இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

ஆபத்துக்கள் நிறைந்த கிகி சேலஞ்சில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பான முறையில் கிகி சேலஞ்சில் ஈடுபடும் 2 இளைஞர்களின் வேடிக்கையான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி

By Arun

ஆபத்துக்கள் நிறைந்த கிகி சேலஞ்சில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பான முறையில் கிகி சேலஞ்சில் ஈடுபடும் 2 இளைஞர்களின் வேடிக்கையான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

உலகின் பல்வேறு நாடுகளிலும் கிகி சேலஞ்ச் வெகு வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் கிகி சேலஞ்ச் அடியெடுத்து வைத்துள்ளது. இளைஞர்கள் முதல் வயதான பெண்கள் வரை என வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரும் கிகி சேலஞ்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

கனடாவை சேர்ந்த புகழ்பெற்ற ராப் பாடகர் டிரேக் என்பவர் 'இன் மை பீலிங்ஸ்' (In My Feelings) என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடலில் வரும் 'கி கி டூ யூ லவ் மீ' (kiki do you love me) என்ற பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க, அதற்கு ஏற்ப நடனம் ஆட வேண்டும்.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

நடனம் என்றால், மேடையிலோ அல்லது வீட்டிலோ ஆடுவது என சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம். ஓடும் காரில் இருந்து இறங்கி 'கி கி டூ யூ லவ் மீ' பாடல் வரிகளுக்கு நடனம் ஆட வேண்டும். இதுதான் கிகி சேலஞ்சின் நிபந்தனை. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடிவிட்டு, மீண்டும் காரில் ஏறிக்கொள்ளலாம்.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

இதுதான் கிகி சேலஞ்ச் அல்லது இன் மை பீலிங்ஸ் சேலஞ்ச் என்ற பெயர்களில், உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, ஓடும் காரில் இருந்து இறங்கி, 'கி கி டூ யூ லவ் மீ' பாடலுக்கு, வயது வித்தியாசமின்றி பலர் நடனம் ஆடி கொண்டிருக்கின்றனர்.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

அதனை வீடியோ எடுத்து, சமூக வலை தளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர். சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி, பிரபலங்கள் பலரும் கிகி சேலஞ்சில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான ரெஜினா, கிகி சேலஞ்சில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வைரலாக பரவியது.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

எனினும் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆட வேண்டும் என்பதால், கிகி சேலஞ்சில் ஏராளமான ஆபத்துக்களும் நிறைந்திருக்கின்றன. கிகி சேலஞ்சை முயற்சித்து கொண்டிருக்கும்போது, பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். சிலர் மரணமும் அடைந்துள்ளனர்.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

எனவே ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு எமீரகம் என உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த போலீசாரும், கிகி சேலஞ்சில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். இதில், சில நாடுகளில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

இந்த சூழலில்தான் தற்போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கிகி சேலஞ்ச் வேகமாக பரவி வருகிறது. மும்பை, ஐதராபாத், பஞ்சாப், உத்தரபிரதேசம், சண்டிகர் என நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த போலீசாரும், கிகி சேலஞ்சில் ஈடுபடுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொது வெளியில் நடந்து கொண்டதாக, கிகி சேலஞ்சில் ஈடுபடுபவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்படும் என ஐதராபாத் போலீசார் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தகையவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் வாய்ப்புகளும் உள்ளன.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கிகி சேலஞ்சில் ஈடுபட விரும்பினால், அதற்கும் வழி உள்ளது! பாதுகாப்பான முறையில் கிகி சேலஞ்சில் ஈடுபடும் 2 இளைஞர்களின் வேடிக்கையான வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது! அந்த வீடியோவை கீழே காணலாம்.

கிகி சேலஞ்சை ஏற்றுக்கொண்ட இந்த 2 இளைஞர்களும், பொது வெளிக்கு பதிலாக விவசாய நிலத்தில் செய்கின்றனர். அத்துடன் கார்களுக்கு பதிலாக, ஏர் பூட்டிய மாட்டு வண்டியை பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அதற்கு அருகே நடனம் ஆடியுள்ளனர்.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

இப்படி கிகி சேலஞ்ச் செய்தால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சாலையில் வரும் மற்ற கார்கள் மோதி விடும் அபாயமும் இல்லை. ஏனெனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், ஓடும் காரில் இருந்து இறங்கி திடீரென நடனம் ஆடுவது என்பது நல்ல யோசனையாக இருக்காது.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

கிகி சேலஞ்ச் எவ்வளவு அபாயகரமானது என்பதை புரியவைக்க போலீசார் போராடி வருகின்றனர். கிகி சேலஞ்சை போலீசார் தடை செய்தாலும் கூட, பலர் தொடர்ச்சியாக அதனை செய்து கொண்டுதான் உள்ளனர். இன்டர்நெட் சென்சேஷனாக உருவெடுக்க வேண்டும் என்பதே அத்தகைய நபர்களின் எண்ணம்.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

ஒருவர் செய்வதை பார்த்து உடன் மற்றொருவரும் செய்கிறார். இந்த சங்கிலி அப்படியே நீண்டு கொண்டே செல்கிறது. காரை ஓட்டி கொண்டிருக்கும்போது, வேடிக்கையான செயல்பாடுகளில் ஈடுபடுபவது என்பது அபாயகரமானது. இதன்மூலம் கார் விபத்தில் சிக்கி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இப்படியும் கிகி சேலஞ்சில் ஈடுபடலாம்! எச்சரிக்கை விடுத்த போலீசாருக்கு சவால் விடும் வைரல் வீடியோ!

பார்ப்பதற்கு இது நகைச்சுவையாக தோன்றலாம். ஆனால் ஒரு நிமிடத்தில் எல்லாம் மாறி விடும். கிகி சேலஞ்சில் ஈடுபடுபவர்களால், அவர்களுக்கு மட்டும் பிரச்னையில்லை. அந்த சாலையில் பயணித்து கொண்டிருக்கும் இதர வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கவனத்தில் கொள்வது அவசியமானது.

Article Published On: Saturday, August 4, 2018, 16:49 [IST]
English summary
Safest Way to Attempt kiki Challenge. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+