7 ஜென்மம் எடுத்தாலும் சொத்து அழியாது! ஆனாலும் சாதாரண ஸ்கூட்டர்ல வந்தது அரச குடும்பத்து வாரிசா! ஆடிப்போன மக்கள்
இந்தியாவை சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் (Luxury Cars) குறித்த சுவாரஸ்யமான தகவல்களை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்த செய்திகளின் சுருக்கம் என்னவென்றால், ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான் பிரபலமான நடிகர், நடிகைகளின் முதன்மையான தேர்வு. அதாவது நடுத்தர வர்க்க மக்கள் பயன்படுத்தும் மிகவும் எளிமையான கார்களில், பிரபலமான நடிகர், நடிகைகள் பயணிப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம் ஆகும்.
நிலைமை இப்படி இருக்கும்போது இந்தியாவிற்கே நன்கு பரிட்சயமான நடிகர் ஒருவர் தற்போது ஸ்கூட்டரில் (Scooter) பயணம் செய்துள்ளார். அதுவும் மிகவும் விலை உயர்ந்த ஸ்கூட்டரில் எல்லாம் அவர் பயணம் செய்யவில்லை. அது இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் பயன்படுத்தும் எளிமையான ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர் ஆகும்.

ஆம், தற்போது நாம் பேசி கொண்டுள்ள நடிகர், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் 125 சிசி டிஸ்க் பிரேக் வேரியண்ட்டில் பயணம் செய்துள்ளார். தற்போதைய நிலையில் இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் 99,990 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.
இவ்வளவு எளிமையான ஸ்கூட்டரில் பயணம் செய்திருப்பதால், அந்த நடிகரை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். அவரது சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 1,300 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவரது கார் கலெக்ஸனும் (Car Collection) மிகப்பெரியது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class), லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), ஃபோர்டு மஸ்டங் (Ford Mustang), ஆடி ஆர்8 (Audi R8) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) போன்ற மிகவும் விலை உயர்ந்த கார்களை எல்லாம் வைத்துள்ளார்.
இவ்வளவு விலை உயர்ந்த சொகுசு மற்றும் செயல்திறன் மிக்க கார்களை எல்லாம் வைத்து கொண்டு, மிகவும் எளிமையான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பயணம் செய்துள்ள நடிகர், சயீஃப் அலி கான் (Saif Ali Khan) ஆவார். அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு இவர் இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ளார். இவர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
கத்தார் (Qatar) நாட்டில் தற்போது ஆடம்பர பங்களா ஒன்றை சயீஃப் அலி கான் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில்தான் அவர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில் சயீஃப் அலி கான் வெள்ளை நிற உடை அணிந்து கொண்டு ஸ்கூட்டரில் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் அவர் முக கவசமும் (Face Mask)அணிந்துள்ளார். மாஸ்க் அணிந்திருந்தபோதும், வந்திருப்பது சயீஃப் அலி கான் என்பதை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்து விட்டதாக தெரிகிறது.
சயீஃப் அலி கான் போன்ற பிரபலமான நடிகர் ஒருவர், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்து இறங்கியது தெரிந்ததும், அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். அப்பகுதி மக்களை போலவே, நெட்டிசன்களுக்கும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சயீஃப் அலி கான் ஸ்கூட்டரில் பயணம் செய்த வீடியோ தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சயீஃப் அலி கான் மிகவும் எளிமையான முறையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பயணம் செய்திருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். ஆனால் அவர் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்திருப்பது கவலைக்குரிய ஒரு விஷயம். இந்தியாவை பொறுத்தவரை, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.
ஆனால் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவை பார்க்கும்போது, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை ஓட்டிய நபர் மட்டுமே ஹெல்மெட் அணிந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த சயீஃப் அலி கான் ஹெல்மெட் அணியவில்லை. பிரபலமான மனிதர்கள் இது போன்ற தவறுகளை செய்யும்போது, அது அவர்களது ரசிகர்கள் மனதிலும் ஆழமாக பதிந்து விடும். எனவே நடிகர், நடிகைகள் பொது இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இதை பார்த்து அவர்களது ரசிகர்களும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தொடங்குவார்கள். இது இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவதற்கு உதவி செய்யும் என்பது எங்கள் கருத்து. எனவே நடிகர், நடிகைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம் ஆகும்.


Click it and Unblock the Notifications








