பணத்தை பெருசா பாக்குறது இல்லபோல.. குடும்பத்தோட பயணிக்க சச்சின் வாங்கிய புதிய காரோட விலை இவ்ளோ அதிகமா!

மிக சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரை புதிதாக வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமல்ல வாகனங்களை அதிகம் நேசிப்பதற்கும் பெயர்போனவராக சச்சின் அறியப்படுகின்றார். இதற்கு அவரிடத்தில் இருக்கும் ஆடம்பர கார்களே சான்று. சச்சின் இடத்தில் இருக்கும் கார்களை எண்ணுவதற்கு ஒருவரின் கைகளில் இருக்கும் விரல்கள் போதாது. அந்த அளவிற்கே அதிக எண்ணிக்கையில் கிரிக்கெட் விளையாட்டூ வீரர் சொகுசு மற்றும் ஆடம்பர வகை கார்களை பயன்படுத்தி வருகின்றார்.

இந்த நிலையிலேயே தற்போது அவர் மேலும் ஓர் புதிய சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் இப்போது வாங்கி இருப்பது புத்தம் புதிய லேண்ட் ரோவர் ரேஞ்ச் எஸ்வி எடிசன் (Land Rover Range Rover SV Edition) ஆகும்.

Sachin buys range rover sv edition

இந்த காரை அவர் வாங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக, அக்காரில் சச்சின் வீட்டார் சிலருடன் பயணிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இதுவே அவர் இந்த காரில் காட்சியளிப்பது முதல் முறையாகும். இதற்கு பின்னர் அவர் இந்த காரில் அடிக்கடி காட்சியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சச்சின் புதிதாக வாங்கி இருக்கும் ரேஞ்ச் ரோவர் எஸ்வி எடிசன் கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 4 கோடி வரை இருக்கும் என நம்பப்படுகின்றது. ரேஞ்ச் ரோவர் கார் மாடலின் வழக்கமான வெர்ஷனே 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Range rover sv edition

இது சற்றே அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய எடிசன் ஆகும். எனவே விலையிலும் வழக்கமான பதிப்புகளைக் காட்டிலும் சற்று காஸ்ட்லியாகவே அது காட்சியளிக்கின்றது. விலைக்கு ஏற்ப ஆடம்பர அம்சங்களையும் அது மிக அதிகளவில் இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

மிக முக்கியமாக பயணத்தை மிகுந்த சுவாரஷ்யமானதாக மாற்றக் கூடிய அம்சங்கள் மிக மிக தாராளமாக இந்த கார் மாடலில் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக, பிவி ப்ரோ ஓஎஸ் வசதிக் கொண்ட 13.2 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்கள் எல்லாம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுதவிர, குரலுக்கு கட்டுப்படும் அம்சம், ஹெட்-அப் திரை, 4 ஜோன் ஆட்டோமேட்டிக் எச்பிஏசி, டிஜிட்டல் ஆடியோ பிராட்காஸ்ட் வசதி, மற்றும் வயர் லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை இணைக்கும் வசதி போன்ற பல சிறப்புகளை இந்த கார் மாடலில் லேண்ட் ரோவர் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, பிரீமியம் மெரிடியன் சவுண்டு சிஸ்டம், மசாஜ், கூல் மற்றும் ஹீட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று பலதரப்பட்ட சொகுசு வசதிகளைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே பணக்காரர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாக ரேஞ்ச் ரோவர் காட்சியளிக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் சச்சின் இந்த காரை வாங்கி இருக்கின்றார். இந்த காரை அவர் வாங்கியிருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இதுபோன்று இன்னும் பல கார் மாடல்கள் சச்சினிடத்தில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சச்சின் இடத்தில் அதிக எண்ணிக்கையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆடம்பர கார்களே பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவற்றின் வரிசையில் அவர் தற்போது புதிதாக லேண்ட் ரோவரின் தயாரிப்பையும் இணைத்திருக்கின்றார். இந்த காரை குடும்பத்துடன் பயணிக்க வேண்டும் என்கிற நோக்கில் அவர் வாங்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 4, 2025, 19:10 [IST]
English summary
Sachin tendulkar acquires new range rover sv edition for rs 5 crore
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+