விமானத்தில், கொஞ்ச நேரத்தில் எல்லாருக்கும் பயத்தை காட்டிடாரு!! டேக்-ஆஃப் சமயத்தில் செய்யக்கூடாத ஒன்று...

விமான பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. அதேபோல் விமான பயணத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் செய்திகளில் படிப்பதற்கும், அறிவதற்கும் சுவாரஸ்யமானவை ஆக இருக்கும். இதனாலேயே விமான பயணத்தின்போது நடந்த அத்தகைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் பலவற்றை இதற்குமுன் நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

அந்த வகையில் இலண்டனை நோக்கி சென்ற ரியானேர் விமானத்தில் பிரிட்டிஷ் பயணி ஒருவர் செய்த காரியத்தை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். கடந்த ஜூலை 1ஆம் தேதி குரோஷியா நாட்டின் ஸடார் விமான நிலையத்தில் இருந்து ரியானேர் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட தயாராகியது.

passenger tried to open flight door

விண்ணில் டேக்-ஆஃப் ஆகுவதற்கு தயாராகி கொண்டிருந்த அந்த விமானத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் பயணி ஒருவர் திடீரென விமானத்தின் கதவை திறந்து வெளியேற முயற்சித்துள்ளார். விமானம் ரன்வேயில் இயங்க ஆரம்பத்தில் இருந்தே தான் வெளியே செல்ல வேண்டும் என கூறிவந்த அந்த நபர், இதுகுறித்து விமான கேபின் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், விமானம் ஏற்கனவே இயங்க ஆரம்பித்துவிட்டதால், அவரை விமானத்தில் இருந்து வெளியே செல்ல பணியாளர்கள் அனுமதிக்கவில்லை.

அதுமட்டுமின்றி, இன்னும் சில வினாடிகளில் விமானம் டேக்-ஆஃப் ஆகவுள்ளதால், இருக்கையில் சீட்பெல்ட் அணிந்தப்படி அமருமாறு அவரை பணிப்பெண்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர் இருக்கையில் இருந்து வெளியே வந்து விமானத்தின் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இதனை கண்ட மற்ற பயணிகள் அவரை இருக்கையில் அமரும்படி எவ்வளவோ வலியுறுத்தியும் அவர் அமர்வதுபோல் இல்லை.

"கதவை திறங்கள்" என அவர் தொடர்ந்து கூச்சலிடுவதை விமானத்திற்குள் அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட மேலுள்ள வீடியோவில் கேட்கலாம். விமான பயணத்தில் டேக்-ஆஃப்பின் போதும், லேண்டிங்கின் போதும் தான் கூடுதல் கவனமாக செயல்பட வேண்டியிருக்கும். ஆனால் அந்த இளைஞர் இவ்வாறு நடந்து கொண்டதால், நமக்கும் ஏதேனும் நடந்துவிடுமோ என மற்ற பயணிகள் பயப்பட துவங்கினர்.

நல்லவேளையாக, அவர் கதவை அடைவதற்கு முன்பாக, விமானத்திற்குள் இருந்த இளைஞர்கள் சிலர் அந்த நபரை தடுத்து நிறுத்தி, தரையில் தள்ளி இறுக்கமாக பிடித்து கொண்டுள்ளனர். பின்னர், விமானம் டேக்-ஆஃப் ஆன பின்பு அந்த நபர் இருக்கையில் அமர்த்தப்பட்டார். பணிப்பெண்கள் இந்த கலவரம் குறித்து விமான கேப்டனிடம் தகவல் தெரிவித்தனர்.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கலவரத்தில் ஈடுப்பட்ட அந்த நபர் ஆல்கஹால் போன்ற போதையில் இருந்ததாகவும், இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டதால் விமானம் இலண்டனை அடைந்தவுடன் அந்த நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமானத்திற்குள் கலவரத்தில் ஈடுப்பட்டதற்காக தற்போதுவரையில் அந்த நபர் போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரம் நடந்த இந்த குறிப்பிட்ட ரியானேர் விமானத்தில் ஹைட் அவுட் என்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களே அதிக பேர் இருந்துள்ளனர். இந்த ஹைட் அவுட் இசை நிகழ்ச்சி ஆனது குரோஷியாவில் கோடைக்காலமான ஜூன் மாதத்தில் நடைபெறக்கூடிய பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றாக விளங்குகிறது. விமானம் டேக்-ஆஃப் ஆன பின்பும் அந்த நபர் மற்ற பயணிகளை தொந்தரவு செய்தவாறு இருந்ததாக அந்த விமானத்தில் பயணித்த மற்ற பயணிகள் தெரிவித்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: உண்மையில், இவ்வாறான கலவரங்களும், பின்னர் அவ்வாறு கலவரத்தில் ஈடுப்பட்டவர்களை போலீஸார் கைது செய்வதும் வாடிக்கையான ஒன்றே. ஏனெனில் மது உள்ளிட்டவற்றின் போதையில் ரகளை செய்பவர்கள் எல்லா இடங்களிலும் இருக்க தான் செய்கின்றனர். போதையில் இருந்தாலும், மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்ற எண்ணம் எப்போதும் நம்மிடத்தில் இருக்க வேண்டும்.

Article Published On: Sunday, July 9, 2023, 19:45 [IST]
English summary
Ryanair flight to london british man tried to open door
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+