நடிகர் பிருத்விராஜ் வந்த கருப்பு காரின் விலை இத்தன கோடியா! சலார் பட வசூல் மாதிரியே பிரம்மாண்டமா இருக்கு!
தமிழ் (Tamil) மற்றும் மலையாளம் (Malayalam) உள்ளிட்ட திரையுலகங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் (Actor) ஒருவர் பிருத்விராஜ் (Prithviraj). இயக்குனர் (Director) மற்றும் தயாரிப்பாளர் (Producer) என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சலார் (Salaar).
பிரபாஷ் (Prabhas) உடன் இணைந்து பிருத்விராஜ் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். கேஜிஎஃப் (KGF) திரைப்படம் மூலம் பிரபலமான பிரஷாந்த் நீல் (Prashanth Neel), சலார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சலார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஸனை (Box Office Collection) வாரி குவித்து வருகிறது.

சலார் திரைப்படம் வசூலை குவித்து வரும் நிலையில், பிருத்விராஜின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series) காரில் வந்து பிருத்விராஜ் இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
பிருத்விராஜ் பயன்படுத்தியது பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் 760 Li xDrive வேரியண்ட் ஆகும். இதன் விலை (Price) 2.46 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 6,592 சிசி ட்வின்-டர்போசார்ஜ்டு வி12 பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆகும். அதிகபட்சமாக 600 பிஹெச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் ஆகிய வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவை மட்டும் அல்லாது, இருக்கைகளில் மசாஜ் வசதி மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த கார் பெற்றுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் 760 Li xDrive வேரியண்ட் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மலையாள திரையுலகை பொறுத்தவரையில், துல்கர் சல்மான் (Dulquer Salmaan), நிவின் பாலி (Nivin Pauly) மற்றும் டொவினோ தாமஸ் (Tovino Thomas) ஆகியோர், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








