கிரிக்கெட் உலகின் "கடவுள்" சச்சினின் கார் கலெக்ஷன்கள்... சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்..!

உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் பிறந்தநாள் இன்று. அவர் கார் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவரிடம் உள் மாருதி 800 காரில் இருந்து சூப்பர் கார் வரை அவரது கார் கலெக்ஷன்களை பார்க்கலாமா?

By Staff

உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் பிறந்தநாள் இன்று. அவர் கார் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவரிடம் உள் மாருதி 800 காரில் இருந்து சூப்பர் கார் வரை அவரது கார் கலெக்ஷன்களை அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக இங்கே பார்ப்போம் வாருங்கள்.

கிரிக்கெட் உலகின்

கிரிக்கெட் உலகில் கடவுளாக ரசிகர்கள் மத்தியில் வளம் வரும் நமது "மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சனின் குறித்து உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. சச்சினிற்கு கார்கள் மீது உள்ள ஆர்வம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

கிரிக்கெட் உலகின்

சச்சனில் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் முதன் முதலில் வாங்கிய காரை கூட இன்னும் பத்திரமாகவே வைத்துள்ளார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இதுவரை அவர் வாங்கிய கார்கள் குறித்தும் அவரது கராஜில் உள்ள கார்கள் குறித்து இந்த சச்சினின் பிறந்த நாள் ஸ்பெஷல் செய்தியில் பார்க்கலாம் வாருங்கள்.

கிரிக்கெட் உலகின்

மாருதி 800

சச்சனின் வாங்கிய முதல் கார் இந்த மாருதி 800 தான். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காரை வாங்கியுள்ளார். முதலில் இந்த காரில் தான் வளம் வந்துள்ளார். பின்னர் அவரது கராஜில்உள்ள கார்களின் வளர்ச்சியை கீழே காணுங்கள்.

கிரிக்கெட் உலகின்

ஃபெராரி 360 மொடெனா

கடந்த 2002 ம் ஆண்டு முதல் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மெனாக சச்சின் பார்க்கப்பட்டார். டான் பிராட்மேனின் டெஸ்ட் போட்டிகளில் 29 சதம் அடித்த சாதனையை சமன் செய்த போது ஃபியட் நிறுவம் சச்சினிற்கு இந்த காரை பரிசளித்தது. கடந்த 2011ம் ஆண்டு சச்சனின் இந்த காரை சூரத்தில் உள்ள ஒரு பிஸ்னஸ் மேனிற்கு இதை விற்று விட்டார்.

கிரிக்கெட் உலகின்

நிஸான் ஜி.டி.-ஆர்

2011ம் ஆண்டு ஃபெராரி காரை விற்ற பின்பு சச்சின் இந்த நிஸான் ஜி.டி.-ஆர் காரை வாங்கினார். இந்த கார் சுமார் 300 கி.மி., வேகத்தில் செல்லக்கூடியது. இந்த காரில் லாஞ்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.

கிரிக்கெட் உலகின்

பி.எம்.டபிள்யூ " 30 ஜாரே எம்5" லிமிட்ட் எடிசன்

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 30வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் இந்த காரை தயாரித்தது. இந்த மாடல் கார் உலகிலேயே 300 கார்கள் மட்டும் தான் தயாரானது. தற்போது பிஎம்டபிள்யூ கார்களிலேயே அதிக பவராகன கார் இது தான். இந்தியாவில் சச்சனிடம் மட்டும் தான் இந்த கார் உள்ளது. இந்த கார் 4.4 லிட்டர் வி8 இன்ஜின் கொண்டது. இது 600எச்பி பவர் வெளிப்படுத்தக்க கூடியது.

கிரிக்கெட் உலகின்

பிஎம்டபிள்யூ எக்ஸ் 5

இந்த கார் இந்தியாவில் வெளியடுதற்காகவே தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த காரை வெளியிடுதற்கு முன்பாகவே சச்சின் இதை பெற்றுவிட்டார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் இருப்பதால் அவருக்க முதலிலேயே வழங்கப்பட்டது.

கிரிக்கெட் உலகின்

பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 எம்50டி

இது உலகிலேயே அதிக பவர்புல் டீசல் எஸ்யூவி காராக இருந்தது. இந்த காரில் 3 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ சார்ஜிடு இன்ஜின் அமைந்துள்ளது. இது 381 எச்பி பவர் கொண்டது. இந்த கார் 0-100 கி.மீ., வேகத்தை 5.3 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் இந்தியாவில் விற்பனை இல்லை. இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் சச்சினிற்காக இந்தியாவில் இறக்குமதி செய்தது.

கிரிக்கெட் உலகின்

பிஎம்டபிள்யூ 760எல்ஐ

இது சச்சினிடம் உள்ள செடன் ரக கார். இந்த காரின் ஸ்பெஷல் என்ன என்றால் இந்த காரின் சீட்டில் தலை வைக்கும் பகுதிகளிலும், டோர் சீல் பகுதிகளிலும் அவரது இன்சியல் பொறிக்கப்பட்டிருக்கும்.

கிரிக்கெட் உலகின்

பி.எம்.டபிள்யூ ஐ8

இந்த கார் உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்று, இது சூப்பர் கார் வெரைட்டியை சார்ந்தது. இது குறித்து சச்சின் கூறும்போது "இது தான் நான் இது வரை ஓட்டியதிலேயே தலை சிறந்த கார். சிலர் நான் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிட்டராக இருப்பதால் இப்படி கூறுவதாக நினைக்கலாம். ஆனால் நான் எனது நண்பர்களின் ஃபெராரி, லாம்போகினி ஆகிய கார்களையும் இயக்கியுள்ளேன்." என கூறினார்.

கிரிக்கெட் உலகின்

பிஎம்டபிள்யூ 750 எல்ஐ எம் ஸ்போர்ட்

இந்த கார் சச்சனின் காரஜில் 2015ம் ஆண்டு இனைந்துள்ளது. இது சச்சினின் பிஎம்டபிள்யூ கார்களின் 6வது கார். அந்தாண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தான் இந்த காரை சச்சின் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த கார் 250 கி.மீ., வேகம் வரை செல்லக்கூடியது. இது 4.7 நொடிகளில் 0-100 வேகத்திற்கு பிக்கப் செய்துவிடும். 8 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் இன்ஜின் கார் இது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

More from DriveSpark

Article Published On: Tuesday, April 24, 2018, 12:23 [IST]
English summary
Sachin Tendulkar’s wicked car collection. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+