சாதாரண எலெக்ட்ரிக் காரை வாங்கியது இவ்ளோ பெரிய ஆளா! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் இப்பவே வாங்கீருவீங்க!
மலையாள திரையுலகின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் சஜீத் யாஹியா (Sajid Yahiya). நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் இசை அமைப்பாளர் என இவருக்கு பல்வேறு முகங்கள் உண்டு. இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகும்.
இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று. இதன் விலை (Price) மிகவும் குறைவு. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 7.98 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.98 லட்ச ரூபாய் மட்டுமே. நாங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இவ்வளவு விலை குறைவான ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்கியிருப்பது, சஜீத் யாஹியாவின் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது, 17.3 kWh பேட்டரி ஆகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

விலை மிகவும் குறைவு என்றாலும் கூட, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், 10.25 இன்ச் அளவுடைய 2 திரைகள் முக்கியமானது ஆகும். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும்.
இதுதவிர வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 55க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள் போன்ற அம்சங்களையும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. அத்துடன் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சமில்லை.
முன் பகுதியில் 2 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவற்றை இந்த எலெக்ட்ரிக் காரின் முக்கியமான பாதுகாப்பு வசதிகளாக குறிப்பிடலாம். இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு வருகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே இஸட்எஸ் இவி (MG ZS EV) என்ற எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. இதை தொடர்ந்து அந்நிறுவனம் களமிறக்கியுள்ள 2வது எலெக்ட்ரிக் கார்தான், எம்ஜி கோமெட் இவி. இதன் விலை மிகவும் குறைவு என்பதுதான் இதன் மிகப்பெரிய பலமே.
ஏனெனில் எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் கார் சற்று விலை உயர்ந்தது ஆகும். டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே மிகவும் பிரபலமாகதான் இருந்து வருகிறது. தற்போது பிரபலங்களும் வாங்க தொடங்கியுள்ளதால், வரும் மாதங்களில் இந்திய மக்கள் மத்தியில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் மேலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications