கோடி ரூபாயில் கார் வாங்கி வைத்திருந்தாலும், சச்சினிற்கு மாருதி 800 தான் பெருசு! ஏன் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத வீரர் சச்சின் டெண்டுல்கர், இவர் இன்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சச்சின் எந்த அளவிற்கு கிரிக்கெட்டில் பிரபலமோ அதே அளவிற்கு அவர் வைத்திருக்கும் கார்களுக்காவும் பிரபலம்.

கிரிக்கெட் வீரர் சச்சின் ஏகப்பட்ட சூப்பரான கார்களை சொந்தமாக வைத்துள்ளார். இவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்தியாவின் பிராண்ட் அம்பாஸிட்டராக இருக்கிறார். இவர் சொந்தமாக வைத்திருக்கும் கார்களை பற்றி விரிவாகக் காணலாம் வாருங்கள்.

Sachin Tendulkar 50th Birthday

மாருதி 800: 1980களின் இறுதியில் சச்சின் முதன் முதலில் வாங்கிய கார் இந்த மாருதி 800, இந்த காரை அவர் விற்பனை செய்துவிட்டதாகவும், தற்போது இந்த காரை தேடி வருவதாகவும் புரளிகள் கிளம்பின. ஆனால் சச்சின் இந்த காரை இன்றும் தன்னுடன் தான் வைத்திருக்கிறார். இவர் இந்த காரை ஒரு செண்டிமென்டாக வைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த காரை புதுப்பித்து அவர் பயன்படுத்திய வீடியோ எல்லாம் வைரலாக பரவியது.

பிஎம்டபிள்யூ ஐ8: பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாஸிட்டராக சச்சின் இருக்கிறார். இதனால் இவரிடம் பிஎம்டபிள்யூ கார்கள் அதிகம். இப்படியாக சச்சினின் கராஜில் பிஎம்டபிள்யூ ஐ8 கார் இருக்கிறது. இந்த கார் கஸ்டம் சிவப்பு கலரில் இதன் பாடி உருவாக்கப்பட்டுள்ளது. டிசி டிசைன்ஸ் இதன் படியை இப்படி உருவாக்கியுள்ளது. இந்த கார் 357 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும்.

Sachin Tendulkar 50th Birthday

பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் 760 எல்ஐ: சச்சினிடம் இருக்கும் சிறந்த கார்களில் இந்த 7 சிரீஸ் 760 எல்ஐ காரும் ஒன்று இந்த கார் 6.5 லிட்டர் வி12 ட்வின் டர்போ இன்ஜினை கொண்டது. இது 601 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் ஆல்வீல் ஸ்டியரிங் அம்சம் கொண்டது. இந்த கார் பிரிமியம் செடான் ரக கார். ஆல் வீல் ஸ்ரியரிங் இருப்பதால் குறுகலான சாலையில் கூட எளிதாகத் திரும்பிச் செல்லும் திறன் கொண்டது.

பிஎம்டபிள்யூ எம்6 கிரான் கூபே: இப்த எம் 6 கிரான் கூபே கார் சச்சினிற்கு ஸ்பெஷலான கார் இந்த காரை இந்தியாவிற்கு வாங்கிய முதல் இந்தியர் இவர் தான். இந்த கார் அரிதான ஃப்ரோஸன் சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறம் சர்வதேச அரங்கில் மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் சச்சினிற்காகத் தனித்துவமாக பெயிண்ட் செய்யப்பட்டது.

Sachin Tendulkar 50th Birthday

பிஎம்டபிள்யூ எம் 5 30 ஜாஹ்ரே: பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வேகமான கார் இது, இந்தியாவில் சச்சினிடம் மட்டும் தான் இந்த கார் இருக்கிறது. உலகம் முழுவதும் வெறும் 300 கார்கள் தான் தயாரிக்கப்பட்டது. இது எம்5 மாடல் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும்விதமாக இது தயாரிக்கப்பட்டது. இந்த கார் 5ம் தலைமுறை எஃப் 10 மாடல் காராக இருக்கிறது. இந்த கார் 4.4 லிட்டர் வி8 இன்ஜின் உடன் 600 எச்பி பவரை வழங்குகிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4 நொடியில் எட்டி பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம்50டி: இந்த கார் இந்தியாவில் விற்பனையிலேயே இல்லை. சச்சினிற்காக இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 எம் 50டி கார் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த கார் லேதர் சீட்கள், லேதர் டேஷ்போர்டு, கார் முழுவதிலும் எம் பேட்ஜிங், 3 டர்போ சார்ஜ் கொண்ட 6 சிலிண்டர் இன்லைன் இன்ஜின் இந்த காரில் கொடுத்தப்பட்டுள்ளது. இது 400 பிஎஸ் பவரையும் 760 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

போர்ஷே 911 டர்போ எஸ்: சச்சினிடம் கருப்பு நிற போர்ஷே 911 டர்போ எஸ் கார் இருக்கிறது. இந்த காரில் ட்வின் டர்போ சார்ஜ்டு, 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 650 பிஎஸ் பவரையும், ௮௦௦ என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 8 ஸ்பீடு பிடிகே ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை கொண்டுள்ளது. இது 300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டது. 100 கி.மீ வேகத்தை வெறும் 3 நொடியில் எட்டி பிடித்துவிடும்.

ஃபெராரி 360 மடோனா: சச்சின் டெஸ்ட் போட்டியில் 29வது சதத்தை நிறைவு செய்ததற்காக பியட் நிறுவனம் இந்த ஃபெராரி 360 மோடானா காரை அவருக்குப் பரிசளித்தது. இதை எஃப்1 ரேஸர் மைக்கேல் ஸ்கூமேச்சர் இவருக்குத் தனது கையால் இந்த பரிசை சச்சினிற்கு அளித்தார்.

வால்வோ எஸ் 80: கடந்த 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சச்சின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே போட்டியில் 200 ரன்களை கடந்தது, மேன் ஆஃப் தி சிரீஸ் பெற்றதற்காக இந்த எஸ் 80 காரை வால்வோ நிறுவனம் இவருக்குப் பரிசளித்தது. இந்த கார் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டது. இந்த கார் 205 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

More from DriveSpark

Article Published On: Monday, April 24, 2023, 12:40 [IST]
English summary
Sachin tendulkar 50th birthday special his car collection maruti 800 to bmw i8
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X