இவர்கிட்ட இல்லாத கார், பைக்கே கிடையாது போல!! சத்குருவின் பொறாமைப்பட வைக்கும் கார் & பைக் கலெக்‌ஷன்ஸ்!

சத்குரு (Sadhguru), இந்த பெயரை பற்றி உங்களில் நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். சத்குரு ஜகி வாசுதேவ் என முழு பெயர் கொண்ட இவர் யோகாவை உலகம் முழுவதும் பரப்புபவராகவும், தமிழ்நாட்டில் உள்ள ஈஷா அறக்கட்டளையின் நிறுவனராகவும் உள்ளார். யோகாவில் எந்த அளவிற்கு ஆர்வம் கொண்டவராக உள்ளாரோ அதே அளவிற்கு ஆட்டோமொபைல் வாகனங்களின் மீதும் சத்குருவுக்கு ஆர்வம் உள்ளது. இவரிடம் உள்ள சில முக்கியமான கார் & பைக்குகள்...

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG): சத்குரு ஒருமுறை கன்னியாகுமரியில் இருந்து ஹரித்வார் வரையில் தனது பச்சை நிற ஜி63 ஏஎம்ஜி காரில் சென்றது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். பொதுவாக, மெர்சிடிஸ்-பென்ஸின் ஜி-வேகன் எஸ்யூவி கார்கள் விலைமிக்கவை ஆகும். ஜி63 ஏஎம்ஜி ஆனது அதனை காட்டிலும் விலைமிக்கது ஆகும். இந்த விலையுயர்ந்த பென்ஸ் ஏஎம்ஜி காரில் ஆற்றல்மிக்க 5.5 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

sadhguru car and bikes collections

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110): சத்குரு தனது சொந்த பயன்பாட்டிற்காக சமீபத்தில் வாங்கிய கார் இதுவாகும். லக்சரி ஆஃப்-ரோடு காரான டிஃபெண்டர் 110 சத்குருவிடம் கருப்பு நிறத்தில் உள்ளது. இந்த காரில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 525 பிஎச்பி மற்றும் 625 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

sadhguru car and bikes collections

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser): டிஃபெண்டர் கார்களை போன்று, உலகளவில் பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவி காராக லேண்ட் க்ரூஸரை சொல்லலாம். சத்குருவிடம் இந்த டொயோட்டா கார் நீல நிறத்தில் உள்ளது. அத்துடன், இவரிடம் இருப்பது பழமையான லேண்ட் க்ரூஸர் கார் ஆகும். எங்களுக்கு தெரிந்தவரையில் 1960 - 70ஆம் காலக்கட்டத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அதனை பட்டி, டிங்கரிங் பார்த்து சத்குரு உபயோகப்படுத்தி வருகிறார்.

sadhguru car and bikes collections

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெசர்ட் ஸ்லட் (Ducati Scrambler Desert Sled): அட்வென்ச்சரான ஆஃப்-ரோடு பயணங்களை மிகவும் விரும்பக்கூடியவர் சத்குரு ஆவார். இதனாலேயே இவரிடத்தில் ஆஃப்-ரோடு கார்கள் மட்டுமின்றி, டெசர்ட் ஸ்லட் போன்ற ஆஃப்-ரோடு பைக்குகளும் உள்ளன. சத்குரு தன்னிடம் உள்ள இந்த டுகாட்டி பைக்கில் பாபா ராம்தேவ் உடன் இணைந்து ரைடு போனது சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலாகியது.

sadhguru car and bikes collections

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 (Ducati Multistrada 1260): சத்குருவுக்கு மிகவும் பிடித்தமான மோட்டார்சைக்கிள் இது எனலாம். ஏனெனில், ஆற்றல்மிக்க இந்த டுகாட்டி பைக்கை ஆஃப்-ரோடு பயணங்களுக்கு கொண்டு செல்வது மட்டுமின்றி, மிக நீண்ட தொலைவு பயணங்களுக்கும் தாராளமாக கொண்டு செல்லலாம். அதாவது அந்த அளவிற்கு இந்த 1260சிசி டுகாட்டி பைக்கில் திறன் உள்ளது.

sadhguru car and bikes collections

பி.எம்.டபிள்யூ கே1600 ஜிடி (BMW K1600 GT): "மண்ணை பாதுகாப்போம்" என்கிற பெயரில் சில வருடங்களுக்கு முன்பு மோட்டார்சைக்கிளில் பல்வேறு நாடுகளுக்கு சத்குரு சென்றிருந்தார். இந்த உலக பயணத்திற்கு அவர் பயன்படுத்திய முக்கியமான பைக்குகளுள் ஒன்று, இந்த பிஎம்டபிள்யூ பைக் ஆகும். மேலே கண்ட டுகாட்டி பைக்கை காட்டிலும் ஆற்றல்மிக்க பைக்கான இதில் 1649சிசி 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

sadhguru car and bikes collections

ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் (Honda Africa Twin): 'மண்ணை பாதுகாப்போம்' என்கிற பிரச்சாரத்தில் சத்குரு பயன்படுத்திய மற்றொரு மோட்டார்சைக்கிள். மேலே கண்ட பிஎம்டபிள்யூ பைக்கை போன்று, இந்த ஹோண்டா பைக்கையும் கருப்பு நிறத்தில் சத்குரு வைத்துள்ளார். இந்த பைக்கில் 1,084சிசி, லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

sadhguru car and bikes collections

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, வேறு சில கார், பைக்குகளிலும் சத்குருவை இதற்குமுன் படங்களிலும், வீடியோக்களிலும் பார்த்துள்ளோம். குறிப்பாக, 'மண்ணை பாதுகாப்போம்' பிரச்சாரத்தின் போது வெவ்வேறு விதமான விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்களை சத்குரு பயன்படுத்தினார். அதாவது, ஒவ்வொரு நாட்டின் கால வெப்பநிலைக்கு ஏற்ற பைக்குகளை சத்குரு பயன்படுத்தியதை அந்த சமயத்தில் பார்க்க முடிந்திருந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 13, 2024, 5:00 [IST]
English summary
Sadhguru jaggi vasudev luxury cars and bikes collections full list here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X