4 கோடி ரூபா காரை ஓட்டிக்கிட்டு போனது அவரா? டிரைவர் வெச்சிக்காம தானே ஓட்டினு போறாரே!

சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் (Cricket Player) ஆக உலகம் முழுக்க கவனத்தை பெற்றவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டை தாண்டி விலையுயர்ந்த கார்கள் மீதும் ஆர்வம் அதிகம்.

கிரிக்கெட்டில் வளர்ந்து வந்த சமயத்தில், தான் பயன்படுத்திய மாருதி சுஸுகி 800 (Maruti Suzuki 800) காரை இப்போதும் மறக்கவில்லை என பல பேட்டிகளின் போது சச்சின் டெண்டுல்கர் கூறியதை கேட்டிருப்பீர்கள். இதனாலோ என்னவோ... சச்சின் டெண்டுல்கருக்கு கார்கள் மீது தனி ஆர்வம் உண்டு.

sachin tendulkar

புதியதாக விலையுயர்ந்த கார்களை சச்சின் டெண்டுல்கர் வாங்குவதை நாம் சிலமுறை பார்த்துள்ள நிலையில், அவ்வாறு வாங்கிய நீல நிறத்திலான லம்போர்கினி உருஸ் எஸ் (Lamborghini Urus S) காரில் சச்சின் டெண்டுல்கர் தற்போது பொது வெளியில் காட்சி தந்துள்ளார். இதுதொடர்பான விபரங்கள் 'சிஎஸ்12 விலாக்ஸ்' (CS12 VLogs) என்கிற யூடியுப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.

சுமார் ரூ.4.2 கோடி மதிப்பாலான லம்போர்கினி உருஸ் எஸ் காரை மும்பையில் நெடுஞ்சாலை ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் ஓட்டி சென்றுள்ளார். பொதுவாகவே மும்பையில் விலையுயர்ந்த கார்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் உருஸ் எஸ் கார் அதன் பளிச்சிடும் நீல நிறத்தினால் தனியாக தெரிகிறது.

sachin tendulkar spotted in lamborghini urus s

சச்சின் டெண்டுல்கர் இந்த லம்போர்கினி காரை 2023ஆம் ஆண்டில் வாங்கினார். காரை வாங்கிய போதும் சச்சினின் இந்த லம்போர்கினி கார் நீல நிறத்தில்தான் டெலிவிரி (Delivery) பெறப்பட்டது. இந்த நீல நிறத்தை 'ப்ளூ எலெயோஸ்' என லம்போர்கினி நிறுவனம் அழைக்கிறது. டெலிவிரி பெற்று கடந்த 2 ஆண்டுகளில் இந்த காரில் தனது விருப்பத்திற்கு ஏற்ப சச்சின் சில மாற்றங்களை செய்துக் கொண்டார்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், லம்போர்கினி நிறுவனம் உருஸ் எஸ் காருக்கு சில்வர் நிறத்தில் அலாய் சக்கரங்களை வழங்குகிறது. அதனை சச்சின் 22-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் ஆக மாற்றிக் கொண்டார். அதேபோல், இந்த காரின் பின்பக்கத்தில் கார்பன் ஃபைபர் இறக்கை இருப்பதை காணலாம். உருஸ் எஸ் காரில் இவ்வாறான இறக்கையை லம்போர்கினி வழங்குவது இல்லை.

sachin tendulkar spotted in lamborghini urus s

இதனை லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்டே (Performante) காரில் இருந்து எடுத்து சச்சின் பொருத்தி உள்ளார். இவை மட்டுமின்றி, காரின் முன்பக்கத்தில் கார்பன் ஃபைபர் ஸ்பிளிட்டர், பக்கவாட்டில் கார்பர் ஃபைபர் சைடு ஸ்கிர்ட்ஸ் மற்றும் பின்பக்கத்தில் கார்பன் ஃபைபர் டிஃப்யூசர் உள்ளிட்டவையும் சச்சின் டெண்டுல்கரின் இந்த உருஸ் எஸ் காரில் பிரத்யேகமாக பொருத்தப்பட்டு உள்ளது.

இவற்றை யாவும் ஏதேனும் பிரபலமான கார் கஸ்டமைசேஷன் (Car Customisation) நிறுவனத்தில் இருந்துதான் சச்சின் டெண்டுல்கர் வாங்கியிருக்க கூடும். என்ஜினை பொறுத்தவரையில், லம்போர்கினி உருஸ் எஸ் காரில் பொருத்தப்படும் 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 666 பிஎஸ் மற்றும் 850 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் பிரபலமான உருஸ் ஆனது லம்போர்கினி உருவாக்கிய முதல் எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். லம்போர்கினி கார் என்றாலே தாழ்வான உடலமைப்பை தான் கொண்டிருக்கும் என்பதை கடந்து நிமிர்ந்த தோற்றத்தில் உருவாக்கப்பட்டதினாலேயே உருஸ் கார்களை பலரும் வாங்கிவரும் நிலையில், அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரும் இந்த காரை வாங்கி மும்பையில் மகிழ்ச்சி உடன் பயன்படுத்தி வருகிறார்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 28, 2025, 10:42 [IST]
English summary
Sachin tendulkar spotted while driving his lamborghini urus s car in mumbai highway
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X