இனி குடித்து விட்டு ஓட்ட முடியாது! கார்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்! என்னனு தெரியுமா?

குடிபோதையில் கார் ஓட்டுவதை தடுப்பதற்காக அதிரடியான திட்டம் ஒன்றை அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இனி குடித்து விட்டு ஓட்ட முடியாது! கார்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்! என்னனு தெரியுமா?

உலகில் சாலை விபத்து தொடர்பான மரணங்கள் அதிகமாக நிகழ்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சாலை விபத்துக்களில் சிக்கி சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதுதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இனி குடித்து விட்டு ஓட்ட முடியாது! கார்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்! என்னனு தெரியுமா?

இதனால் குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை கட்டுப்படுத்துவதற்கு, இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. ஆனால் வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், அதற்கு இன்னும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. குடிபோதை காரணமாக நிகழும் விபத்துக்களை கட்டுப்படுத்துவது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

இனி குடித்து விட்டு ஓட்ட முடியாது! கார்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்! என்னனு தெரியுமா?

இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த பிரச்னை உள்ளது. இதில், இந்தியாவின் நட்பு நாடாக கருதப்படும் ரஷ்யாவும் ஒன்று. இந்தியர்களை போன்று, ரஷ்யர்களும் மதுவை அளவுக்கு அதிகமாக அருந்துகின்றனர். மிகவும் தீவிரமான மது பிரியர்கள் என்ற பெயரை ரஷ்யர்கள் மிக நீண்ட காலமாகவே கொண்டுள்ளனர்.

இனி குடித்து விட்டு ஓட்ட முடியாது! கார்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்! என்னனு தெரியுமா?

இதன் காரணமாக ரஷ்யாவில் அதிகப்படியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனை குறைக்க வேண்டும் என ரஷ்ய அரசு விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓட்டுனர்களிடம் ஆல்கஹால் அளவை கண்டறிய காவல் துறையினர் பயன்படுத்தும் கருவி, புதிய கார்களில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்னும் அதிரடியான உத்தரவை பிறப்பிக்கலாமா? என ரஷ்ய அரசு ஆலோசித்து வருகிறது.

இனி குடித்து விட்டு ஓட்ட முடியாது! கார்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்! என்னனு தெரியுமா?

குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த திட்டத்தை ரஷ்யா பரிசீலனை செய்து வருகிறது. இந்த விஷயத்தில் ரஷ்யா உறுதியான முடிவை எடுக்கும் பட்சத்தில், புதிய கார்களை தயாரிக்கும்போதே ஆல்கஹால் அளவை கண்டறியும் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படும்.

இனி குடித்து விட்டு ஓட்ட முடியாது! கார்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்! என்னனு தெரியுமா?

ஆல்கஹால் அளவை கண்டறியும் சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, காரை ஸ்டார்ட் செய்ய முடியும் என்பது போன்ற தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் இது தொடர்பான திட்டத்தை இறுதி செய்து விட முடியும் என ரஷ்யா நம்புவதாக அங்கிருந்து வெளியாகும் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.

இனி குடித்து விட்டு ஓட்ட முடியாது! கார்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்! என்னனு தெரியுமா?

இந்த செய்தி தொடர்பாக கருத்து கேட்டதற்கு ரஷ்ய அரசு தரப்பில் உடனடியாக எந்தவித உறுதியான பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் ஆல்கஹால் அளவை கண்டறியும் கருவியை புதிய கார்களில் கட்டாயமாக்குவது தொடர்பான ஆலோசனை நடந்து வருவது உறுதி என்றே கூறப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், குடிபோதையில் கார் விபத்துக்கள் நடைபெறுவது வெகுவாக குறையும்.

இனி குடித்து விட்டு ஓட்ட முடியாது! கார்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்! என்னனு தெரியுமா?

இந்தியா போன்ற நாடுகளும் இதுபோன்ற திட்டங்களை பரிசீலனை செய்யலாம். ஓட்டுனர் குடிபோதையில் இருந்தால், வாகனம் ஸ்டார்ட் ஆவதை தடுக்கும் கருவிகள் இந்தியாவிலேயே கூட கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் நடைமுறை பயன்பாட்டை ஆராய்ந்து, வாகனங்களில் கட்டாயமாக்குவதை அரசு பரிசீலிக்கலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Russian Government Considers Built-in Breathalysers For Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X