வித விதமான சூப்பர் பைக்குகளில் சத்குரு!! இப்போ பிஎம்டபிள்யூ பைக்... யாரு கூட இருக்காருனு பாருங்க!
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் இணைந்து சத்குரு சூப்பர்பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்போம்.

யோகா ஆசிரியரான சத்குருவை பற்றி பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சுருக்கமாக 'ஜக்கி' என அழைப்படும் இவர் தமிழகத்தில், கோயம்புத்தூரில் ஈஷா அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். அதேநேரம் மோட்டார்சைக்கிள்களை இயக்கி பார்ப்பதிலும் சத்குரு மிகுந்த ஆர்வமிக்கவர்.

கடந்த ஆண்டுகளில் பல விதமான சூப்பர் பைக்குகளில் வரலாற்றை அறிந்து கொள்ளும் நோக்கில் அமெரிக்கா முழுவதும் சுற்றி வலம் வந்து பரப்புரை செய்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் மண் வளத்தை பாதுகாக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக 30,000கிமீ-க்கு 100 நாள் பயணத்தை உலகம் முழுவதிலும் மேற்கொண்டு வருகிறார்.

லண்டனில் துவங்கிய இந்த பயணம் தற்போதுவரையில் 27 நாடுகளை கடந்துள்ளது. இந்த நிலையில் சத்குரு சமீபத்தில் வளர்ந்துவரும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் வீடியோவில் காட்சி தந்துள்ளார். சத்குரு பிரைம் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவினை கீழே காணலாம்.
இருவரும் உரையாடுவதில் இருந்து துவங்கும் இந்த வீடியோ, அருகில் உள்ள கடல் அலைகளை எல்லாம் வைத்து பார்க்கும்போது இந்திய கடற்கரை ஒன்றின் அருகில் இருந்து காட்சிப்படுத்தப்பட்டதுபோல் தெரிகிறது. பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சூப்பர் பைக்குகள் காட்டப்படுகின்றன. இதில் ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாப் மோட்டார்சைக்கிள் ஆனது நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா உடையது.

சத்குரு பிஎம்டபிள்யூ கே1600 ஜிடி பைக்கில் காட்சி தந்துள்ளார். இதேபோன்று இதற்கு முன்னர் கடைசியாக, ஹோண்டா ஆப்பிரிக்கா இரட்டை பைக்கில் சத்குரு உலாவரும் வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. அப்போது அவருடன் பிரபல யுடியூப்பரான கௌரவ் தனெஜாவும் இருந்தார். தனெஜா டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக்கில் காட்சி தந்திருந்தார்.

இவ்வாறு மண் வளத்தை பாதுகாக்கும் பயணத்தில் பல்வேறு மோட்டார்சைக்கிள்களில் சத்குரு பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போதைய வீடியோவில் சத்குரு வைத்துள்ள பிஎம்டபிள்யூ கே1600 ஜிடி பைக்கில் அளவில்-பெரிய 1.6 லிட்டர், 6-சிலிண்டர், இன்-லைன் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 160 பிஎஸ் மற்றும் 174 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இந்த பிஎம்டபிள்யூ பைக்கில் முக்கிய சிறப்பம்சங்களாக ஃப்யுல்-இன்ஜெக்ஷன் & ரைடு-பை-வயர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 350 கிலோவில் எடையை கொண்டிருப்பினும் இந்த பைக் அதிகப்பட்சமாக மணிக்கு 200கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. ஏற்கனவே கூறியதுபோல், இதுவரை பல்வேறு விதமான சூப்பர் பைக்குகளில் சத்குரு காட்சி தந்துள்ளார்.

இவ்வளவு ஏன், இந்தியாவில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவிற்கு மிகவும் குறைவானவர்கள் மட்டுமே வைத்துள்ள டுகாட்டி மல்டிஸ்ட்ராடாவின் லிமிடெட் எடிசனான பைக்ஸ் பீக் எடிசனில் கூட ஜக்கி உலாவந்துள்ள வீடியோ இணையத்தில் இதற்கு முன்பு வெளியாகி உள்ளது. மல்டிஸ்ட்ராடாவின் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் இஷா அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவரது என கூறப்படுகிறது.

"ஆறுகளுக்கான பேரணி"-இல் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பைக்கிலும், "காவேரி பாதுகாப்பு பேரணி"-இல் ஹோண்டா வி.எஃப்.ஆர் எக்ஸ் பைக்கிலும் சத்குரு இதற்கு முன்னர் காட்சி தந்திருந்தார். இதில் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் பைக்கை சத்குரு சொந்தமாக கொண்டுள்ளார். இதனாலேயே பலமுறை இந்த பைக்கில் அவரை வீடியோக்களில் பார்த்துள்ளோம்.

இவ்வாறான சூப்பர் பைக்குகள் மட்டுமல்ல, ஜாவா 42 மற்றும் ஜாவா போன்ற விலை குறைவான, அதேநேரம் பழமையான தோற்றம் கொண்ட பைக்குகளையும் ஜக்கி ஓட்டி பார்த்துள்ளார். இவ்வளவுஏன், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம்புகுந்த யெஸ்டி பிராண்டில் இருந்து கூட யெஸ்டி 350 பைக்கை இவர் வாங்கி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications








