இது யார் யூஸ் பண்ண கார் என்று தெரிஞ்சா உடனே வாங்கிடுவீங்க!! நம்மளுக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்!

நடிகை சாவித்ரி பயன்படுத்திய சோப்பு டப்பா என ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்காக கூறுவதை போன்று விஐபி-கள் பயன்படுத்திய பொருட்கள் என்றாலே அவை பழையதாக இருப்பினும் அவற்றை வாங்குவதற்கு ஒரு பெரிய கூட்டமே இருக்கும். அப்படியிருக்கையில், ஒரு பிரபலமான கிரிக்கெட் வீரர் பயன்படுத்திய சொகுசு கார் விற்பனைக்கு வருகிறது என்றால் அதனை வாங்க எவரொருவருக்கும் மனசு ஏங்கும். ஏனெனில், பொதுவாகவே செகண்ட்-ஹேண்டில் சொகுசு காரை வாங்க நிறைய பேர் விரும்புகின்றனர். ஏனென்றால், லக்சரி காரை புத்தம் புதியதாக வாங்க முடியவில்லை என்றாலும், குறைந்தப்பட்சம் செகண்ட் ஹேண்டில் ஆவது சொந்தமாக்கிக் கொள்வோம் என்பது பலரது மனநிலையாக உள்ளது.

அத்தகைய செகண்ட்-ஹேண்ட் லக்சரி கார், உலகம் முழுவதும் பிரபலமான ஒரு கிரிக்கெட் வீரரிடம் இருந்து விற்பனைக்கு வருகிறது என்றால், சொல்லவா வேண்டும்... உலகளவில் பிரபலமான அந்த கிரிக்கெட் வீரர் வேறு யாரும் இல்லை, கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

sachin owned car for sale

இதன் காரணமாகவே, டெண்டுல்கரிடம் ஏகப்பட்ட லக்சரியான பிஎம்டபிள்யூ கார்கள் உள்ளன. இந்த வகையில், இவரிடம் உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் என்கிற கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பிஎம்டபிள்யூ காரில் சில நிகழ்ச்சிகளில் சச்சின் டெண்டுல்கர் காட்சி தந்துள்ளார். சிவப்பு நிறத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காரை சச்சின் வைத்துள்ளார். இந்த சிவப்பு நிறத்தை மெல்போர்ன் சிவப்பு என பிஎம்டபிள்யூ அழைக்கிறது.

மும்பையில், பயன்படுத்தப்பட்ட லக்சரி கார்களை விற்பனை செய்யும் தொழிலை கவனித்துவரும் எக்ஸாடிக் கார்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கரின் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காரின் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த படங்களின் வாயிலாக பார்க்கும்போது, சச்சின் பயன்படுத்திய இந்த பிஎம்டபிள்யூ காரில் பெரிய அளவில் எந்த டொக்குகளும் இல்லை. இவ்வளவு ஏன்... காரில் கீறல்களை கூட எங்கேயும் பார்க்க முடியவில்லை.

sachin owned car for sale

காரில் எந்தவொரு குறையும் இல்லாமல், அனைத்து வசதிகளுடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காரை சச்சின் டெண்டுல்கர் வாங்கினார். இதன்படி, ஹார்மன் கார்டன் மியுசிக் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கும் பொழுதுப்போக்கு அம்சங்கள், மென்மையாக மூடக்கூடிய கதவுகள், நைட் விஷன் கேமராக்கள், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, பனோராமிக் சன்ரூஃப், சவுகரியமான ஹீட்டட் இருக்கைகள் உள்ளிட்டவை இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

இவை மட்டுமின்றி, காரை பார்க் செய்வதற்கான உதவிகள் மற்றும் ஆட்டோமேட்டிக் டெயில்கேட் உள்ளிட்ட வசதிகளையும் இந்த பிஎம்டபிள்யூ காரில் பெறலாம். காரின் வெளிப்பக்கத்தை போன்று உட்புறமும் சிவப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்பக்கத்தில் கிட்னி வடிவில் கிரில், புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன.

sachin owned car for sale

பிஎம்டபிள்யூ நிறுவனம் தொழிற்சாலையில் பொருத்திய அலாய் சக்கரங்கள் சச்சின் டெண்டுல்கரின் எக்ஸ்5 எம் காரில் இப்போதும் உள்ளன. ஆக மொத்தத்தில், இந்த காரை சச்சின் டெண்டுல்கர் மிகவும் கவனமாக பராமரித்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு இந்த பிஎம்டபிள்யூ காரில் சச்சின் சென்றுக் கொண்டிருந்த போது, அவர் வழி தவறி சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோவை கூட அந்த சமயத்தில் சச்சின் வெளியிட்டு இருந்தார்.

காரில் இருந்து வழிக்காட்டும் அமைப்பு செயல்படாமல் போனதன் காரணமாக அவ்வாறு நடந்தது. இதனால், காரை நிறுத்தி ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் வழிக்கேட்டு சச்சின் டெண்டுல்கர் சென்றார். இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காரில் 4.4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 560 பிஎச்பி மற்றும் 750 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு எம் ஸ்டெப்ட்ரானிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய கார் என்பதால், இதனை வாங்க நிறைய பேர் போட்டி போடுவார்கள். இதனால், இந்த பயன்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ காரை வாங்க பலத்த போட்டி இருக்கும். ஏனெனில், பெரிய, பெரிய செல்வந்தர்கள் கூட சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்களாக உள்ளனர். மேலும், இந்த கார் வெறும் 30,000கிமீ தொலைவிற்கு மட்டுமே ஓடியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 11, 2024, 17:59 [IST]
English summary
Sachin tendulkar owned bmw x5 m car came up for sale check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X