சத்குரு ஜக்கி வாசுதேவ் செய்த காரியத்தை பாருங்க... சோஷியல் மீடியாக்களில் போட்டோக்கள் வைரல் ஆகுது!
சத்குரு ஜக்கி வாசுதேவ் செய்த காரியத்தின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) பைக்குகளை மிகவும் நேசிக்க கூடியவர். பைக்குகளில் பலமுறை அவர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார். தற்போது கூட சத்குரு ஜக்கி வாசுதேவ் தனி ஆளாக பயணம் ஒன்றைதான் மேற்கொண்டுள்ளார். இதில், 24 நாடுகளில் சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் பயணம் செய்யவுள்ளார்.

இந்த சூழலில், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை சத்குரு ஜக்கி வாசுதேவ் ரசித்து பார்த்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான அனுபவம் தரேஜா இந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.

ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்டுகளை கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம்தான் நிர்வகித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிய யெஸ்டி மோட்டர்சைக்கிள்கள் சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு வழங்கப்பட்டதா? அல்லது அவர் அந்த மோட்டார்சைக்கிள்களை வெறுமனே பார்வையிட மட்டும் செய்தாரா? என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி சத்குரு ஜக்கி வாசுதேவ், பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களின்போது, கவர்ச்சிகரமான மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்தியுள்ளார். சத்குரு ஜக்கி வாசுதேவ் பயன்படுத்தும் பெரும்பாலான மோட்டார்சைக்கிள்கள், அவரை பின்பற்றுபவர்களிடம் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் சத்குரு ஜக்கி வாசுதேவும் சொந்தமாக நிறைய மோட்டார்சைக்கிள்களை வைத்துள்ளார். சத்குரு ஜக்கி வாசுதேவ் மோட்டார்சைக்கிள்களை ஓட்டும் வீடியோக்கள் மற்றும் சமூக வலை தள பதிவுகளை நீங்கள் பலமுறை பார்த்திருக்கலாம். டுகாட்டில் மல்டிஸ்ட்ராடா (Ducati Multistrada), டுகாட்டி டெசர்ட் ஸ்லெட் (Ducati Desert Sled) போன்ற மோட்டார்சைக்கிள்களை கடந்த காலங்களில் அவர் ஓட்டியுள்ளார்.

அத்துடன் ஹோண்டா விஎஃப்ஆர்-எக்ஸ் (Honda VFR-X) மற்றும் பிஎம்டபிள்யூ ஆர்எஸ்ஜி1200எஸ் (BMW RSG1200S) போன்ற மோட்டார்சைக்கிள்களை சத்குரு ஜக்கி வாசுதேவ் ஓட்டுவதையும் கடந்த காலங்களில் நம்மால் பார்க்க முடிந்துள்ளது. மிக இளம் வயதில் இருந்தே சத்குரு ஜக்கி வாசுதேவ் மோட்டார்சைக்கிள்களை மிகவும் நேசித்து வருகிறார்.

தற்போது வரை மோட்டார்சைக்கிள்கள் மீதான தனது காதலை அவர் விட்டு தரவில்லை. மோட்டார்சைக்கிள்கள் மட்டுமல்லாது, தனது விழிப்புணர்வு பிரச்சாரங்களில், விலை உயர்ந்த கார்களையும் கூட சத்குரு ஜக்கி வாசுதேவ் பயன்படுத்தியுள்ளார். ஒருமுறை மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) காரை அவர் பயன்படுத்தியதை நம்மால் காண முடிந்துள்ளது.

சத்குரு ஜக்கி வாசுதேவ் தற்போது பார்வையிட்டுள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் வெகு சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஜாவா பைக்குகளை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம்தான் யெஸ்டி மோட்டார்சைக்கிள்களையும் மறுபடியும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ரோட்ஸ்டர், ஸ்க்ராம்ப்ளர் மற்றும் அட்வென்ஜர் என மூன்று மோட்டார்சைக்கிள்களை யெஸ்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த 3 மோட்டார்சைக்கிள்களையும் நாங்கள் ஓட்டி பார்த்து விட்டோம். யெஸ்டி ரோட்ஸ்டர், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் மற்றும் யெஸ்டி அட்வென்ஜர் ஆகிய 3 மோட்டார்சைக்கிள்களும் வெவ்வேறு அம்சங்களில் எங்களை வெகுவாக கவர்ந்தன.

யெஸ்டி பிராண்டின் 3 மோட்டார்சைக்கிள்களையும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. இதன் மூலம் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் தற்போது இந்திய சாலைகளில் வலம் வர தொடங்கியுள்ளன. சத்குரு ஜக்கி வாசுதேவும் புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள்களில் வலம் வருவார் என நாம் எதிர்பார்க்கலாம்.

ஏதேனும் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது சத்குரு ஜக்கி வாசுதேவ், புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதை காண்பதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவை பின்பற்றுபவர்களும், பைக் ஆர்வலர்களும் மிகவும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications