எங்கெங்கு காணினும் லெதர் மயம்: இந்த காரின் விலை ஜஸ்ட் ரூ.8.11 கோடி மட்டுமே!
பொதுவாக கார்களின் இருக்கைகள் மற்றும் இன்டிரியர் பகுதிகளில் லெதர் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், ரஷ்யாவை சேர்ந்த கஸ்டமைஸ் நிபுணர் ஒருவர் லெதர் உறையால் போர்த்தப்பட்ட காரை கஸ்டமைஸ் செய்துள்ளார்.
ரஷ்யாவின் பிரபல விளம்பர இணைய பக்கத்தில் இந்த கார் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்புறம், உட்புறம் என எங்கும் லெதர் மயமாக காட்சி தரும் அந்த காரின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எந்த கார்?
இது என்ன கார் என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால், பீஜோ கார்தான் இவ்வாறு கஸ்டமைஸ் செய்திருப்பது லோகோ மூலம் உறுதியாகிறது. இந்த காரின் பாடி ஃபைபர் கிளாஸால் ஆனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் ரக லெதர்
இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் லெதர் பைஸன் எனப்படும் அழிந்து வரும் இனத்தை சேர்ந்த மாட்டுத் தோல் ஆகும். இந்த காருக்காக எத்தனை மாடுகள் கொல்லப்பட்டதோ என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது.

இன்டிரியரிலும் லெதர்
வெளிப்புறம் மட்டுமின்றி உட்புறத்திலும் எக்கச்சக்கமாக பைஸன் மாட்டுத் தோல் மூலம் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.

அற்பனுக்கு வாழ்வு வந்தால்...
வெளிப்புறம், உட்புறத்தையும் தாண்டி எஞ்சின் மற்றும் இதர பாகங்களையும் தோல் கொண்டு மூடியுள்ளனர். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்.

கிறிஸ்டல் கற்கள்
எஞ்சினை சுற்றிலும் தோல் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, உயர்ரக கிறிஸ்டல் கற்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அலங்காரம்
லெதர் உறை மேல் அழகு சேர்க்கும் விதமாக உருவங்களும் பிரின்ட் செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த நிபுணர் ஒருவர் இந்த பணியை செய்துள்ளார்.

பதப்படுத்திய தோல்
இந்த தோல் பிரத்யேக முறையில் பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, எஞ்சினிலிருந்து வெளிப்படும் சூட்டை சாதாரணமாக தாங்க வல்லது. மேலும், இந்த காரை சாதாரண கார்கள் போன்று கழுவி சுத்தப்படுத்தவும் முடியும்.

எஞ்சின்
இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. வலது புற ஸ்டீயரிங் அமைப்பு கொண்டிருக்கிறது.

விலை
அவிட்டோ என்ற ரஷ்யாவின் பிரபல விளம்பர இணைய பக்கத்தில் இந்த லெதர் கார் விற்பனைக்கு உள்ளது. ரஷ்டம் என்ற கஸ்டமைஸ் நிபுணர் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். ரூ.8.11 கோடி இந்திய மதிப்பில் இந்த கார் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








