வீரேந்தர சேவாக்கிற்கு ஆடம்பர கார் மாடலை பரிசளித்த சச்சின்... ட்விட்டரில் சேவாக் உருக்கம்..!!

Written By:

இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி, பல சிக்ஸுகள், ஃபோர்களால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் வீரேந்தர சேவாக்.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

சமீபகாலமாக சக போட்டியாளர் ஒருவருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீரேந்திர சேவாக் நடத்திய கலந்துரையாடல் ஊடக வெளிச்சம் வரும் அளவிற்கு சென்றது.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

இந்த நிலையில் வீரேந்தர சேவாக்கின் ட்விட்டர் பக்கம் மீண்டும், வைராலியுள்ளது. ஆனால் அது நல்ல ஒரு செய்திக்காக என்பது இதில் இருக்கும் உண்மை.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

கடந்த 26ம் தேதி, சேவாக் ட்விட்டரில் பிஎம்டபுள்யூ 730 எல்.டி உடன் இருக்கும் தனது புகைப்படத்துடன் கூடிய ஒரு தகவலை பதிவிட்டுள்ளார்.

அதில் சச்சின் டெண்டுல்கருக்கும், பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனத்திற்கும் நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

சிறுது நாட்களுக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் வீரேந்தர் சேவாக்கிறகு புதிய பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரை பரிசளித்துள்ளார்.

இதில் உற்சாகமான சேவாக், உடனே சச்சின் மற்றும் பிஎம்டபுள்யூ நிறுவனத்திற்கு தனது நன்றிகளை உருக்கமாக கூறியுள்ளார்.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

இந்தியாவில் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.1.16 கோடி விலை பெறும் இந்த கார், பிஎம்டபுள்யூ-வின் பிரபலமான மாடலாகும். சேவாக்கிற்கு சச்சின் வழங்கிய இந்த பரிசும், அதற்காக சேவாக் நன்றி தெரிவித்த பதிவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

துவக்க நிலையில் இருந்து 100கி.மீ வேகத்தை வெறும் 6.2 விநாடிகளில் எட்டும் இந்த காரில் 6 சிலிண்டர் டீசல் எஞ்சின் உள்ளது, இதன்மூலம் 261 பிஎச்பி பவர் மற்றும் 620 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

துரிதமான செயல்பாட்டிற்காக பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரின் எஞ்சின் 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிய்க் தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

உலகளவில் பிரபலமான ஆடம்பர கார்களில் ஒன்றான பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் ’சிலார்’ என்ற நவீன கட்டமைப்பின் மூலமாக தயாரானது.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

சைகை கட்டுப்பாடு, ரிமோட் பார்க் உதவி, 3டி கிராபிக்ஸ் , ஹெட்ஸ் அப் டிஸ்பிளே யூனிட் (HUD) என பல்வேறு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த காரில் உள்ளன.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

மிகவும் நுட்பமான தொடுதிரை அமைப்பை இந்த கார் பெற்றிருக்கிறது. இதன்மூலம், காருக்குள் நாம் செல்லாமலும், ஸ்டீயரிங் வீலை பயன்படுத்தாமலும் பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் 730எல்டி காரை பார்க் செய்ய முடியும்.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக் இந்த காரை சச்சினடமிருந்து பரிசாக பெற்றிருப்பதற்கு, அவரது ரசிகர்கள் பலர் தொடர்ந்து ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சச்னிடமிருந்து ஆடம்பர காரை பரிசாக பெற்ற சேவாக்..!!

டெல்லி சாலைகளில் வீரேந்தர் சேவாக் பிஎம்டபுள்யூ 7 சீர்ஸ் காருடன் நகர்வலம் மேற்கொள்வதை விரைவில் ரசிகர்கள் காண ஆவலாக இருப்பதாக, அவர் பதிவிட்டுள்ள தகவலுக்கான கமண்ட் பாக்ஸ்களில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Cricketer Sehwag Thanks Sachin Tendulkar For BMW 7 Series Gift. Click for Details...
Story first published: Thursday, September 28, 2017, 11:36 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark