார் கூட்டணி

அரசு- தனியார் கூட்டணி

யுனைடேட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை ரஷ்ய அரசுதான் வைத்துள்ளது. எனவே, இது அரசின் முழு ஆதரவில் இயங்கும் நிறுவனமாக உள்ளது.

டிசைன்

டிசைன்

இர்குட் நிறுவனம்தான் விமானங்களை உருவாக்கித் தந்துள்ளது. இதுமட்டுமின்றி, ஏவியாஸ்டார்- எஸ்பி மற்றும் ஏரோகாம்போசிட் மற்றும் யுஏசி- அக்ரிகேஷன் மையம் போன்ற பல நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்த பயணிகள் விமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

விமான மாடல்

விமான மாடல்

ரஷ்யாவிலுள்ள இர்குட் விமான தயாரிப்பு ஆலையில் நடந்த நிகழ்ச்சியில், எம்சி21-300 என்ற முதல் பயணிகள் விமான மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விமானமானது ஏர்பஸ் ஏ320 நியோ மற்றும் போயிங் 737 விமானத்திற்கு நேரடி போட்டியாக இருக்கும்.

பாராட்டு

பாராட்டு

இந்த விமானத்தை தயாரித்தவர்களுக்கு ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் பாராட்டு தெரிவித்திருப்பதுடன், மிகச்சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இந்த விமானத்தை டெலிவிரி கொடுப்பதற்கான அனைத்து சான்றுகளும் அரசு வழங்கிவிடும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.

 இரண்டு விமானங்கள்

இரண்டு விமானங்கள்

முதலில் இரண்டு விமானங்களை யுனைடேட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேசன் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. எம்சி-21 குடும்ப வரிசையில் எம்சி-21-300 மற்றும் எம்சி21-200 ஆகிய மாடல்கள் வருகின்றன.

இருக்கை வசதி

இருக்கை வசதி

முதலாவது மாடலில் 160 பயணிகள் முதல் 211 பேர் வரையிலும், இரண்டாவது மாடலில் 130 முதல் 176 பயணிகள் வரையிலும் செல்ல முடியும்.

 நவீனம்...

நவீனம்...

போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களின் விமான மாடல்களைவிட ரஷ்யாவின் எம்சி-21 ரக பயணிகள் விமானங்கள் மிகவும் நவீன தொழில்நுட்பத்தை கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ஆர்டர்

ஆர்டர்

இந்த விமானங்களுக்கு இதுவரை 175 ஆர்டர்கள் குவிந்துவிட்டதாகவும் இர்குட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

எம்சி-21 விமானத்தில் இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவை மிகவும் நவீன தொழில்நுட்பம் கொண்டவை என்பதால், குறைவான சப்தம், சிறப்பான எரிபொருள் சிக்கனம், குறைந்த புகை வெளியேற்றம் போன்ற சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.

பயண தூரம்

பயண தூரம்

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 6,400 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. அதாவது, உள்நாட்டு மற்றும் நடுத்தர தூர பயண வழித்தடங்களில் பயன்படுத்த முடியும்.

 பழுது கண்டறியும் வசதி

பழுது கண்டறியும் வசதி

விமானத்தில் இலகு எடையும், உறுதியும் கொண்ட பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், பழுது கண்டறியும் வசதி, தொழில்நுட்ப இயக்கத்தை நேரடியாக காண்பிக்கும் வசதிகள் உள்ளன.

நேவிகேஷன்

நேவிகேஷன்

உலகின் மிக நவீனமான வழிகாட்டு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை எந்தவொரு மோசமான சீதோஷ்ண நிலையிலும் சிறப்பாக இயங்கும் என்பதால், மிகவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.

 சவுகரியம்

சவுகரியம்

இந்த விமானத்தின் இருக்கைகள் மிகவும் சவுகரியமாகவும், இதன் கேபின் மிகவும் விசாலமான உணர்வை தரும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டெலிவிரி

டெலிவிரி

2018ம் ஆண்டிலிருந்து டெலிவிரி துவங்கப்பட உள்ளது. அப்போது, யுஏசி நிறுவனம் சொல்வது போலவே, போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதலாம்.

விலை

விலை

எம்சி-21-200 விமானம் 72 மில்லியன் டாலர்கள் விலையிலும், எம்சி-21 300 விமானம் 91 மில்லியன் அமெரிக்க டாலர் விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Russian's New passenger plane unveiled.
Story first published: Monday, June 20, 2016, 10:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark