சுமார் 350 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ பைக்கில் ஜக்கி வாசுதேவ்! விலை எங்கேயோ இருக்கு

சுமார் 350 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ கே 1600 ஜிடி பைக்கை இந்தியாவை சேர்ந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் இயக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுமார் 350 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ பைக்கில் ஜக்கி வாசுதேவ்! விலை எங்கேயோ இருக்கு

சத்குரு, ஆட்டோமொபைலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக விலையுயர்ந்த பைக்குகளை ஓட்டும்போது தான் இவரை அதிகம் முறை இணையத்தில் பார்த்துள்ளோம்.

சுமார் 350 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ பைக்கில் ஜக்கி வாசுதேவ்! விலை எங்கேயோ இருக்கு

இந்தியாவில் காவேரி ஆற்றை பாதுகாக்க கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட ஹோண்டா விஎஃப்ஆர் எக்ஸ் பைக்கில் பேரணி நடத்தினார். இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் ஆன்மிகத்தை வளர்க்கும் முயற்சியாக 10,000 மைல்களை மோட்டார்சைக்கிள்களில் கடக்கும் சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை சந்திப்பதற்காக பிஎம்டபிள்யூ கே 1600 ஜிடி பைக்கில் சத்குரு வரும் வீடியோ யுடியூப்பில் வெளியாகியுள்ளது. ஜக்கி வாசுதேவ் எனப்படும் சத்குரு இந்த வீடியோவில் வில் ஸ்மித்தை சந்திக்க பயன்படுத்தியுள்ள இந்த பிஎம்டபிள்யூ பைக் இந்தியாவில் விற்பனையில் இல்லை.

சுமார் 350 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ பைக்கில் ஜக்கி வாசுதேவ்! விலை எங்கேயோ இருக்கு

அமெரிக்காவில் பாகங்கள் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தயாரிக்கப்படுவதால் இந்த பைக்கின் விலையும் அங்கு மிக குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் அதிக எடையை கொண்ட இந்த பிஎம்டபிள்யூ பைக் சத்குரு மேற்கொள்ளும் தொலைத்தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது.

சுமார் 350 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ பைக்கில் ஜக்கி வாசுதேவ்! விலை எங்கேயோ இருக்கு

அதேநேரம் இதன் எடையும் அதிகம். சுமார் 350 கிலோவில் உள்ள பிஎம்டபிள்யூ கே1600 ஜிடி பைக் நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் சென்றால் மேற்கூரை இல்லா கார் போன்ற உணர்வையே வழங்கும். இந்த பைக் இந்தியாவில் விற்பனையில் இல்லை என்றாலும், இதனை காட்டிலும் சற்று கூடுதல் அம்சங்களை கொண்ட பிஎம்டபிள்யூ கே 1600 ஜிடிஎல் பைக் ரூ.30 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் ஓட்டிவந்த பைக்கின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17 லட்சம் என்ற அளவில்தான் இருக்கும். ஆனால் இந்த பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவர விரும்பினால் வரிகளால் அதன் விலை இரட்டிப்பாகவும் ஆகலாம்.

பிஎம்டபிள்யூ கே1600 ஜிடி பைக்கில் 1.6 லிட்டர், 6-சிலிண்டர், இன்-லைன் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 160 பிஎச்பி மற்றும் 174 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். ரைட்-பை-வயர் சிஸ்டத்துடன் எலக்ட்ரிக் ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் போன்ற தொழிற்நுட்ப வசதிகளை கொண்டுள்ள இந்த பைக் மணிக்கு 200கிமீ-க்கும் அதிமான வேகத்தில் இயங்கக்கூடியது.

சுமார் 350 கிலோ எடை கொண்ட பிஎம்டபிள்யூ பைக்கில் ஜக்கி வாசுதேவ்! விலை எங்கேயோ இருக்கு

இளம் பருவத்தில் இருந்து மோட்டார்சைக்கிள்களை இயக்கி வருவதால் சத்குரு மிகுந்த மோட்டார்சைக்கிள் பிரியர் ஆவார். கல்லூரி காலங்களில் யமஹா ஆர்டி350 பைக்கை இயக்கியுள்ளதாக கூறும் இவர், அதனை இந்தியா முழுவதுமான சுற்றுபயணத்திற்கு பயன்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Watch Sadhguru Jaggi Vasudev ride a massive, 350 KG BMW K 1600 GT that costs over Rs. 30 lakh [Video]
Story first published: Thursday, October 22, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X