நிஜ சிங்க பெண் வாங்கிய மிக மிக விலை உயர்ந்த பென்ஸ் சொகுசு கார்.. இந்த பெண் வீராங்கனை யாருனு தெரியுதா?..

இந்தியாவிற்காக உலக அரங்கில் பல்வேறு பதக்கங்களை வென்றுக் கொடுத்தவர் சாய்னா நேவால். இவர் இந்திய ஸ்டார் பேட்மிண்டன் வீராங்கனை ஆவார். ஹரியானா மாநிலத்தைப் பூர்வீமாகக் கொண்ட இவர் 20க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான பதக்கங்களை வென்றிருக்கின்றார். இவற்றுள் பத்து சூப்பர் சீர்ஸ் பதக்கங்கள் ஆகும்.

இதுவரை, இந்தியாவை பிரதிநிதப்படுத்தி இவர் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கின்றார். பத்ம பூஷன், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா என பல்வேறு உயரிய விருதுகள் சாய்னா நேவாலுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய மாபெரும் பெண் வீராங்கனையே தொடர் சாதனைகளை அடுத்து தற்போது மிக மிக விலை உயரிய சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார்.

Saina nehwal mercedes amg gle

அவர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ (Mercedes Benz AMG GLE) மாடல் ஆகும். இந்த பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ இந்தியாவில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜிஎல்இ 53 4 மேடிக்-பிளஸ் (Mercedes Benz AMG GLE 53 4MATIC+) மற்றும் ஜிஎல்இ 63 எஸ் 4 மேடிக்-பிளஸ் (Mercedes Benz AMG GLE 63 S 4MATIC+) ஆகியவையே அவை ஆகும்.

இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே 1 கோடியே 61 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய மிக உயரிய விலைக் கொண்ட சூப்பரான சொகசு காரையே பெண் வீராங்கனை வாங்கி அசத்தி இருக்கின்றார். இந்த கார் கொள்முதலுக்கு அவருக்கு பாராட்டுக்குள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

குறிப்பாக, சக விளையாட்டு வீரர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது ஓர் சொகுசு கார் மட்டுமல்ல அதிக திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட ஆடம்பர காரும்கூட. இதற்காக அக்காரில் 4.0 லிட்டர் டர்போசார்ஜட் வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 603 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 9 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடு ஷிஃப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் மணிக்கு உச்சபட்சமாக 280 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

Saina nehwal takes delivery mercedes amg

மேலும், வெறும் 3.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இந்த காரால் எட்ட முடியும். பென்ஸ் நிறுவனம் இந்த காரில் கூடுதல் அம்சமாக இக்யூ பூஸ்ட் (EQ Boost) எனும் ஹைபிரிட் சிஸ்டத்தை வழங்கி இருக்கின்றது. இது ஓர் 48 வோல்ட் திறன் ஹைபிரிட் சிஸ்டம் ஆகும்.

இந்த அம்சத்தின் வாயிலாக தனியாக 21 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை பெற்றுக் கொள்ள முடியும். தற்போது பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி வரிசையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மாடல்களிலேயே அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்டதாக இந்த ஜிஎல்இ மாடல் இருக்கின்றது.

Saina nehwal buys mercedes amg

இதையே சாய்னா நேவால் தற்போது வாங்கி இருக்கின்றார். இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக தனித்துவமான க்ரில், இரு எல்இடி டிஆர்எல்கள், டூயல் எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் கவர்ச்சியான 22 அங்குல அலாய் வீல் என ஏகப்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, நப்பா லெதர் இருக்கை, ஸ்போர்ட் ஏஎம்ஜி ஸ்டியரிங் வீல், கார்பன் ஃபைபர் இன்செர்டுகள் உள்ளிட்டவற்றை காரின் இன்டீரியருக்கு பிரீமியம் லுக்கை வழங்கும் விதமாக பென்ஸ் சேர்த்து இருக்கின்றது. மேலும், எம்பியூஎக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரைடிங் உயரத்தை மாற்றியமைக்கும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்ற ஏகப்பட்ட அம்சங்களையே இந்த காரில் பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இத்தகைய காரை வாங்கி இருப்பதானலே தற்போது சாய்னா நேவால் இந்திய வாகன உலகின் தலைப்பு செய்தியாக மாறி இருக்கின்றார். மேலும், இந்த காரை அவர் டெலிவரி பெறும் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, November 18, 2023, 11:34 [IST]
English summary
Saina nehwal buys mercedes benz amg gle luxury car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X