சொந்தமாக குட்டி விமானத்தை உருவாக்கிய நம்ம நாட்டு 'வில்லேஜ்' விஞ்ஞானி!

By Saravana

குட்டி விமானத்தை சொந்தமாக தயாரித்து சாதனை படைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஷாஜி தாமஸ் என்ற 'வில்லேஜ்' விஞ்ஞானி.

வாய் பேச முடியாத, காது கேளாத ஷாஜியின் சாதனையை பற்றி இப்போது ஊர், உலகமே புகழ்ந்து பாராட்டுகிறது. அவரது முயற்சி திருவினையாக்கிய கதையை பற்றிய சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாற்றுத் திறனாளி

மாற்றுத் திறனாளி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழாவை சேர்ந்தவர் ஷாஜி. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஷாஜி எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். அதேநேரத்தில், எஞ்சின்கள் மீது அதீத ஆர்வம் வைத்து, அதனை பிரித்து பழுது பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

மனைவியின் ஊக்கம்

மனைவியின் ஊக்கம்

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் மரியா என்பவரை ஷாஜி திருமணம் செய்து கொண்டார். அப்போது, ஷாஜியின் எஞ்சின் ஆர்வம் குறித்து தெரிந்து கொண்டு அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார். அதன் விளைவாக இப்போது குட்டி விமானத்தை சொந்தமாக தயாரித்துள்ளார்.

விமான தயாரிப்பு

விமான தயாரிப்பு

கிளைடர் ரக விமானத்தை தனது சொந்த முயற்சியிலேயே உருவாக்கியிருக்கிறார். புத்தகங்களை படித்தும், ஆர்வத்திலும் அந்த குட்டி விமானத்தை தயாரித்துள்ளார். தொடுபுழாவிலுள்ள கல்லூரி ஒன்றிலிருந்து உதிரிபாகங்களையும், பெங்களூரிலிருந்து விமானத்திற்கான எஞ்சினையும் வாங்கியிருக்கிறார்.

இடத்தை விற்ற ஷாஜி

இடத்தை விற்ற ஷாஜி

தனது சொந்த விமான கனவை நனவாக்குவதற்காக, தனது இடத்தை விற்று பாகங்களை வாங்கியிருக்கிறார். இந்த விமானத்தை 15 லட்சம் செலவில் உருவாக்கியிருக்கிறார். இந்த ரக விமானங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, ஷாஜியின் விமானம் 50 சதவீதம் விலை குறைவானதாக கூறப்படுகிறது.

 உழைப்பு, ஆர்வம்

உழைப்பு, ஆர்வம்

கடந்த 5 ஆண்டுகள் முயற்சியில் குட்டி விமானத்தை ஷாஜி உருவாக்கியிருக்கிறார். அவரது ஆர்வமும், உழைப்பும் மிக அதிகம் என்று அவரது மனைவி மரியா பெருமிதம் தெரிவிக்கிறார்.

பரிசோதனை

பரிசோதனை

திருநெல்வேலி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தில் வைத்து தனது குட்டி விமானத்தை பறக்கவிட்டு சோதனை நடத்தியிருக்கிறார் ஷாஜி. ஆனால், அவரிடம் விமானத்தை இயக்குவதற்கான உரிமமும், அவரது விமானத்திற்கு பறப்பதற்கான தகுதிச் சான்றும் இல்லாததால், 20 அடி உயரத்திற்கு மேல் பறக்க விட இயலவில்லையாம்.

அரசு உதவி

அரசு உதவி

இவ்வளவு திறமை இருந்தும் இதுவரை அரசு உதவி எதுவும் ஷாஜிக்கு கிடைக்கவில்லை. மேலும், மேக் இன் இந்தியா திட்டத்திற்காக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற உள்நாட்டு விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தினால், இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் உற்பத்தி திறனும் வெகுவாக மேம்படும்.

ஷாஜி ஏர்

ஷாஜி ஏர்

தனது விமானத்திற்கு ஷாஜி ஏர் என்று பெயரிட்டு அழைக்கிறார். ஷாஜியின் கனவுகள் நிறைவேற வாழ்த்துகள்!

சுவாரஸ்ய செய்திகள்

01. சொந்தமாக ஆகாய கப்பலை உருவாக்கிய சீன விவசாயி...

02. வைகைப் புயல் வடிவேலுவின் முதல் கார்...

03. உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்...

Images: saji-xair

More from DriveSpark

Article Published On: Friday, November 6, 2015, 16:13 [IST]
English summary
To locals in a rural area of the Thodupuzha district in Kerala, Saji Thomas' desire to build a lightweight aircraft all by himself had seemed like a wild one, especially for a school dropout.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+