நடுரோட்டில் ரசிகருக்கு சர்பிரைஸ் கொடுத்தது அந்த பிரபலமா!! சாகும் வரையில் இதை மறக்க மாட்டாரு!

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும். அத்தகைய வாய்ப்பை ஒருவர் சர்வ சாதாரணமாக சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது பெற்றுள்ளார். இந்த சம்பவத்தை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்களுக்கு கூட சச்சின் டெண்டுல்கரை பற்றி தெரிந்திருக்கும். மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டு உள்ளது. இந்த வீடியோவை பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

sachin meets fan on road

இந்த வீடியோவில், மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிந்துக் கொண்டு ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த ரசிகரிடம் சச்சின் வழிக் கேட்டு செல்வதை காணலாம். அதாவது, சச்சின் டெண்டுல்கர் சென்று கொண்டிருந்த காருக்கு முன்னால் ஒருவர் சச்சின் பெயர் மற்றும் எண் 10 பொறிக்கப்பட்ட நீல நிற ஜெர்சியை அணிந்து சென்றுள்ளார்.

இதனை காரினுள் இருந்து கண்ட சச்சின் டெண்டுல்கர் உடனே அவரை வழி மறித்தப்படி தனது காரை நிறுத்தி தான் செல்வதற்கான வழியை விளையாட்டாக கேட்டுள்ளார். தன்னை யாரோ அழைப்பதாக திரும்பிய அந்த சச்சின் ரசிகருக்கு காரினுள் இருந்து தன்னை அழைத்தது சச்சின் டெண்டுல்கர் என தெரிந்ததும் அவரால் கொஞ்ச நேரத்திற்கு பேசவே முடியவில்லை.

sachin meets fan on road

உணர்ச்சி வசத்தில் என்ன செய்வது என தெரியாமல், சச்சினை நோக்கி கையெடுத்து கும்பிடுவதையும், மகிழ்ச்சியை அடக்க முடியாமல் சந்தோஷத்தில் சிரித்தப்படி அந்த நபர் இருப்பதையும் வீடியோவில் காணலாம். மேலும், அந்த நபரை திரும்ப சொல்லி அவரது ஜெர்சியில் பொறிக்கப்பட்ட தனது பெயரையும் வீடியோவில் சச்சின் காட்சிப்படுத்தி உள்ளார்.

அந்த ரசிகருடன் சச்சின் கைக்குலுக்கி கொள்வதையும் வீடியோவில் காணலாம். அந்த நபர் தனது மகன் உங்களது மிக பெரிய ரசிகன் என கூற, அவர் காட்டிய தனது மகனின் டயரியில் சச்சின் தனது ஆட்டோகிராஃபை போட்டுள்ளார். இந்த காட்சிகள் யாவும் பார்ப்போரை கவரக்கூடியதாக உள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "டெண்டுல்கரை சந்தித்த சச்சின்.

sachin meets fan on road

என் மீது இவ்வளவு அன்பு பொழிவதை பார்க்கும்போது என் இதயம் மகிழ்ச்சியில் நிறைகிறது. எதிர்பாராத மூலைகளில் இருந்து கிடைக்கும் மக்களின் அன்புதான் வாழ்க்கையை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது" என சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். பயணத்தின்போது ஹெல்மெட் அணிந்து இருந்ததற்காக அந்த நபரை சச்சின் பாராட்டுவதையும் வீடியோவில் காண முடிகிறது.

மேலும், தான் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பாதுகாப்புக்காக எப்போதும் சீட்பெல்ட் அணிவதையும் வீடியோவில் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்துள்ளார். சச்சினிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. ஆனால், 2022ஆம் ஆண்டில் மும்பையில் இருந்து கோவாவிற்கு கியா கேரன்ஸ் காரில் சச்சின் பயணித்த வீடியோ இணையத்தில் கவனத்தை பெற்றது.

sachin meets fan on road

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு பல சொகுசு கார்கள் இருப்பினும் கியா கேரன்ஸ் போன்ற விலை குறைவான காரில் பயணிக்க விரும்பும் ஓர் எளிய மனிதரை நேரில் கண்டதை நிச்சயமாக இந்த நபர் தனது வாழ்நாளில் மறக்க மாட்டார். அத்துடன், இந்த நபரின் மகனுக்கும் இந்த நிகழ்வு வாழ்வில் மறக்க முடியாததாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 5, 2024, 17:14 [IST]
English summary
Sachin tendulkar meets mumbai indians fan on road check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X