சர்ச்சை சாமியார் குர்மித் ராம் சிங் கார் கலெக்ஷன்... எல்லாமே வினோத டிசைன்தான்...!!

Posted By:

இன்றைய காலத்தில் சாமியார்களும், சர்ச்சைகளும் உடன் பிறவா சகோதரர்களாக மாறிவிட்டன. அந்த வரிசையில், சமீபத்திய சர்ச்சை சாமியார்களில் ஒருவரான தேரா சச்சா சவுதா ஆன்மிக- சமூக நல அமைப்பின் தலைவர் குர்மித் ராம் சிங் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.

சென்சார் போர்டு அமைப்பை கலகலக்க வைத்த இந்த சாமியார், சில ஆண்டுகளுக்கு முன் சேலம் வந்திருந்தபோது ஏரியாவையே அல்லோகலப்படுத்தி, தமிழர்களிடத்திலும் பிரபலமானார். இந்தநிலையில், ஆடம்பரத்துக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போன இவரது கார் கலெக்ஷனை பார்த்தால், வேறு எங்கும் இதுபோன்ற ஒரு கார் பிரியரை காண முடியாது என்று சொல்லிவிடலாம். நூறு கார்களுக்கு மேல் வைத்துக் கொண்டு அரபு ஷேக்குகளுடன் போட்டி போடும் குர்மித் ராம் சிங்கின் வேடிக்கை, வினோத கார்களை பார்க்க ஸ்லைடருக்கு செல்லலாம்.

ஒரு கோடி ஆதரவாளர்கள்

ஒரு கோடி ஆதரவாளர்கள்

ஹரியானா மாநிலம், சிர்சாவில் ஆன்மிக மையத்தை நடத்தி வரும் குர்மித் ராம் சிங், தனக்கு ஒரு கோடிக்கும் மேலான ஆதரவாளர்கள் இருப்பதாக கூறி வருகிறார். இவர் சீக்கிய மக்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் இருந்து வருகின்றன.

 சினிமா ஆசை

சினிமா ஆசை

அற்புதங்கள் நிகழ்த்தும் காட்சிகள் அடங்கிய ஒரு சினிமாவிலும் இவர் நடித்தார். அந்த சினிமாதான் MSG என்ற பெயரில் வந்தது. அந்த படத்தில் ஹார்லி டேவிட்சன் பைக்கை பயன்படுத்தி இருந்தார். மேலும், இந்த படத்தை வெளியிட்டால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கருதி, சென்சார் போர்டு அனுமதி தரவில்லை. ஆனால், மேல்முறையீடு செய்து அனுமதி பெற்றதால், சென்சார் போர்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

 சாமியார் ரதம்

சாமியார் ரதம்

இந்த டூப்ளிகேட் புகாட்டி வேரான்தான் சாமியாரின் தேர் என ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படுகிறது. ஹோண்டா அக்கார்டு காரை டூப்ளிகேட் பாடியுடன் கஸ்டைஸ் செய்துள்ளனர்.

Photo Credit: Motoroids

ஹீரோ கரிஷ்மா பைக்

ஹீரோ கரிஷ்மா பைக்

ஹீரோ ஹோண்டா கரீஷ்மா பைக்கை மூன்று சக்கர வாகனமாக மாற்றி, சாமியார் கராஜில் நிறுத்தப்பட்டிருக்கிறது. கிராமப்புற பகுதிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்ய செல்லும் தனது அமைப்பின் டாக்டர்களுக்கு இந்த வாகனத்தை பயன்படுத்த கொடுத்துள்ளார்.

இது சான்ட்ரோ

இது சான்ட்ரோ

எதுவும் சாதாரணமாக இருந்தால் பிடிக்காது. அதனால், ஹூண்டாய் சான்ட்ரோவை ஒரு வழி பண்ணி, இப்படி மாற்றியிருக்கின்றனர்.

மாருதி ஜிப்ஸி

மாருதி ஜிப்ஸி

இது மாருதி ஜிப்ஸியின் மாடிஃபிகேஷன் மாடல். என்னே ஒரு ரசனை?

வலம்

வலம்

தனது ஆன்மிக மையத்தை கஸ்டமைஸ் செய்யப்பட்ட காரில் வலம் வரும் சாமியார் குர்மித்.

ராயல் கான்செப்ட்

ராயல் கான்செப்ட்

சாமியாரின் வேண்டுகோளுக்கிணங்க தயார் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் ராயல் கான்செப்ட்

ராயல் கான்செப்ட்...

ராயல் கான்செப்ட்...

ராயல் கான்செப்ட்டின் பின்பக்க தோற்றம். எந்த ரகததிலும் இல்லாமல் புது ரகமாக இருக்க வேண்டும் என்பது சாமியாரின் சித்தம்!

இது யாரு பாத்த வேலை?

இது யாரு பாத்த வேலை?

சாமியாருக்கான பெரும்பாலான கார்களை டிசி டிசைன்ஸ் நிறுவனம்தான் செய்து கொடுத்துள்ளதாம்.

இனிமேல்...

இனிமேல்...

இனிமே இந்த சாமியார் பக்கமும், டிசி டிசைன் பக்கமும் தலை வச்சு படுக்கக்கூடாது...!!

Via- Cartoq 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Take a look at Saint Gurmeet Ram Singh crazy fleet of customised vehicle garage.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark