சச்சின் இந்த காரால இப்படி டிரெண்டாகுவாருனு யாருமே எதிர்பார்க்கல.. அவரு வாங்கிய சொகுசு கார் இவ்ளோ வேகமா போகுமா!

சச்சின் டெண்டுல்கர் மிக சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதேபோல், இவர் ஓர் மிகப் பெரிய ஆடம்பர கார் காதலரும் ஆவார். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரிடத்தில் ஏகப்பட்ட கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவர் தற்போது மேலும் ஓர் புதிய சொகுசு காரை தன்னுடை கார் கலெக்சனில் சேர்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் வாயிலாக மீண்டும் ஒரு முறை தான் ஓர் மிகப் பெரிய கார் பிரியன் என்பதை இந்த உலகிற்கு அவர் உறுதி செய்திருக்கின்றார்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series) சொகுசு கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலின் எம்340ஐ எக்ஸ்-டிரைவ் (BMW M340i xDrive.) தேர்வையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 74.90 லட்சம் ரூபாய் ஆகும்.

Sachin tendulkar expands his luxury car collection

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் ஆன்-ரோடு விலை ரூ. 90 லட்சத்தை நெருங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய ஆடம்பர வாகனத்தையே தனக்கு சொந்தமானதாக மாற்றியிருக்கின்றார் சச்சின் டெண்டுல்கர். மேலும், இந்த காரில் அவர் சமீபத்தில் விமான நிலையம் வந்திருக்கின்றார்.

இந்த நிகழ்வின் வாயிலாகவே இந்த காரை சச்சின் வாங்கி இருப்பது உறுதியாகி இருக்கின்றது. மிக மிக அதிக சொகுசு மற்றும் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய செடான் ரக கார் மாடலே 3 சீரிஸ் எம்340ஐ எக்ஸ்-டிரைவ் ஆகும். மிக முக்கியமாக வளைவான திரை ஒன்றை இந்த காரில் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கும்.

அது காரின் உட்பக்கத்திற்கு மிகுந்த அழகை சேர்க்கும் விதமாக இருக்கின்றது. இத்துடன், பிஎம்டபிள்யூ செயலி, ஹெட்-அப் திரை மற்றும் ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமில்லைங், ரிவர்ஸ் செய்யும் அசிஸ்ட் செய்யும் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, டிஜிட்டல் சாவி, இன்டெலிஜன்ட் பெர்சனல் அசிஸ்டன்ட், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், ஹர்மேன் கர்டோனஅ சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் இந்த காரில் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது. இத்துடன், அதிக ஆடம்பர அம்சங்களை விரும்பும் சச்சின் போன்ற பிரபலங்களைக் கவரும் விதமாக இந்த காரில் இன்னும் தனித்துவமான சொகுசு வசதிகள் பலவற்றை வழங்கி இருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 3.0 லிட்டர் பி58 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 370 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 253 கிமீ ஆகும். இதுமட்டுமல்ல இதனால் வெறும் 4.4 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட் விளையாட்டின்மீது கொண்டிருப்பதைபோலவே சொகுசு கார்கள் மீதும் அதீத காதல் கொண்டவராக சச்சின் டெண்டுல்கர் காட்சியளிக்கின்றார். இதற்கு சான்றாக அவரிடத்தில் லம்போர்கினி உருஸ், பென்ஸ் சிஎல்ஏ ஏஎம்ஜி, போர்ஷே கேயன்னே டர்போ ஜிடி, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் ஐ8 உள்ளிட்ட கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதுதவிர, ஃபெர்ராரி 360 மாடெனா மற்றும் நிஸான் ஜிடி-ஆர் போன்ற அதிக ஆற்றளை வெளிப்படுத்தும் கார் மாடல்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுமட்டுமல்ல இன்னும் சில வெளியுலகம் அறியாத கார் மாடல்களும் அவரிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே புதிதாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரையும் அவர் வாங்கி இருக்கின்றார். மேலும், இந்த காரை வாங்கியதன் விளைவாக தற்போது சச்சின் வாகன உலகின் டிரெண்டிங் நபராக மாறியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 21, 2024, 15:20 [IST]
English summary
Sachin tendulkar expands his luxury car collection with new bmw m340i luxury sedan
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+