ஒற்றை சக்கர சாகசக்காரன் ரைனோ யூனிசைக்கிள் பற்றிய தகவல்கள்

சினிமாவில்தான் இதுபோன்ற பைக்குகளை பார்த்து வியப்பதுண்டு. ஆனால், இந்த ஒற்றைச் சக்கர மோட்டார்சைக்கிளை தயாரித்து விற்பனைக்கும் விட்டுள்ளது ரைனோ நிறுவனம்.

பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் யூனிசைக்கிள் பற்றிய கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம்!

டிசைன்

டிசைன்

ஒற்றை சக்கரத்தில் ஹேண்டில்பார் மற்றும் மோட்டாரை பொருத்தி, அசத்தலாக டிசைன் செய்துள்ளனர். பார்க்கிங் செய்வதற்கு அதிக இடம் தேவையில்லை. போக்குவரத்து நெரிசலிலும் எளிதாக செல்ல முடியும்.

இடவசதி

இடவசதி

ஒருவர் அமர்ந்து செல்வதற்கு மட்டுமல்ல, ஷாப்பிங் செய்து பைகளை மாட்டிச் செல்வதற்கான வசதியும் உள்ளது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

இந்த யூனிசைக்கிளில் இரண்டு எல்இடி ஹெட்லைட் இருப்பதால், இரவிலும் தொந்தரவு இல்லாமல் குறைந்த தூர பயணங்களை இனிதாக முடிக்கலாம்.

வேகம்

வேகம்

இந்த யூனிசைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 16 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

பேட்டரியில் இயங்கும் இந்த யூனிசைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 16 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

 வசதிகள்

வசதிகள்

இந்த யூனி சைக்கிளின் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைத்துக் கொள்ள முடியும். எனவே, ஆண், பெண் என இருபாலரும் எளிதாக பயன்படுத்த முடியும்.

அம்சங்கள்

அம்சங்கள்

ஷாக் அப்சார்பர், யூனிசைக்கிளின் இயக்கத்தை பற்றிய தகவல்களை அளிக்கும் ஆன்போர்டு இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே ஆகியவையும் உண்டு. முன்புறம் சாய்த்து பைக்கை நிறுத்தி வைக்கலாம்.

சீதோஷ்ண நிலை

சீதோஷ்ண நிலை

இந்த பைக் முழுவதும் மிக சிறப்பாக மூடப்பட்ட நிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நேரத்தில் வழுக்குத் தரைகளில் கூட பாதுகாப்பாக செல்வதற்காக விசேஷ டயர் பொருத்தப்பட்டிருக்கிறது.

விலை

விலை

5,300 டாலர் விலையில் இந்த ரைனோ யூனிசைக்கிள் விற்பனைக்கு கிடைக்கிறது.

முன்பதிவு

முன்பதிவு

இந்த பைக்கிற்கு 150 டாலர் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளளாம். முன்பதிவை ரத்து செய்தால் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2014, 17:14 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+