என்ன பிராண்ட் சரக்கா இருக்கும்? போதையில இவர் பண்ணத கேட்டா விழுந்து விழுந்து சிரிப்பீங்க!
சேலத்தில் குடிபோதையில் கார் ஓட்டி வந்த நபர் ஒரு கட்டத்தில் போதையில் தன்னையே மறந்து நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அப்படியே தூங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தூங்கிய நபரை எப்படி எழுப்பினார்கள் அங்கு எப்படி போக்குவரத்து நெருக்கடி சரி செய்யப்பட்டது என்ற விவரங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்திய மோட்டார் வாகன சட்டப்படி மது போதையில் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் தான் என்றாலும் பலர் இன்றளவும் குடிபோதையில் வாகனம் ஓட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்காக போலீஸர் ஆங்காங்கே வாகன தணிக்கை செய்து குடிபோதையில் வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் மக்கள் மத்தியில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் பழக்கம் குறையவே இல்லை.

இப்படியாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் விபத்தில் சிக்க நேரிடும் என்பதால் குடிபோதையில் வாகனம் ஓட்ட தடை விதித்து மோட்டார் வாகன சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதையும் மதிக்காமல் பலர் வாகனம் ஓட்டி வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒரு போதை ஆசாமி போதையில் கார் ஓட்டி வந்த போது தூங்கிய சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம் ஏவிஆர் சர்க்கிள் பகுதியில் நேற்று சிவப்பு நிற ஃபோக்ஸ்வேகன் போலோ கார் வந்து கொண்டிருந்தது கார் சாலையில் மெதுவாக தள்ளாடியபடி வரும்போது காரின் ஓட்டுநர் நிலை தடுமாறிய நிலையில் இருப்பது சாலை சென்ற மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரிந்தது. இதனால் விபத்தை தவிர்க்கும் விதமாக யாரும் அவரை தொந்தரவு செய்யாமல் பின்னாலே பத்திரமாக வந்துள்ளனர்.

அப்பொழுது யாரும் எதிர்பாராத வகையில் நடுரோட்டில் இந்த கார் நின்றது இதையடுத்து மற்ற வாகனங்களும் அதன் பின்னர் அணிவகுத்து நின்றது. சரி காரில் ஏதாவது பிரச்சனை இருக்கும் ஒரு சில நிமிடங்களில் கார் அங்கிருந்து நகர்ந்து விடும் என பின்னால் வந்த வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் கார் நகராமல் நடுரோட்டிலேயே இருந்துள்ளது.
இதனால் என்ன நடக்கிறது என தெரியாமல் தவித்த வாகன ஓட்டிகள் அந்த காரில் இருந்தவரை பார்க்க இறங்கி சென்று காரின் முன்னே சென்றனர். அப்பொழுது காரில் ஓட்டுனர் சீட்டில் இருந்தவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரை பலமுறை தட்டி எழுப்ப பார்த்தோம் யாராலும் எழுப்ப முடியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடியது போக்குவரத்து நெருக்கடியும் நீண்ட நேரமாக மிக நீண்ட வரிசையில் நீண்டு கொண்டே இருந்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் வேறு வழியில்லாமல் அந்த காரின் கண்ணாடியை உடைத்து போதையில் தூங்கிக் கொண்டிருந்த ஆசாமியை எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அப்பொழுதும் அவர் கடும் போதையை இருந்ததால் அவரால் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. இதையடுத்து போதையில் இருந்த ஆசாமியின் நண்பர் ஒருவர் அப்பகுதியில் வந்துள்ளார் தன் நண்பர் குடிபோதையில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவர் அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் போதையில் இருந்த ஆசாமியை டிரைவர் சீட்டில் இருந்து பயணிகள் சீட்டுக்கு மாற்றி விட்டு இவர் டிரைவர் சீட்டில் ஏறி காரை ஓட்டி சென்றார். அதன் பின்பு தான் அப்பகுதியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையே சிறிது நேரம் பரபரப்புக்கு உள்ளானது. அப்பகுதியில் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இவ்வளவு அலம்பல் செய்தும் போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் உள்ள போக்குவரத்தை சரி செய்யவே முதலில் கவனமாக இருந்தனர். இதனால் போதையில் கார் ஓட்டி வந்து நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு தூங்கிய ஆசாமி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் எப்படியாவது இடத்தை காலி செய்தால் சரி என என்ற மனநிலையில் அவரை அனுப்பி வைத்தனர். இதற்குப் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமான விஷயமாகும் ஆனால் பலர் இதை மதிக்காமல் தொடர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டி வருகின்றனர். இதனால் சாலை விபத்து அதிகமாக ஏற்படுகிறது சேலத்தில் நடந்த இந்த சம்பவம் அவர் தூங்கி விட்டதால் எந்த விபத்தும் ஏற்படவில்லை ஒருவேளை அவர் இந்த போதையில் வாகனம் ஓட்டி இருந்தால் அவர் வாகனம் விபத்தில் சிக்கி இவர் உயிரிழந்த கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் மது போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications








