விமானத்தில் மக்களோடு மக்களாக வந்தது அவரா!! உண்மை தெரிஞ்ச பின் பயணிகள் செய்த செயல் - வீடியோ வைரல்!

சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), விமானத்தில் மக்களுடன் மக்களாக எக்கானமி கிளாஸ் (Economy Class)-இல் பயணம் செய்துள்ளார். எக்கனாமி கிளாஸில் சச்சினை கண்டதும் பயணிகள், "சச்சின்... சச்சின்" என கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர். இதனால், விளையாட்டு மைதானம் போல் மாறிய அந்த விமானத்தினுள் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

சச்சின் டெண்டுல்கரை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் அளவிற்கு சுமார் 24 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, பல்லாயிரக்கணக்கான ரன்களை குவித்து வைத்துள்ளார். இப்போது கிரிக்கெட் விளையாடுவது இல்லை என்பதால், விரும்பிய இடங்களுக்கு சச்சின் ஜாலியாக சுற்றுலா சென்று வருகிறார்.

sachin on economy class flight

இந்த வகையில், சமீபத்தில் காஷ்மீருக்கு குடும்ப பயணமாக சச்சின் சுற்றுலா சென்றதை செய்திகள் பார்த்திருப்பீர்கள். மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா உடன் இந்த குடும்ப சுற்றுலாவை காஷ்மீரில் சச்சின் டெண்டுல்கர் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில், சச்சினின் கருப்பு நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் காஷ்மீரில் பனி குவியலில் சிக்கிக் கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகியது.

ஏனெனில், அந்த சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் காரினுள் இருந்தார். சச்சினின் ஃபார்ச்சூனர் காரின் முன் சக்கரங்கள் பனி குவியலில் சிக்கிக் கொண்டன. இதனால், மீட்பு பணிகளில் ஈடுப்பட்டவர்கள் காரின் முன் சக்கரங்களுக்கு முன் இருந்த பனி குவியலை அங்கிருந்து அகற்றுவதை அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் காண முடிந்தது. காஷ்மீருக்கு டெல்லி பதிவெண்ணை கொண்ட ஃபார்ச்சூனர் காரை சச்சின் டெண்டுல்கர் கொண்டு சென்றுள்ளார்.

sachin on economy class flight

இந்த சம்பவத்தின்போது, சச்சினின் காரை மீட்க சில இராணுவ வீரர்களும் உதவினர். சச்சினின் காஷ்மீர் பயண திட்டத்தில், ஸ்ரீநகர் - ஜம்மூ நெடுஞ்சாலையில் சார்சூ என்ற பகுதியில் அமைந்துள்ள கிரிக்கெட் பேட் செய்யும் தொழிற்சாலையை பார்வையிடுவதும் ஒன்றாக இருந்தது. இதற்காக, விமானத்தின் எக்கனாமி கிளாஸில் சச்சின் டெண்டுல்கர் பயணம் செய்துள்ளார்.

ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில் எந்த பகுதியில் இருந்து எந்த பகுதிக்கு விமானத்தின் எக்கனாமி கிளாஸில் சச்சின் பயணம் செய்துள்ளார் என்பது தெரியவில்லை. சச்சினை கண்டதும் விமானத்தினுள் இருந்தவர்களுக்கு ஆரம்பத்தில் இதனை நம்ப முடியவில்லை. சிலர், முற்றிலுமாக ஆச்சிரியத்தில் உறைந்துவிட்டனர். ஏனெனில், சச்சின் சமீப காலமாக அதிகளவில் சுற்றுலா இடங்களுக்கு செல்வதால், அவரது இந்த காஷ்மீர் பயணம் குறித்த செய்திகள் அதிகளவில் இணையத்தில் வெளியாகவில்லை.

sachin on economy class flight

இதனால், நிறைய பேருக்கு சச்சின் காஷ்மீருக்கு வந்துள்ள விஷயம் தெரியவில்லை. விமானத்தினுள் இருந்த பயணிகள், சச்சினை கண்டதும் "சச்சின்... சச்சின், சச்சின்... சச்சின்" என கிரிக்கெட் கிரவுண்ட் மோடில் கத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால், கொஞ்ச நேரத்தில் விமானம் கிரிக்கெட் மைதானமாக மாறிவிட்டது. இதனை விமானத்தினுள் இருந்த சிலர் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது.

திட்டமிட்டப்படி சார்சூ பகுதியில் உள்ள கிரிக்கெட் பேட் செய்யும் தொழிற்சாலையான எம்.ஜே ஸ்போர்ட்ஸை சச்சின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து எம்.ஜே ஸ்போர்ட்ஸின் ஓனர் முகமது ஷாகீன் கூறுகையில், "நாங்கள் கிரிக்கெட் மட்டைகள் தயாரிப்பதில் மும்முரமாக இருந்த போது, எங்கள் வாயிலில் ஒரு வாகனம் வந்துநின்றது. லிட்டில் மாஸ்டரையும், அவரது குடும்பத்தினரையும் கண்டு நாங்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தோம்" என்றார். பின், அங்கிருந்த இராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து சச்சின் சாலையில் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலேயே இருந்தாலும் காஷ்மீருக்கு சச்சின் டெண்டுல்கர் சுற்றுலா சென்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும். ஆதலால், காஷ்மீரில் உள்ள மக்களுள் நிறைய பேர் சச்சினை நேரில் இப்போதுதான் முதல்முறையாக பார்த்திருப்பார்கள். இதனால்தான், விமானம் என்பதையும் மறந்து சச்சினை பார்த்ததும் மைதானத்தில் அவரை உற்சாகப்படுத்துவதை போன்று கத்தியுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 22, 2024, 13:20 [IST]
English summary
Sachin tendulkar traveled on economy class flight turned into cricket stadium
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X