சைதை துரைசாமி மகன் கார் விபத்தில் சிக்கியதற்கு காரணம் இதுதானா? முழு ரிப்போர்ட்!

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை லடாக் செல்லும் வழியில் காலில் செல்லும் போது சட்லஜ் நதியை கடக்கும் போது விபத்து ஏற்பட்டு காணாமல் போனார். அவரைத் தேடும் பணி இந்நிலையில் இந்த விபத்து குறித்து இந்தியா முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் என்னதான் நடந்தது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பூர் வெள்ளை கோவிலை சேர்ந்த கோபிநாத் என்ற தனது உதவியாளருடன் இமாச்சலப் பிரதேச பகுதியில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் அவர் அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்புவதற்காக விமான மூலம் டிக்கெட் புக் செய்திருந்தார்.

saidai duraisamy son accident

விமான நிலையத்திற்கு வருவதற்காக அவர் தங்கி இருந்த இடத்திலிருந்து இன்னோவா கார் மூலம் புறப்பட்டு விமான நிலையம் சென்று கொண்டிருந்தார். சரியாக மதியம் 2 மணி அளவில் கார் சேட்டிலைட் நதியை கடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி கார் விபத்தில் சிக்கியது. அதிகமாக ஸ்டேரிங்கை இங்கே திருப்பியதால் பாலத்தில் இருந்து கார் சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்து நடந்ததை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்க்கும்போது காரின் டிரைவர் சீட்டில் டிரைவர் சீட் பெல்ட் அணிந்து இறந்தபடி கிடந்துள்ளார். காரில் இருந்த வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் சுயநினைவின்றி நீக்கப்பட்ட அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தற்போது அவர் சுயநினைவில் இல்லை.

saidai duraisamy son accident

இந்நிலையில் காரில் வந்த மற்றொரு பழனியான வெற்றி துரைசாமியை தேடும் போது எந்த விதமான தடயங்களும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து சைதை துரைசாமி நேரடியாக சட்லஜ் நதிக்கரை இருக்கும் பகுதிக்கு சென்று அங்குள்ள அரசுடன் பேசி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டார். தேசிய பேரிடர் மீட்பு குழு, இந்திய ராணுவம், இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தேர்தல் பணி நடந்தோம். வெற்றி துரைசாமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கடற்படையினர் படகு மூலம் நதி செல்லும் பகுதியில் சென்று ஆழமான பகுதிகளில் எல்லாம் தேர்தல் நடத்தினர். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த தேர்தல் பணியில் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த விபத்து நடந்ததற்கான காரண காரியங்கள் குறித்து நாம் ஆய்வு செய்த போது சில முக்கியமான விஷயங்கள் நமக்குத் தெரிய வந்தது. இந்த விபத்தில் சீட் பெல்ட் அணிந்திருந்த படி காரின் டிரைவர் சீட்டிலேயே இருந்துள்ளார். ஆனால் காரின் உள்ளே கோபிநாத் இல்லை. வெற்றி துரைசாமியும் இல்லை இதனால் இவர்கள் இருவரும் சீட் பெல்ட் அணியாமல் பயணித்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இது மட்டுமல்லாமல் கார் வேகமாக வரும்போது திருப்பத்தில் அளவுக்கு அதிகமாக திருப்பியதால்தான் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்கு பாலத்தில் வேகமாக வரும் போது குறுக்கே ஏதாவது விலங்குகள் வந்திருக்கலாம். அதை கண்டு பயந்து டிரைவர் வாகனத்தை திருப்பி இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் இது உறுதியான தகவலாக தெரியவில்லை.

விபத்து நடந்தது நிறுவனத்தின் இன்னோவா கார் பொதுவாக கார்களில் எல்லாம் சீட் பெல்ட் போடப்பட்டிருந்தால் மட்டுமே ஏர்பேக் என்பது வேலை செய்யும் குறிப்பிட்ட சம்பவத்தில் வெற்றி துரைசாமியும் கோபிநாத் சீட் பெல்ட் அணிந்திருக்க வாய்ப்பு மிக குறைவாக தான் தெரிகிறது. இவர்கள் சீட் பெல்ட் அணிந்து இருந்தால் ஒருவேளை ஏர்பேக் திறக்கப்பட்டு இவர்கள் உயிர்கள் கூட காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் சுமார் 200 அடி பள்ளத்தில் கார் கவிழும் போது இவர்கள் தூக்கி வீசப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கோபிநாத் உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெற்றி துரைசாமியின் நிலை குறித்து எந்தவித தகவலும் இல்லாமல் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்திற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கிறது. டிரைவரின் கவனக்குறைவு மற்றும் சீட் பெல்ட் ஆகியவை முக்கியமான காரணமாக கூறலாம். இதில் டிரைவரின் கவனக்குறைவு தான் விபத்துக்கான மூல காரணமாக இருந்தாலும், இவர்கள் சீட் பெல்ட் அணியாதது தான் இவர்களை காரில் இருந்து தூக்கி வீசியதற்கான காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் நீங்கள் எப்போது சீட் பெல்டுடன் அணிந்தபடியே பயணம் செய்யுங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, February 9, 2024, 18:01 [IST]
English summary
Saidai duraisamy son accident in sutlej full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+