ஆட்டோவில் வந்த கூல் சுரேஷ்.. போகும்போது காரை எடுத்து போக சொன்ன பிரபலம்! கொடுத்தது சிம்பு இல்ல..

நடிகர் சிம்புவின் தீவிர ஃபோனாக அறியப்படும் நபர் கூல் சுரேஷ். இந்த நடிகருக்கே பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி அவரை ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். கூல் சுரேஷுக்கு காரை பரிசாக அளித்த அந்த பிரியாணி கடை பிரபலம் யார்? அவர் என்ன மாதிரியான காரை பரிசாக வழங்கி இருக்கின்றார்? அதன் விலை மற்றும் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையுமே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சேலம் ஆர்ஆர் பிரியாணி கடை உரிமையாளர் ஆர்ஆர் தமிழ்செல்வன், இவரே கூல் சுரேஷ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியவர். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza) காரையே அவர் பரிசாக வழங்கி உள்ளார். தற்போது இந்த பெயரில் அக்கார் மாடல் விற்பனைக்குக் கிடைப்பது இல்லை. பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) எனும் பெயரிலேயே அது விற்கப்படுகின்றது.

Salem rr biryani

பல்வேறு புதுப்பித்தலுக்கு உட்படுத்தப்பட்டு இந்த கார் மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னிடம் இருந்த விட்டாரா பிரெஸ்ஸா காரை கூல் சுரேஷுக்கு சேலம் ஆர்ஆர் பிரியாணி கடை உரிமையாளர் வழங்கி இருக்கின்றார். சமீபத்தில் கூல் சுரேஷ்-ம், சேலம் ஆர்ஆர் பிரியாணி உணவக உரிமையாளர் ஆர்ஆர் தமிழ்செல்வனும் சந்திக்க நேரிட்டிருக்கின்றது.

அப்போது கூல் சுரேஷ் ஆட்டோவில் சென்றதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்து கேட்டறிந்துக் கொண்ட ஆர்ஆர் தமிழ்செல்வன் இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு மீண்டும் வரும்படி கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் சந்தைச் சந்திக்க வரும்படி கூல் சுரேஷை ஆர்ஆர் தமிழ்செல்வன் அழைத்திருக்கின்றார்.

Car gift

அப்போதே தன் வீட்டில் அலங்காரித்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மாருதி பிரெஸ்ஸா காரை அவர் வழங்கி இருக்கின்றார். ஃபேமஸான ஒரு பிரபலம் கார் இல்லாமல் இருப்பது அழகல்ல என கூறி இந்த காரை அவர் வழங்கி இருக்கின்றார். கூல் சுரேஷின் கார் கடந்த வெள்ளத்தில் சிக்கி மீட்க முடியாத அளவிற்கு பழுதாகி இருக்கின்றது.

எனவே அவர் கார் இல்லாமலேயே வலம் வந்திருக்கின்றார். குறிப்பாக, தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு அவர் ஆட்டோவிலேயே சென்று வந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே ஆர்ஆர் தமிழ்செல்வன் கூல் சுரேஷுக்கு இந்தியாவில் தற்போது விற்பனையிலேயே இல்லாத காரை பரிசாக வழங்கி அசத்தி இருக்கின்றார். இதற்கு திரையுலகினர் மற்றும் கூல் சுரேஷ் ரசிகர்கள் சிலர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, ஆர்ஆர் தமிழ்செல்வனை பலர் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். விட்டாரா பிரெஸ்ஸா இப்போது விற்பனையில் இல்லை என்றாலும், அதை விற்பனையில் இருந்த காலகட்டத்தில் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்தது. ஏன் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி கார் என்கிற புகழ்கூட அந்த கார் மாடலுக்கு உண்டு.

ஒரே மாதத்தில் பத்தாயிரம் யூனிட்டுகள் கூட இந்த கார் மாடல் விற்பனையாகி இருக்கின்றது. ஏன் ஒரு சில மாதங்களில் 11-12 ஆயிரம் யூனிட்டுகளைகூட இந்த கார் மாடல் கடந்ததாகக் கூறப்படுகின்றது. இத்தகைய புகழ்பெற்ற கார் மாடலே விட்டாரா பிரெஸ்ஸா ஆகும். இது இல்லாத இடத்தையே தற்போது பிரெஸ்ஸா பூர்த்தி செய்துக் கொண்டிருக்கின்றது.

பெயர் மாற்றம் மற்றும் லேசான அலங்காரம் மட்டுமே செய்யப்பட்டு இந்த கார் மாடல் விற்பனைக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுவும் தற்போது இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் சிஎன்ஜி ஆப்ஷனே அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அது 25.51 கிமீட்டர் வரை மைலேஜை வழங்கிக் கொண்டிருக்கின்றது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ரூ. 8.34 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

அடுத்த தலைமுறை கே-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி எஞ்சினே பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதே எஞ்சினே சிஎன்ஜி வெர்ஷனிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயங்கும் வகையில் ட்யூன்-அப் செய்யப்பட்டு இருக்கும்.

இதன் பெட்ரோல் ஆப்ஷன் 100.6 பிஎஸ் பவரையும், 136 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அதேவேளையில், இதன் சிஎன்ஜி தேர்வு அதிகபட்சமாக 87.8 பிஎஸ் மற்றும் 121.2 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் சிறப்பம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

அந்தவகையில், ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழைதல் மற்றும் தானாகவே மடக்கிக் கொள்ளும் ஓஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்களும் பிரெஸ்ஸாவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் பிரெஸ்ஸாவும் ஒன்றாகும். இதன் முந்தைய வெர்ஷனையே சேலம் ஆர்ஆர் பிரியாணி கடை உரிமையாளர் ஆர்ஆர் தமிழ்செல்வன், கூல் சுரேஷுக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இதன் இப்போதைய மதிப்பு நான்கு லட்சத்திற்கும் அதிகம் ஆகும் (யூஸ்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கம் விலை பொருத்தே இந்த விலை விபரம் வழங்கப்பட்டுள்ளது).

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 16:20 [IST]
English summary
Salem rr biryani owner rr tamilselvan gifts car to actor cool suresh
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+