அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்கில் நிற்கும் சச்சினுக்கு சொந்தமான 2 போர்ஷே கார்கள்.. இந்த கிட்டோட விலை இவ்ளோவா!

சச்சின் டெண்டுல்கர் மிகப் பெரிய கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதேபோல், வாகனங்கள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அவர் காட்சியளிக்கின்றார். இது ஒரு சிலருக்கு புதிதாக தெரியலாம். ஆனால், சச்சினை தீவிரமாக ஃபாலோ செய்பவர்களுக்கு இது தெரிந்த தகவலை.

சச்சின் இடத்தில் ஏகப்பட்ட விலை உயர்ந்த மற்றும் அரிய கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவையே அவர் எத்தகைய கார் ஆர்வலர் என்பதற்கு சான்றாக இருக்கின்றன. இந்த நிலையிலேயே, அவருக்கு சொகுசு மற்றும் சூப்பர் கார்கள் மீதிருக்கும் ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sachin tendulkar porsche

சச்சினுக்கு சொந்தமானது என இரண்டு போர்ஷே கார்களின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இரண்டும் ஓர் நிலத்தடி பார்க்கிங்கில் நின்றுக் கொண்டிருக்கும் படங்களே தற்போது வெளியாகி உள்ளன. போர்ஷே 992 991 டர்போ மற்றும் கேயன்னே டர்போ இந்த இரண்டு கார்களையே சச்சனின் வைத்துள்ளார்.

இந்த கார்களும் டெக்-ஆர்ட் பாடி கிட்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. இது கார் ஆர்வலர்களின் கவனத்தை மேலும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த இரண்டும் போர்ஷேவின் மிக சிறந்த தயாரிப்புகள் ஆகும். இந்த இரண்டு கார்களும் அதீத திறனை வெளிப்படுத்தக் கூடியவை ஆகும்.

Sachin tendulkar porsche side view

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் வெறும் 3 செகண்டுகளிலேயே இந்த கார்கள் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தைத் தொட்டுவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் காரையே சச்சின் வைத்திருக்கின்றார். அதேவேளையில், இந்த இரண்டு கார்களில் போர்ஷே 911 டர்போ எஸ் மாடலை சச்சின் யூஸ்டு மார்க்கெட்டில் இருந்து வாங்கி இருக்கின்றார்.

ஆமாங்க, சச்சின் இந்த காருக்கு இரண்டாவது ஓனர் ஆவார். இந்த காரை 2021 ஆம் ஆண்டிலேயே அவர் வாங்கினார். அவர் வாங்கிய போது அந்த கார் குளாஸ் பிளாக் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது அந்த நிறத்தை சச்சின் மாற்றி இருக்கின்றார்.

Sachin tendulkar porsche rear

அத்துடன் டெக்-ஆர்ட் பாடி கிட்டாலும் கார்களை அவர் அலங்கரித்து இருக்கின்றார். இத்துடன் காரின் வெளிப்புறத் தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக ஃபோர்ஜட் அலாய் வீல்களையும் அழர் பயன்படுத்தி இருக்கின்றார். இந்த கிட்டின் விலை மட்டுமே ரூ. 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

இதனால்தான் இந்த இரு கார்களும் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இந்த கிட் காரின் அழகிற்கு கூடுதல் அழகைச் சேர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது அல்லது. காரின் செயல் திறனை அதிகரிக்கவும் இது உதவும். இதனால்தான் இந்த அம்சத்தை பல லட்ச ரூபாய் செலவிட்டு தன்னுடைய இரு போர்ஷே கார்களிலும் சச்சின் பொருத்தி இருக்கின்றார்.

போர்ஷே 992 911 டர்போ எஸ் காரில் ட்வின் டர்போசார்ஜட் 6 சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 650 பிஎஸ் மற்றும் 800 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிமீ ஆகும்.

இதேபோல், இந்த கார் வெறும் 2.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இந்த காரை போலவே அதிக திறனை வெளியேற்றக் கூடியதே போர்ஷே கேயன்னே டர்போ. இந்த காரும் டெக்-ஆர்ட் கிட்டால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதன் விலை ரூ. 1.93 கோடிக்கும் அதிகம் ஆகும். இது ஓர் சொகுசு எஸ்யூவி ரக காராகும்.

இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 550 பிஎஸ் மற்றும் 770 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 286 கிமீ ஆகும். மேலும், வெறும் 4.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சச்சின் டெண்டுகல்கர் இடத்தில் இதுபோன்று இன்னும் ஏகப்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவர் பிஎம்டபிள்யூ பிராண்டின் பிராண்ட் அம்பாசிடர் என்பதால் அவரிடத்தில் பிஎம்டபிள்யூ-வின் விலை உயர்ந்த சொகுசு மற்றும் சூப்பர் கார்கள் மிக அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 19, 2023, 23:56 [IST]
English summary
Sachin s own porsche cars decked out with techart body kit
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X