போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வது நமது தலையாக கடமை. ஆனால் நம்மில் பலர் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. மாறாக போட்டோ, வீடியோ எடுப்பது, அதனை சமூக வலை தளங்களில் பகிர்வது என நடந்து கொள்கின்றனர். இது உண்மையிலேயே வருத்தம் அளிக்க கூடிய ஒரு செயல்பாடு என்பதில் சந்தேகம் இல்லை.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இன்னும் சிலரோ சாலை விபத்துக்களை பார்த்தால் நமக்கேன் வம்பு என்ற ரீதியில் அப்படியே நகர்ந்து சென்று விடுகின்றனர். அந்த சம்பவத்தை சட்டை செய்வதே இல்லை. சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதற்கு பலர் தயங்குவதற்கு, வழக்கு, காவல் நிலையம், நீதிமன்றம் என அலைய நேரிடும் என்ற அச்சம்தான் முக்கியமான காரணமாக உள்ளது.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய கூடாது என இந்தியாவின் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான் இந்த உத்தரவிற்கு காரணம். ஆனால் இந்திய மக்கள் மத்தியில் இன்னமும் கூட ஒரு வித அச்ச உணர்வு இருந்து கொண்டுதான் உள்ளது.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

எனவே இந்த அச்சத்தை போக்குவதற்காக, சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு அரசாங்கம் பரிசு தொகைகளை அறிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக தற்போது நிலைமை ஓரளவிற்கு மேம்பட்டுள்ளது என்று சொல்லலாம். இந்த சூழலில், சாலை விபத்தில் சிக்கிய பெண் ஒருவருக்கு உதவி செய்ததன் மூலம் காவலர் ஒருவர் தற்போது அனைவர் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்தே அவருக்கு பாராட்டு கிடைத்துள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள். மும்பையை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரைதான் சச்சின் டெண்டுல்கர் தற்போது பாராட்டியுள்ளார். சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை நானாவதி மருத்துவமனைக்கு விரைவாக அழைத்து சென்றதன் மூலம், அந்த பெண்ணின் உயிரை சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் காப்பாற்றியுள்ளார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் சச்சின் டெண்டுல்கரின் தோழி ஆவார். இதற்காகவும், துரிதமாக செயல்பட்டு மற்றவர்களுக்கு முன் மாதிரியாக மாறியதற்காகவும்தான் போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிளை சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்று பாராட்டியுள்ளார். இந்த சாலை விபத்து கடந்த நவம்பர் 30ம் தேதி நடைபெற்றுள்ளது.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அப்போது நிருபமா சவான் என்ற பெண் சாலை விபத்தில் சிக்கினார். சான்டாக்ரூஸ் (மேற்கு) பகுதியில் இந்த சாலை விபத்து நடைபெற்றது. அந்த சமயத்தில் சுரேஷ் தும்சே என்ற போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் அங்கு பணியில் இருந்தார். அவர் உடனடியாக நிருபமா சவானை நானாவதி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கும் அவர் தகவல் அளித்துள்ளார். இதன்பேரில் அந்த பெண்ணின் கணவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். இதற்கு சில நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் இருந்து போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் சுரேஷ் தும்சேவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அப்போது பாதிக்கப்பட்ட பெண் நடக்க கூடிய நிலையில் இருப்பதாக கூறிய அவரது கணவர், விரைவாக மருத்துவமனையில் சேர்த்ததற்கு சுரேஷ் தும்சேவிற்கு நன்றி தெரிவித்தார். இந்த தகவல் கிடைத்தவுடன் சுரேஷ் தும்சே பணியாற்றும் சான்டாக்ரூஸ் காவல் நிலையத்திற்கு சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்றார். இதன்பின் சுரேஷ் தும்சேவிற்கு, சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்தார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மேலும் உங்களை போன்ற மனிதர்களால்தான் உலகம் அழகான இடமாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறினார். நடந்த சம்பவத்தையும், போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் சுரேஷ் தும்சேவை சந்தித்து நன்றி தெரிவித்ததையும் சச்சின் டெண்டுல்கர் தனது முகநூல் பக்கத்தில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விரிவாக எழுதியுள்ளார். இதனை மும்பை காவல் துறையும் தற்போது சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளது.

போலீஸ் ஸ்டேஷனுக்கே நேரில் சென்று கான்ஸ்டபிளை சந்தித்த சச்சின்... காரணம் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மேலும் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார். சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு சுரேஷ் தும்சே போல் நாமும் உதவி செய்ய வேண்டும். இந்த சிறிய மனித நேயம் பலரின் உயிரை காப்பாற்றும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sachin tendulkar meets mumbai police traffic constable here is the reason why
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X