ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் சேஃப் கேம்ஸ் டிஜிட்டல் ஐ சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (SafeCams Digital Eye Solutions Pvt. Ltd). கேமிரா (Camеra) உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
வீடுகள், வாகனங்கள் என அனைத்திற்குமான கேமிராக்களை இந்த நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனமே தற்போது வாகனங்களுக்கான டேஷ் கேமிரா (Dash Camеra) ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. ஆர்2 (R2) எனும் புதிய டேஷ் கேமிராவையே அது அறிமுகம் செய்திருக்கின்றது.

இது ஓர் மெட்டல் பாடி (Metal Body)க் கொண்ட டேஷ் கேமிரா ஆகும். இதுவே நிறுவனத்தின் ஆரம்ப நிலை மெட்டல் பாடிக் கொண்ட டேஷ் கேமிரா என்பது குறிப்பிடத்தகுந்தது. இரண்டு விதமான தேர்வுகளில் இந்த கேமிரா சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். ஜிபிஎஸ் கருவியைக் கொண்ட நிலை (With GPS) மற்றும் ஜிபிஎஸ் கருவி இல்லா நிலை (Without GPS) என்கிற இரண்டு விதமான தேர்வுகளே இந்த கேமிராவில் வழங்கப்படுகின்றது.
இதில் ஜிபிஎஸ் கருவி இருக்கும் தேர்வு சற்று காஸ்ட்லியாகவும், அது இல்லாதது சற்றே குறைவான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது ரூ. 9,999க்கும், ரூ. 8,999க்கும் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பு அன்பளிப்பாக 64 ஜிபி எஸ்டி மெமரி கார்டு (SD card) மற்றும் ஹார்ட் ஒயர் கிட் (HardWirе Kit) ஆகியவை வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

இத்துடன், கூடுதல் தேர்வாக கார் சார்ஜர் பவர் அடாப்டரும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், இது ஆப்ஷனல் மட்டுமே ஆகும். இப்போதைய நிலவரப்படி குறிப்பிட்ட சில பிரீமியம் கார் அணிகலன் விற்பனையகத்தில் மட்டுமே இந்த டேஷ் கேமிரா விற்பனைக்கு வந்திருக்கின்றது.
இத்துடன், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திலும் இதை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கேமிராவிற்கு பிஐஎஸ் சான்று (BIS Certification) கிடைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் மெட்டல் பாடி கேமிரா நீடித்து உழைக்கும் என்பதற்கு சான்றாக இருக்கின்றது. அதேவேளையில், மிக சிறப்பான பயன்பாட்டை இந்த கேமிரா வழங்கும் என்று தயாரிப்பு நிறுவனமும் அதன் தரப்பில் உத்தரவாதம் அளித்து இருக்கின்றது.

தொடர்ச்சியாக பதிவு செய்யும் வகையில் இந்த கேமிரா வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், லேட்டஸ்ட் வீடியோ என்கோடிங் அமைப்பு, உயர் வகை காட்சிப்பதிவு திறன் ஆகியவையும் இந்த கேமிராவில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர குறைவான வெளிச்சத்திலும் காட்சிகளை இந்த கேமிரா பதிவு செய்யும் என கூறப்படுகின்றது.
2 மேகாபிக்சல் லென்ஸ் உடன் 150 டிகிரி அகலமான கோணத்தில் காட்சிகளை இந்த கேமிரா பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், 1080பால் ரெசல்யூசனிலும் இது காட்சிகளை பதிவு செய்யுமாம். எனவே எச்டி குவாலிட்டியில் காட்சிகளை பதிவு செய்துக் கொள்ள முடியும்.
ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் செயலி வாயிலாக இந்த கேமிராவை இணைத்துக் கொள்ள முடியும். இதில் ஜிபிஎஸ் கருவிக் கொண்ட கேமிராவை உங்களது காரில் பொருத்தினால் கார் இருக்கும் இடத்தை லைவாக அறிந்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், திருட்டு போன்றவற்றில் இருந்தும் இந்த கேமிரா இருந்தால் காரை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டேஷ் கேமிராவை காரில் பொருத்துவதன் வாயிலாக தேவையில்லா பிரச்னைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, விபத்துகளின்போது ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்க டேஷ்போர்டு கேமிரா பெரும் உதவியாக இருக்கின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த புதிய கேமிராவை காரில் பொருத்துவது மிகவும் சுலபம் ஆகும். ஸ்டிக்கரைபோல சுலபமாக இதை காரினுள் ஒட்டிக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









