2 வயது சிறுவனுக்கு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரா!! அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது இதுதான் போல...

தனது மகனுக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை ரஷ்ய ராப் பாடகர் ஒருவர் பரிசாக அளித்து கவனத்தை பெற்றுள்ளார். ரஷ்ய சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இதனை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

2 வயது சிறுவனுக்கு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரா!! அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது இதுதான் போல...

37 வயதானவர் திமூர் இல்டாரோவிச் யூனுசோவ். திமடி என பலரால் அழைக்கப்படும் இவர் ரஷ்யாவில் பிரபல ராப் பாடகராக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில், தனது மகனுக்கு லம்போர்கினி அவெண்டேடார் எஸ்.வி.ஜே காரை பரிசாக வழங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 1.67 கோடி பின்பற்றுபவர்களை கொண்டிருந்ததால் திமூரின் இந்த வீடியோ உடனடியாக ரஷ்யாவில் வைரலானது. அவரது மகனுக்கு வெறும் 2 வயது மட்டும் ஆகிறது. இதனால் நிச்சயம் அவரால் அந்த லம்போர்கினி காரை ஓட்ட முடியாது.

2 வயது சிறுவனுக்கு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரா!! அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது இதுதான் போல...

இது திமூருக்கும் தெரியும். இதனால் தான் இந்த லம்போர்கினி அவெண்டேடார் காரை எதிர்காலத்தில் அவர் வளர்ந்த பிறகு பயன்படுத்தி கொள்ளட்டும் என தற்போதைக்கு அவர் பயன்படுத்தும் வகையில் குழந்தைகள் கார் ஒன்றையும் திமூர் பரிசாக வழங்கியுள்ளார்.

2 வயது சிறுவனுக்கு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரா!! அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது இதுதான் போல...

திமதி என அழைக்கப்படும் திமூர் பல சொகுசு மற்றும் லக்சரி கார்களுக்கும், வாகனங்களுக்கும் சொந்தகாரராக உள்ளார். ஆனால் தற்போதைக்கு அவை அனைத்தையும் இவர் ஒருவர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

2 வயது சிறுவனுக்கு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரா!! அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது இதுதான் போல...

இவரது மகனுக்கு 2 வயது, மகளுக்கு 7 வயதாகிறது. இவர்கள் வளர்ந்து கார் ஓட்டும் வயதை எட்டியவுடன் அவர்களுக்காக நான் வாங்கி வைத்துள்ள வாகனங்களை வழங்குவேன் என திமதி கூறியுள்ளார்.

2 வயது சிறுவனுக்கு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரா!! அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது இதுதான் போல...

இவ்வாறு எப்போதோ அவர்கள் பயன்படுத்தவுள்ள வாகனங்களை இப்போதே வாங்கி போட்டால், யாராக இருந்தாலும் கலாய்க்க தானே செய்வார்கள். அவ்வாறுதான் இன்ஸ்டாகிராமில் திமூரை அவரது ரசிகர்கள் நக்கலடித்து வருகின்றனர்.

2 வயது சிறுவனுக்கு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரா!! அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது இதுதான் போல...

இந்த வாகனங்களை அவர்கள் பயன்படுத்தும் வரையில் நான் தத்தெடுத்து கொள்ளலாமா என கிண்டலாக கேட்கும் ரசிகர்களில் சிலர், நீங்கள் உங்கள் பிள்ளைகளை லக்சரி வாகனங்களை கொடுத்து கெடுக்கிறீர்கள் எனவும் திமூரின் மீது கோபப்பட்டுள்ளனர்.

2 வயது சிறுவனுக்கு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரா!! அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது இதுதான் போல...

எப்படியோ திமூரின் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இப்போதும் ஆயிரக்கணக்கான புது முகங்களை இந்த வீடியோவினை தினந்தோறும் பார்த்த வண்ணம் உள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rapper gifts 2-year-old son super expensive Lamborghini. And a toy model for now
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X