காரையும், காருக்குள் வந்தவரையும் பார்த்து ஷாக்கான கிரிக்கெட் உலகம்.. இந்த காரை அவ்வளவு சுலபமா பாக்க முடியாது!
லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றாக உருஸ் (Urus S) இருக்கின்றது. இந்த கார் மாடலையே சமீபத்தில் சாலையில் பார்த்த மும்பை வாசிகள் சிலர் மிரண்டு போயிருக்கின்றனர். இதற்கு அந்த கார் மட்டுமல்ல அந்த காருக்குள் வந்தவரும் ஓர் காரணமாவார்.
அப்படி யாரு அந்த காரில் வந்தது என்று தானே கேக்குறீங்க. அந்த காரில் வந்தவர் வேறு யாரும் இல்லைங்க கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர்தான் அவர். இவர் ஓட்டி வந்தது லம்போர்கினி உருஸ் மாடலிலேயே சற்று காஸ்ட்லியான வெர்ஷன் ஆகும். லம்போர்கினி உருஸ் எஸ் (Urus S) மாடலிலேயே அவர் காட்சி தந்திருக்கின்றனர்.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலையே ரூ. 4.18 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய மிரள வைக்கும் விலைக் கொண்ட கார் மாடலையே சச்சின் டெண்டுல்கர் தனக்கு சொந்தமானதாக வைத்திருக்கின்றார். இது சச்சின் டெண்டுல்கரின் கார் கராஜில் இருக்கும் மிக மிக விலையுயர்ந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
அதேவேளையில், சச்சினிடம் முதல் லம்போர்கினி தயாரிப்பு இதுதான் என கூறப்படுகின்றது. கிரிக்கெட் உலக ஜாம்பவானிடம் இருக்கும் பெரும்பாலான விலை உயர்ந்த கார் மாடல்கள் பிஎம்டபிள்யூ உடைய தயாரிப்பாகவே இருக்கின்றன. இவரே இந்த பிராண்டின் இந்தியாவிற்கான அம்பாசிடர் ஆவார். அதேவேளையில் இவரிடத்தில் இன்னும் வேறு சில பிராண்டுகளுடைய கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதில் ஒன்றாகவே லம்போர்கினி உருஸ் எஸ் இருக்கின்றது. இந்த லம்போர்கினி உருஸ் ப்ளூ எலியோஸ் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. அத்துடன், சில்வர் நிற அலாய் வீலும் இந்த காரையும் அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த அலாய் வீல்கள் 22 அங்குலம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
சச்சின் டெண்டுல்கர் இந்த காரை வாங்கியபோது இருந்ததைவிட இப்போது மிகவும் அழகானதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, மாடிஃபிகேஷன் வாயிலாக இந்த காரில் புதிதாக கார்பன் ஃபைபர் ஸ்பிளிட்டர் (carbon fiber front splitter), சைடு ஸ்கர்ட் (side skirts) மற்றும் ரியர் டிஃப்யூசர் (rear diffuser) ஆகியவை சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
தன்னுடைய லம்போர்கினி உருஸ் எஸ் காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றும் பொருட்டு இந்த மாடிஃபிகேஷன் வேலையை சச்சின் செய்திருக்கின்றார். இதேபோல் காரின் உட்பக்கத்திலும் சில மாடிஃபிகேஷன் வேலைகளை அவர் செய்திருக்கின்றார். ஆகையால், சொகுசு வசதியுடன் சேர்த்து இன்னும் மனம் மயக்கும் வாகனமாக சச்சினின் உருஸ் எஸ் மாறியிருக்கின்றது.
லம்போர்கினி நிறுவனம் கார் மாடலை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முன்னதாக உருஸ் பெர்ஃபார்மண்டே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அடுத்ததாகவே இந்த மாடலை விற்பனைக்குக் களமிறக்கியது. மிகவும் சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த கார் மாடலில் லம்போர்கினி நிறுவனம் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை வழங்கி இருக்கின்றது.
இத்துடன், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற அம்சங்கள் பல ரைடை ரம்மியமானதாக மாற்றும் பொருட்டு உருஸ் எஸ்-இல் லம்போர்கினி வழங்கி இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 666 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிமீ வேகம் ஆகும். மேலும், இதனால் வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும்.
இதேபோல், மணிக்கு 200 கிமீ வேகத்தை வெறும் 12.5 செகண்டுகளிலேயே அது தொட்டுவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதே லம்போர்கினி உருஸ் எஸ் ஆகும். இதையே சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கின்றார். இந்த காரில் சமீபத்தில் மும்பையில் வலம் வரும்போதே அவர் கேமிராவின் கண்களில் சிக்கி இருக்கின்றார். இந்த காரை மிகவும் அரிதினும் அரிதாக அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக அளவில் லம்போர்கினி நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக உருஸ் இருக்கின்றது. இந்தியாவில் இந்த காரை ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர்களுடன் சச்சினும் தற்போது இணைந்திருக்கின்றார். இது ஓர் உலகின் அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








