போலி ஹெல்மெட் விற்பனையை தடுக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சச்சின் கடிதம்

சச்சின் தெண்டுல்க்கர் சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் போலி ஹெல்மெட் தயாரிப்பாளர்களை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

By Balasubramanian

"கிரிக்கெட் உலகின் கடவுள்" என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்க்கர் சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் போலி ஹெல்மெட் தயாரிப்பாளர்களை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

போலி ஹெல்மெட் விற்பனையை தடுக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சச்சின் கடிதம்

அந்த கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : "பொதுமக்களின் நலனுக்காக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து உழைத்து கொண்டிருப்பதை நான் அறிகிறேன். இந்த நேரத்தில் போலி ஹெல்மெட் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு கொள்கிறேன்.

போலி ஹெல்மெட் விற்பனையை தடுக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சச்சின் கடிதம்

மக்கள் போலி ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த ஹெல்மெட்டையும், குறைந்த தரத்திலான ஹெல்மெட்டையும் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களை விபத்துகளில் இருந்து பாதுகாக்காது. ஒரு விளையாட்டு வீரானாக எனக்கு தரமான ஹெல்மெட் குறித்த முக்கியத்துவம் தெரியும்.

போலி ஹெல்மெட் விற்பனையை தடுக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சச்சின் கடிதம்

கடந்த 2016ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் 30 சதவீத விபத்துக்கள் இருசக்கர வாகன விபத்துக்கள் தான். வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணிவது மூலம் விபத்துக்கள் நடந்ததால் 42 சதவீதம் வரை உயிர் பிழைக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

போலி ஹெல்மெட் விற்பனையை தடுக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சச்சின் கடிதம்

தரமான ஹெல்மெட்களுக்கு அரசு சலுகைள் வழங்க வேண்டும். அது மக்கள் மனதில் தரமற்ற அல்லது போலி ஹெல்மெட்கள் வாங்கும் எண்ணத்தை கைவிட வழிவகுக்கும். மேலும் ஹெல்மெட் குறித்து அரசு பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். " இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

போலி ஹெல்மெட் விற்பனையை தடுக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சச்சின் கடிதம்

ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து, போலி மற்றும் தரமற்ற ஹெல்மெட்கள் குறித்து பல்வேறு மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் இதுவரை போலி மற்றும் தரமற்ற ஹெல்மெட் விற்பனைகள் நடந்துதான் வருகிறது. சச்சனின் போன்ற பிரபலமானவர்கள இப்பிரச்சனை குறித்து பேசுவது தீர்வுக்கான நடவடிக்கள் எடுக்க உறுதுணையாக அமையும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Sachin Tendulkar Writes To Nitin Gadkari; Urges To Act Against Fake Helmet Manufacturers. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X