ரன் வே தேவையில்லை... அலேக்காக ஏறி, இறங்கும் ரஷ்யாவின் ரகசிய ஆகாய கப்பல்!

By Saravana

ஓடுபாதை இல்லாமல் ஏற்றவும், இறக்கவும் வசதி கொண்ட புதிய ஆகாய கப்பல் ரஷ்ய ராணுவத்திற்காக உருவாக்கப்பட்டு வருகிறது. ரகசியம் காக்கப்பட்டு வந்த இந்த புதிய ஆகாய கப்பல் பற்றிய விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

இந்த புதிய ஆகாய கப்பல் குறித்த தகவல்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் எளிதாக கொண்டு செல்லும் வசதி கொண்ட இந்த ஆகாய கப்பல் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பெயர்

பெயர்

அட்லான்ட் என்ற பெயரில் இந்த புதிய ஆகாய கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விமானம், ஹோவர்கிராஃப்ட், ஆகாய கப்பல் என மூன்றுவித தொழில்நுட்பங்களையும் கொண்டதாக இந்த புதிய ஆகாய கப்பல் உருவாக்கப்படுகிறது.

தனியார் தயாரிப்பு

தனியார் தயாரிப்பு

இந்த ஆகாய கப்பலை ரஷ்ய ராணுவத்திற்காக, ஆகர் ரோஸ்ஆர்கோ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. வரும் டிசம்பரில் முதல்கட்ட வடிவமைப்பு பணிகள் முடிவடைந்துவிடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

இந்த புதிய ஆகாய கப்பல் இரு மாடல்களில் தயாராகிறது. அட்லாண்ட் 100 என்ற மாடல் 130 மீட்டர் நீளம் கொண்டதாகவும், மணிக்கு 140 கிமீ வேகத்தில் பறக்கும். இது 60 டன் எடையை சுமந்து பறக்கும் வல்லமை கொண்டது. இரண்டாவது மாடலான அட்லாண்ட் 30 என்ற மாடல் 75 மீட்டர் நீளத்துடன், மணிக்கு 170 கிமீ வேகத்தில் பறக்கும். இதில், 16 டன் எடை சுமக்கும் திறன் கொண்டது.

எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

பெரிய அட்லாண்ட் மாடலில் ஒரே நேரத்தில் 200 வீரர்கள் அல்லது 60 டன் தளவாடங்களை ஏற்றிச் செல்ல முடியும். சிறிய மாடலில் 16 டன் எடையுடைய தளவாடங்களை எடுத்துச் செல்ல முடியும்.

சமநிலை தவறாது

சமநிலை தவறாது

இந்த ஆகாய கப்பலில் வெற்று எடையுடன் செல்லும்போது சமநிலையுடன் பறந்து செல்லும் விதத்தில், அடிப்பாகத்தில் அதிக எடையுடைய பாகங்கள் பொருத்தப்படுகிறது. எனவே, சரக்கு ஏற்றாவிட்டாலும், காற்றின் வேகத்தால் சமநிலை பாதிக்கப்படாது.

பயன்பாடு

பயன்பாடு

ராணுவ வீரர்கள், தளவாடங்களை விரைவாக போர் நடக்கும் பகுதிகளுக்கு ஏற்றிச் செல்ல முடியும். அத்துடன், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளில் நடக்கும் போதை மருந்து கடத்தல் கும்பல்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கும் இது மிக உகந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதர பயன்பாடு

இதர பயன்பாடு

இந்த ஆகாய கப்பல் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் சிறப்பாக இயங்கும். எனவே, ராணுவ பயன்பாட்டு மட்டுமின்றி, சைபீரியா மற்றும் ஆர்டிக் பனிப்பிரதேசங்களிலிருந்து கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கும் பயன்படுத்த முடியுமாம். தற்போது அங்கிருந்து தரை வழியாக அல்லது இதர போக்குவரத்து சாதனங்கள் மூலம் கச்சா எண்ணெயை எடுத்து வருவதைவிட இந்த ஆகாய கப்பல் மூலம் எடுத்து வருவது மிகவும் எளிதாக இருக்குமாம்.

விலை மதிப்பு

விலை மதிப்பு

ஒரு அட்லாண்ட் ஆகாய கப்பல் 15 மில்லியன் டாலர் விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய ராணுவத்தின் எம்ஐ-26 ஹெலிகாப்டரைவிட இது 30 சதவீதம் குறைவான விலை கொண்டதாக இருக்குமாம்.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

2018ம் ஆண்டு இந்த ஆகாய கப்பல் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Russian president Vladimir Putin is set to arm Russian military with a top secret spaceship-like aircraft called Atlant, which can take off and land without a runway.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X