ஏலத்திற்கு வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் லிமோசின் கார்!

Written By:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்காக தயாரிக்கப்பட்ட லிமோசின் கார் ஏலத்திற்கு வந்துள்ளது. ஹெம்மிங்ஸ் என்ற ஏல நிறுவனம் இந்த காரை ஏலத்தில் விடுவதற்கு பட்டியலிட்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பங்கள், சொகுசு வசதிகள் கொண்ட இந்த காரை வாங்குவதற்கு கோடீஸ்வரர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஒரேயொரு கார்

ஒரேயொரு கார்

ஷ்ய அதிபர் புதினுக்காக தயாரிக்கப்படும் புதிய லிமோசின் கார் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட முன்மாதிரி கார் மாடல் இது. எனவே, மிகவும் பிரத்யேகமான கார் என்பதும் வாடிக்கையாளர்களை கவரும்.

புத்தம் புதிய கார்

புத்தம் புதிய கார்

கட்டமைக்கப்பட்டு நேரடியாக ஏலத்திற்கு வருவதால், இதுவரை யாருமே பயன்படுத்தாத புத்தம் புதிய கார்.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

விசேஷ வாகனங்கள் கட்டமைப்பில் புகழ்பெற்ற ரஷ்ய நிறுனமான ZIL நிறுவனம் இந்த காரை தயாரித்துள்ளது. சொகுசு மற்றும் தொழில்நுட்பத்தில் நவீன யுக அம்சங்களை பெற்றிருக்கிறது.

லிமோ நம்பர் ஒன்

லிமோ நம்பர் ஒன்

இந்த கார் ZIL 4112R என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக லிமோ நம்பர் ஒன் என்றும் குறிப்பிடப்படுகிறது.

வடிவம்

வடிவம்

புதினுக்காக உருவாக்கப்பட்ட இந்த கார் 6 கதவுகள் கொண்டது. லிமோசின் எனப்படும் அதிநீள வகையை சேரந்த இந்த சொகுசு கார் 6,230 மிமீ நீளமும், 2,086மிமீ அகலும், 1,500மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 4,080 மிமீ என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

வசதிகள்

வசதிகள்

டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஹீட்டர், கண்காணிப்பு சாதனம், எலக்ட்ரிக் பவர் இருக்கைகள், பார் வசதி, குளிர்சாதனப் பெட்டி ஆகிய பல வசதிகளை கொண்டுள்ளது.

பல ஆண்டு கட்டுமானம்

பல ஆண்டு கட்டுமானம்

இந்த கார் ஆறரை ஆண்டுகளை எடுத்துக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அனுமதி வேண்டும்

அனுமதி வேண்டும்

இந்த முன்மாதிரி காரை அங்கீகரித்து, புதிய காரை கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்தால், இந்த காரில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் மற்றும் குண்டு வெடிப்பிலிருந்து சேதமடையாத அடிப்பாகம் போன்றவை சேர்க்கப்படும். இந்த காரில் அந்த பாதுகாப்பு வசதிகள் இல்லை.

எஞ்சின்

எஞ்சின்

இந்த லிமோசின் காரில் 400 எச்பி பவரை அதிகபட்சம் வழங்க வல்ல 7.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மொடா குடிகாரன்

மொடா குடிகாரன்

இந்த கார் 100 கிமீ தூரம் பயணிப்பதற்கு 65 லிட்டர் பெட்ரோலை உறிஞ்சித் தள்ளும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்த கார் 1.2 மில்லியன் டாலர் விலையில் ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Photo Credit: Wikipedia

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
This ZiL 4112R was allegedly built as a prototype for Russian President Vladimir Putin. Now it can be yours

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark